Asiriyar K.Veeramani Profile picture
Official account of DK President Asiriyar K.Veeramani

Jul 19, 2018, 6 tweets

அய்யப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சென்று வழிபட எந்தவிதத் தடையும் இல்லை!
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது - கேரள முற்போக்கு (சி.பி.எம்) அரசு இதனை செயல்படுத்தட்டும்!

#Sabarimala #சபரிமலையில்_பெண்கள்

உச்சநீதிமன்றத்தில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அவர்கள் தலைமையில் கூடிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்டப் பிரிவு ஆய்வு அமர்வு (Constitution Bench) நேற்று வரலாற்றுச் சிறப்புமிக்க மிகுந்த - குறிப்பிட்டு போற்றத்தகுந்த ( Landmark Judgement ) தீர்ப்பு ஒன்றை தந்துள்ளது.

#Sabarimala

சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்குள் வழிபடுவதற்காக, 10 முதல் 50 வயது பெண்களுக்கு உரிமை இல்லை; அவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கூறியதோடு, தேவசம் போர்டும், கோவில் நிர்வாகக் குழுவினரும், அர்ச்சகர் கூட்டமான நம்பூதிரிகளும் வாதாடினார்கள்!

#Sabarimala #சபரிமலை

இவ்வழக்கில் தற்போதுள்ள மாண்புமிகு பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி முற்போக்கு அரசு - ஆதிதிராவிடர்களை அர்ச்சகர்களாக்கி வரலாறு படைத்த அமைதிப் புரட்சியைப் போலவே...

10 வயது முதல் 50 வயதுள்ள பெண்களுக்கு அய்யப்பன் கோவிலுக்குள் சென்று வழிபடுவதைத் தடுப்பது ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல; இத்தகைய பாலின வேறுபாடுகள் சட்ட விரோதம்; நியாய விரோதம் என்ற நிலையை துணிச்சலுடன் உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு எடுத்துக் கூறியது மிகவும் பாராட்டி வரவேற்கத்தகுந்தது.

நீதிபதிகள் நியாயமான - அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளைக் காப்பாற்றி பின்பற்றிடும் வகையில் தங்களது தீர்ப்பை அளிப்பதற்கு கேரள அரசின் கருத்து உதவி புரிந்துள்ளது!

#Sabarimala

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling