#போலீஸ்_மந்திரியை_விரட்டிய_போலீஸ்காரர்.
பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பதவியேற்று தனது அமைச்சரவையில் 7 பேரை மட்டுமே சேர்த்து கொண்டார். அவர்களில் ஒருவர் #கக்கன்...
இவருக்கு ஒதுக்கப்பட்ட துறைகள்
#போலீஸ்
#பொதுப்பணி
#விவசாயம்
#சிறுபாசனம்
#கால்நடை_பராமரிப்பு
#உள்துறை
#சிறைத்துறை +
#நிதி
#கல்வி
#தொழிலாளர்_நலம்
#மற்றும்
#மதுவிலக்கு.
கண்ணை கட்டுகிறதா. அது தான் உண்மை
இத்தனை துறைகளின் அமைச்சராக இருந்தவர்.. பத்து வருடங்கள் அமைச்சராக இருக்கும் போது வெளியூர் சென்றால் தன் துணிகளை தானே துவைத்து கொள்வார். +
ஒரு முறை அவர் திருச்சி மாவட்டத்தில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு இரவு ரயிலில் சென்னை செல்லவேண்டும். நிகழ்ச்சிகளை முடித்து திருச்சி ஜங்ஷனுக்கு வந்த போது அவர் செல்ல வேண்டிய ரயில் கிளம்பி விட்டது. அடுத்த ரயில் அதிகாலையில்.
அமைச்சராக இருந்தாலும் யாரையும் உதவிக்கு அழைக்கவில்லை.+
ரயில்வே அதிகாரிகளையும் அணுகவில்லை. பேசாமல் ஒரு #துண்டை விரித்து பிளாட்பார பெஞ்சில் படுத்துவிட்டார்.
நடு இரவில் ரோந்து வந்த ரயில்வே போலிஸார் யாரென்று தெரியாமல் லட்டியாய் இரண்டு தட்டு தட்டி எழுப்பினர்.
#யார்_நீங்கள்
#எழுந்து_செல்லுங்கள்
#இங்கெல்லாம்_படுக்கக்_கூடாது
என்றனர். +
அதற்கு அமைதியாக பதிலளித்தார்.
#அய்யா_என்_பெயர்_கக்கன்
#நான்_போலீஸ் #மந்திரியாக_இருக்கேன்
#அடுத்த_ரயில்_வந்தவுடன்_சென்றுவிடுகிறேன் என்றார்
அதிர்ந்தனர் போலீஸ்காரர்கள்
#அய்யா_மன்னித்துவிடுங்கள்_நீங்கள்_முதல்_வகுப்பு_ஓய்வறையில்_போய்_படுங்கள். என்றனர்
வேண்டாம். +
இந்த வசதியே எனக்கு போதும் என்று அந்த பெஞ்சிலேயே படுத்து உறங்கிவிட்டார். அவர் ரயில் ஏறும் வரை அங்கேயே போலீசார் நின்றிருந்து பத்திரமாக பார்த்துக் கொண்டனர்.
என்ன கண்ணை கட்டுதா..
இப்படியும் ஒரு தமிழக மந்திரியா என்று.
அது ஒரு பொற்காலம் ங்க
#எளிமையின்_உயரத்திற்கு_எடுத்துகாட்டு
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
