கொரோனா இன்று கொல்லும்.
காலநிலை மாற்றம் நின்று கொல்லும். :-
flattening the curve - கொரோனா தொற்று பற்றிய அச்சம் நம்மை தொற்றத் தொடங்கியதிலிருந்து நாம் அடிக்கடி கேள்விப்படும் ஒரு தொடர். அதாவது வளைவை நேர்படுத்துவது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று எண்ணிக்கையை குறைக்க வேண்டிய
அவசியத்தை வலியுறுத்தும் வார்த்தைகள் அவை. ஆனால் நாம் அவசியம் நேர்ப்படுத்த வேண்டிய வேறு சில வளைவுகளும் உண்டு. குறிப்பாக கால நிலை மாற்ற வளைவு. இதுகுறித்த ஆழமான கட்டுரை ஒன்று நேற்றைய இந்து நாளிதழில் வெளியாகியிருக்கிறது.அதிலிருந்து சில விசயங்களை மட்டும் கோடிட்டு காட்ட விரும்புகிறேன்.
2003ல் ஐரோப்பாவில் ஏற்பட்ட வெப்பக் காற்று 70,000 பேரை கொன்றது. 2015 முதல் 2019 வரையான வருடங்கள் அதிகாரப்பூர்வமாக மிக வெப்பமான வருடங்கள். கொரோனாவோடு நாம் போராடிக் கொண்டிருக்கும் இதே காலகட்டத்தில் மார்ச் 2020 அதிகாரப்பூர்வமாக இரண்டாவதாக மிக வெப்பமான மார்ச் மாதம்.கொரோனாவுக்கு
பிறகு காலநிலை மாற்றத்தின் தாக்கம் சில அம்சங்களில் தணிந்திருப்பது உண்மையாக இருந்தாலும் அதன் நீடித்த தன்மை பற்றி சொல்ல முடியாது. முக்கியமான காரணம் கொரோனாவால் ஏற்படக் கூடிய பொருளாதார பாதிப்பு பற்றி நமக்கு இன்னும் முழுமையாக தெரியாது. (ஆம் இரண்டுக்கும் தொடர்பு இருக்கும்) காலநிலை
மாற்றத்தைப் பொருத்தவரையில் கூட இது செய் அல்லது செத்து மடி என்கிற நிலைதான். காலநிலை மாற்றத்தின் மிக மோசமான விளைவுகளிலிருந்து நாம் உண்மையாகவே தப்பிக்க வேண்டுமென்றால் அதற்கான வளைவை உடனடியாக நேர்ப்படுத்த வேண்டும்.பெங்களூருவின் இந்தியன் இன்ச்ஸ்டிட்யூட் ஆப் சைன்ச்ஸ்சில் பேராசிரியராக
வேலை பார்க்கும் ஆர் சுகுமார் எழுதியிருக்கும் இந்த கட்டுரை எளிமையாக சொல்லும் விசயம் இதுதான்.
கொரோனா இன்று கொல்லும்.
காலநிலை மாற்றம் நின்று கொல்லும்.
#climateemergency #coronapandemic #covid19 #xtremeevents
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
