Sakthivel@NTK Profile picture
Rally Rider Racer - தீவிர தமிழ் தேசியவாதி. நாம் தமிழர் கட்சி ஆஸ்திரேலியா

Aug 5, 2020, 9 tweets

லெபனான் தலைநகர் பெய்ரூட்-ல் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மத்திய-மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!
#சீமான்_வலியுறுத்தல்

நேற்று (04-08-2020) இரவு மத்திய கிழக்கு நாடான லெபனானின் தலைநகர் பெய்ரூட் துறைமுகம் அருகே இருந்த இரசாயணக் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட மிகப்பெரிய -1/8

இரண்டு வெடிப்புகள் உலகத்தையே உலுக்கி உள்ளது. 25 கிமீ சுற்றளவு வரை அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விபத்தின் சத்தம் 250 கிமீ வரை உணரக்கூடியதாய் இருந்திருக்கிறது. உள்ளத்தை நடுநடுங்க செய்யும் வெடிப்புக் காட்சிகள் பார்த்த அதிர்ச்சியிலிருந்து மனம் மீளவில்லை.

விபத்து ஏற்பட்ட - 2/8

இரசாயணக் கிடங்கில் ஏறத்தாழ 3000 டன் நிறையுள்ள அதிக ஆபத்தை விளைவிக்கக் கூடிய அம்மோனியம் நைட்ரேட் இரசாயணத்தைப் பாதுகாப்பற்ற முறையில், பராமரிப்பு இன்றி 6 வருடமாக வைத்து இருந்ததுதான் விபத்திற்கான காரணம் என்கிறார்கள். இந்த மோசமான விபத்தில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் - 3/8

பலியாகிவிட்டதாகவும் 4 ஆயிரம் பேர்வரை காயம் அடைந்துள்ளதாகவும் வெளியாகும் செய்திகள் மனதை கணக்கச்செய்கிறது.

விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, காயமடைந்துள்ளவர்கள் விரைந்து குணமாக வேண்டும் என்று உளமாற விழைகிறேன். கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள இந்த -4/8

இக்கட்டான சூழ்நிலையிலிருந்து லெபனான் விரைந்து மீண்டு வரவேண்டும்.

மேலும் தமிழகத்திலிருந்து பணிபுரிவதற்காக லெபனான் சென்ற நூற்றுக்கணக்கான தமிழர்களின் நிலை என்னவானதென்று இதுவரை தெரியவில்லை. குறிப்பாக வெடிவிபத்து நிகழ்ந்த தலைநகர் பெய்ரூட்-ல் வசித்துவந்த தமிழர்களைத் - 5/8

தொடர்புகொள்ளவே முடியவில்லை என்று அவர்களது குடும்பத்தினர் நேற்றிரவு முதல் பெரும் பயத்துடனும், பதற்றத்துடனும் உள்ளனர்.

எனவே தமிழக அரசு, மத்திய வெளியுறவுத்துறை மூலம் லெபனானில் உள்ள இந்தியத் தூதகரத்தை உடனடியாகத் தொடர்புகொண்டு அங்குச் சிக்கியுள்ள தமிழர்களை விரைந்து மீட்க வேண்டும்-6/8

மேலும் அவர்களது நிலை தற்போது எவ்வாறு உள்ளதென்பதனை கண்டறிந்து அது குறித்தான தகவல்களை அவர்கள் குடும்பத்தினருக்கு தெரிவிக்கவும், குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்புகொள்ள வழிவகைச் செய்துதரவும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்திக் - 7/8

“Un roll” @threadreaderapp

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling