நிவா 🦋 Profile picture
அன்பும் அறமும், தமிழும் சுவையும், எங்கும் எப்பொழுதும்..! ....but, Master of None

Aug 15, 2020, 24 tweets

#மிட்டாய்_தேசம் 😋
இன்னைக்கு ஆபீஸ்ல கொடி 🇮🇳ஏத்தி முடிச்சதும்,எல்லாருக்கும் 2-ரூபா சாக்லேட் குடுத்தாங்க.!🍬
அதபார்க்கும் போது நா அப்படியே என்னுடைய சின்னவயசு நியாபகத்துக்கு போய்ட்டேன்.!

#ஒருசின்ன_FlashBack 😂
என்னோட சின்னவயசுல எங்க தெருவுல ஒரு தாத்தாவ கூப்பிட்டு கொடி ஏத்துவாங்க😊

கொடி ஏத்தும் போது பக்கத்துல உள்ள சித்தி விநாயகர் கோவில் Speaker Set ல,
"தாய் மண்ணே வணக்கம்" ன்னு ரகுமான் ஒலிப்பாரு. அவர்
"மா துஜே சலாம்" ன்னு பாடி முடிச்சதும் தான் நிறுத்துவாங்க..! 😂
இந்த Gap ல Sweet Distribution நடக்கும். ஆமாங்க #ஆரஞ்சு_வில்லை தான் அந்த Sweets..!😋

அந்த வண்ணமையமான மிட்டாய்களை பாக்கெட்டோட அவரு டிஸ்ட்ரிப்யூட் பண்றதே நல்லா இருக்கும். எல்லாருக்கும் ரெண்டு தான்..!😊
இப்படியாக சுதந்திர தினம் இனிமையாக நிறைவடையும்..!😂

அப்பெல்லாம் நாலணா, எட்டணா கிடைச்சா போதும் பக்கத்துல உள்ள கடையில போயீ, மிட்டாய் வாங்கி அதை..

பாக்கெட்டுகுள்ள வச்சுகிட்டு, அப்பப்போ ரீசார்ஜ் பண்ற மாதிரி அத ஒன்னொன்னா எடுத்து சாப்பிட்டுக்கிட்டே, கூட விளையாடுகிற நண்பர்களுடனும் நாம் பகிர்ந்து சாப்பிடறதே செம்ம Feel..!

#90_Kids , #80_Kids மற்றும் அதற்கு முந்தைய தலைமுறையும் கொண்டாடிய அந்த மிட்டாய்களை

இந்த காலத்து தம்பி, தங்கைகளிடம் கொண்டு சேர்க்கும் ஒரு சின்ன நினைவூட்டல்.
#Candy_Crush Game ல நாம பார்க்க முடியாத மிட்டாய்கள் தான் இவை.
இவற்றை பற்றிய ஒரு இனிமையான நம்ம இளமைக் காலத்தின் Recap தான் இந்த #மிட்டாய்_தேசம் 😋
#Thread #இழை..!😂
வாங்க ஜாலியா பயணிக்கலாம்..!🧞

#ஆரஞ்சு_மிட்டாய்
மிட்டாய்களின் அரசன். இன்றைய ஆச்சி தாத்தக்களுக்கு புடிச்ச மிட்டாய். இது பார்க்க ஆரஞ்சு சுளை மாதிரி இருக்கறதனால இந்த பேரு. ஆரஞ்சுவில்லை ன்னும் சொல்லுவாங்க. இதோட ஆழகே இதோட கண்ணை கவரும் மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு நிறங்கள் தான். ஒன்னு எடுத்து வாய்ல போட்டா...,

கரைய 5 நிமிசமாகும். நல்லா தித்திப்பான சுவை கொண்டது..!😊 அப்போதெல்லாம் சுதந்திர தினத்தன்னைக்கு பள்ளிக்கூடத்தில,
ஊருல, தெருவுல எல்லாம் கொடி ஏத்தி முடிச்சதும் ஆரஞ்சு மிட்டாய் தான் தருவாங்க..!😊

#சூடம்_மிட்டாய்
இந்த Halls, Polo இதெல்லாம் வர்றதுக்கு முன்னாடியே இது பட்டி தொட்டி எல்லாம் பிரபலம்.
இத சாப்பிட்டு "ஹாஆஆ" ன்னு வாய் வழியாக காத்த உள்ள இழுத்தா தொண்ட குளுமையா இருக்கும். தண்ணி குடிச்சாலும் தொண்டையில அந்த Chillness அ உணரமுடியும்..!😂 இதோட வாசனையே நல்லா இருக்கும்..!

#தேன்_மிட்டாய்
ஆரஞ்சு மிட்டாய் அரசன் எனில் இது மிட்டாய் உலகின் அரசி. (இவளின் நிறம் சிகப்பு)பார்க்கும் போதே நாவில் உமிழ்நீரை ஊற்றெடுக்கு செய்யும் மந்திர சக்தி இதனிடத்தில் உண்டு 😍 (அரசி ஆயிற்றே). மெல்லும் போது அதிலிருந்து வரும் இனிப்பு பாகு நாவில் படும் சுவையே தனி அலாதியானது..!😍

#புளிப்பு_மிட்டாய்
Poppinsக்கு எல்லாம் இவுக தான் Role Model. முன்னெல்லாம் இந்த 4 Way போடறதுக்கு முன்னாடி, இந்த பஸ்ல வெளியூர் போறவங்க புள்ளைங்களுக்கு தல சுத்தல், வாந்தி,மயக்கம் வர்ற மாதிரி இருந்தா இதுதான் குடுப்பாங்க.! இத வாயில போட்டு கண்ணமூடி சீட்ல சாய்ஞ்சா போதும், சரியாகிடும்.🤗

#பாக்கு_மிட்டாய்
இந்த மிட்டாய் நல்ல அடர் சிவப்பு நிறத்துல இருக்கும்.பாக்கு வாசனை நல்லாவே வரும்.
ரொம்ப இனிப்பாவும் இருக்காது, அதுக்குன்னு முழுசா பாக்கு Taste லயும் இருக்காது.இதோட ருசி சாப்பிட்டா நாக்குல ஒட்டிக்கும். இத தண்ணி பாட்டில்ல பொட்டு தண்ணிய சிவப்பு கலரா மாத்தி குடிப்போம்😂

#ஜவ்வு_மிட்டாய்
இத விற்கிறவங்க கையில வச்சு சுத்துற அந்த ராட்டு சத்தம் ஒரு Unique ஆன Ring Tone. கேட்கவே வித்தியாசமா இருக்கும்.
அந்த Rose மற்றும் Pale White நிற ஜவ்வுமிட்டாய்ல அவுங்க செஞ்சு தர்ற வாட்ச், மோதிரம், பொம்மை, எல்லாமே அழகாகவும் Taste ஆகவும் இருக்கும். அந்த Rose கலர்

நாக்குல ரொம்ப நேரம் நிக்கும். கண்ணாடில நாக்கு நிறம் மாறினத அடிக்கடி பார்த்து குதுகலித்தது எல்லாம் ஒரு ஜாலி Feel.😂 அப்போல்லாம் எல்லா பள்ளிகள் முன்னாடியும் இதை வாங்கி சாப்பிடவே ஒரு வாண்டுகள் பட்டாளம் உண்டு. இப்போல்லாம் திருவிழாக்களில் கூட இதை ரொம்ப அரிதா தான் பார்க்கமுடியுது.!🙄

#பஞ்சு_மிட்டாய்
விளையாடிட்டு இருக்கும் போது 'பாம்ப்பாம்' சத்தத்தோட பஞ்சுமிட்டாய் வண்டி வந்தாபோதும்,ஒரே கொண்டாட்டம் தான்.
வீட்லபோய் ஒரு எட்டணா வாங்கியாந்து அதவாங்கி திங்கற Moment இருக்கே,அதெல்லாம்
"எகிறி குதித்தேன் வானம் இடித்தது"
ரக இளமைதுள்ளல்😂
ஆன வாயில வச்சுஉடனே கரைஞ்சிடும்.😕

இது வரைக்கும் பார்த்த மிட்டாய் எல்லாம் 90 களில் ஒரு பீஸ் 5 பைசா தான். இனிமே பாக்கறது எல்லாம் நாலணா..!

#தேங்காய்_மிட்டாய்
தேங்காய் துருவல்ல சக்கரை பாகு சேர்த்து கனசதுர (cube) அச்சு மாதிரி பிடிச்சு வச்சிருப்பாங்க..! Meals சாப்பிட்ட பிறகு ஒன்னு எடுத்து சாப்பிட்டா நிறைவான அனுபவம்😂

#இஞ்சி_மிட்டாய்
அஜீரணம், வயிறு உப்பிசம், புளிச்ச ஏப்பம் இந்த மாதிரி ஏதாவது ஒரு Feelings சாப்பிட உடனே வந்தா, வீட்ல உள்ள பெரியவங்களோட Recommendation இஞ்சிமிட்டாய் தான்.! Busல,Trainல போகும் போது இதவாங்கி சாப்பிடாதவங்க இருக்க மாட்டாங்க(இதை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்க கூடாது)🙄

#கடலை_மிட்டாய்
வேர்க்கடலை உடைச்சு அதுல கருப்பட்டி பாகு சேர்த்து செய்யும் பாரம்பரியமான இனிப்பு தான் கடலைமிட்டாய்.
வேர்க்கடலை பித்தம்,🙄
கருப்பட்டி பித்தத்தை முறிக்கும்🤔 அதனாலதான் இந்த ரெண்டையும் சேர்த்து செய்றாங்க..! ஆனா இப்ப கருப்பட்டி விலை அதிகம்ங்கறதுனால அதுக்கு

பதிலாக வெல்லம் சேர்த்து தான் செய்றாங்க. இது தயாரிக்கும்போது வரக்கூடிய சின்ன சின்ன வேர்க்கடலை துகள்களையும் இதே மாதிரி பாகு சேர்த்து ஒரு மிட்டாய் செய்றாங்க அதுக்குபேரு
#மணிலா_மிட்டாய்
கடலைமிட்டாய்க்கு பேமஸ் நம்ம #கோவில்பட்டி தான்.மத்த ஊரு தயாரிப்புகளை விட நல்ல சுவையாக இருக்கும்.😋

#எள்ளு_மிட்டாய்
இதுவும் கடலை மிட்டாய் மாதிரி Same Process தான்..!
என்ன இதுல,
🔥கறுப்பு எள்ளு
🔥வெள்ளை எள்ளு
ன்னு இரண்டு விதமாக பண்றாங்க..!
எள்ளு உடலுக்கு குளிர்ச்சி, ரொம்ப நல்லதும் கூட..! 😊
இது குழந்தைகள், பருவமடைந்த பெண்களுக்கு உகந்தது..!

இது போக இன்னும் நிறைய மிட்டாய்கள் இருக்கு..!
அவற்றுள் சில,

📜சீரக மிட்டாய்
📜கமர்கட்
📜ஹார்லிக்ஸ் மிட்டாய்
📜பொறி உருண்டை
📜குச்சிமிட்டாய்

இந்த மிட்டாய் வரிசையில் அப்பளபூ வை சேர்க்க முடியாது தான்..!
ஆனா அத விரல்ல மாட்டிகிட்டு சாப்பிடுவது சிறப்பாக இருக்கும்..!😂

😋இப்பவும் நிறைய இடங்களில் மிட்டாய்களை Manual Process ஆ தான் செய்றாங்க.! பாகு காய்ச்சி அச்சுல போட்டு எடுத்து உலர வைப்பது வரை Manual தான்.

😋இதெல்லாம் இப்போ சில
Small Scale Food Industries ல
Semi Automated Process ஆகவும் பண்றாங்க.! இது நல்ல பலனையும், இலாபத்தையும் கொடுக்குது.!😂

😋ஆனா, இந்தமாதிரி உள்ள எல்லா இடங்களிலும், (Manual&Semi Automated)
🔥பக்குவம் (Method)
🔥சுவை (Taste)
🔥நிறம் (Colouring Agents)
🔥மணம் (Aroma)
🔥தரம் (Quality)
🔥அளவு ( Quantity)
இதCheck பண்ண #பேட்டகாரன் மாதிரி ஒரு Expertதாத்தா இருப்பாரு.அவருதான் அங்க #TQM #TPM #5S எல்லாமே.!😂

இப்போ விற்கப்படும் Packed ஜங்க் ஃபுட்ஸ் உடலுக்கு எவ்வளவு கெடுதின்னு #சித்த_மருத்துவர்_கு_சிவராமன் அவர்கள் வேலைக்காரன் படத்தில் சொல்லி இருப்பாரு..!

அதனால நம்முடைய பாரம்பரியமான இனிப்புகள் தான் நமக்கு எப்போதுமே நல்லது..!😍

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling