#HBDPerarignarAnnaa ❣️
• பேரறிஞர் #அண்ணா என்ற ஒருவர் இல்லையென்றால், இந்நேரம் நாமும் 'ஹிந்தி திணிப்பு தவறில்லை' என்று சொல்லிக்கொண்டு இருந்திருப்போம்.
• ராஜஸ்தானி, பஞ்சாபி, குஜராத்தி, காஷ்மீரி, மராத்தி ஆகிய பிராந்திய மொழிகள் போல, #தமிழ் மொழியும் ஹிந்தியால் காவு
1/N
வாங்கப்பட்டு அழிந்து ஒழிந்து போயிருக்கும்.
• சொந்த ஜாதியிலேயே திருமணம் செய்தாலும், கல்யாண நாள் வரை கணவன் முகத்தை கூட பார்க்க முடியாது என்கிற நிலையிலிருந்து... ஜாதியை தாண்டி, மதத்தை தாண்டி காதல் திருமணம் செய்ய #பெரியார் வலியறுத்திய சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டம்
2/N
கொண்டுவந்தவர் அண்ணா.
• தமிழர்களின் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பை 'முட்டாள்தனம்' என சொன்னதற்காக பிரதமர் நேருவையே எதிர்த்து போராடியவர்.
• மதராஸ் மாகாணத்தை பெயர் மாற்றி, 'தமிழ்நாடு' என்று பெயரிட்டவர்.
• அண்ணா இல்லையென்றால், இந்நேரம் மற்ற மாநிலங்கள் போல தமிழ்நாட்டையும்
3/N
பா.ஜ.க தான் ஆண்டுகொண்டிருக்கக்கூடும். தேசிய கட்சிகளை முதன்முதலில் வீழ்த்தியவர் அண்ணா.
• தமிழகத்தில் சமூக நீதி கொள்கைகளும், மாநில சுயாட்சி கொள்கைகளும் மேலோங்கி இருப்பதற்கான விதையை இட்டவர்.
• சினிமாவை அரசியல் பேசும் ஒரு அற்புதமான கருவியாக கையாள முடியும் என காட்டி,
4/N
மக்களிடையே பெரும் புரட்சியை உண்டாக்கியவர்.
• ஜாதிரீதியான பாரம்பரிய 'குலக்கல்வி' திட்டத்தை புகுத்த நினைத்த ராஜாஜியை எதிர்த்தவர்.
• தான் ஒரு தீவிரமான கடவுள் மறுப்பாளராக இருந்தபோதிலும், மதரீதியான மூடநம்பிக்கைகளை கேள்விகேட்ட போதிலும்,
5/N
மக்களின் கடவுள் நம்பிக்கைக்கு எதிரானவராக இருக்கவில்லை. "நான் பிள்ளையாருக்கு தேங்காயும் உடைப்பதில்லை, பிள்ளையார் சிலையையும் உடைப்பதில்லை" என்பதே அவரது நிலைப்பாடாக இருந்தது.
பேரறிஞர் அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! ❤️❤️❤️
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
