#Thread
ஒரு ஊர்ல நடேசனார்ன்னு ஒருத்தர் இருந்தாரு. பார்ப்பனர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய அந்த காலத்துல நடேசனார் என்பவர் அரசு ஊழியர்கள் ல ஆரம்பிச்சு, மாணவர்கள் வரை பார்ப்பனர் அல்லாதோர் உரிமை பற்றி பேசினார்.
👇
அப்பதான் ஒற்றை ஆட்சி முறையை இரட்டை ஆட்சி முறையாக்கினாங்க பிரிட்டிஷ் காரங்க. நம்ம பேசுற திட்டங்களை செயல்படுத்த அதிகாரம் தேவைன்னு முடிவெடுத்த நடேசனார், டி.எம்.நாயர், தியாகராசன், பனகல் ராஜா, பெரியார் 5 பேரும் சேர்ந்து நீதி கட்சி உருவாக்குனாங்க.
👇
1920 ல் நடந்த முதல் தேர்தல்ல, போட்டியிட்டு ஜெயிச்சாங்க. பல சீர்த்திருத்தம் செஞ்சாங்க. பார்ப்பனர் அல்லாதோர் பலருக்கும் குளத்தில் தண்ணீர் எடுப்பதில் இருந்து அரசு அலுவலகம் வரை உரிமைகள் கிடைச்சது. 17 வருசம் அவங்க ஆட்சி தான். பொற்காலமா இருந்தது.
👇
உட்கட்சி பூசலால 1937 ல நடந்த தேர்தல்ல காங்கிரஸ் கிட்ட தோற்று போறாங்க. அதுக்கு அப்புறம் வந்த ஆட்சி பார்ப்பனர்கள் கையில போகுது. 1944 ல கட்சியை தேர்தல்ல போட்டியிடாத அமைப்பாக மாத்தினாரு பெரியார்.
👇
பார்ப்பனர்கள் ஆட்சில குலக்கல்வி ல இருந்து இந்தி திணிப்பு வரை என்னெனமோ வந்தது. இனிமே அரசியல் அதிகாரமே நமக்கு கிடையாதா? இந்த திட்டங்களை எல்லாம் நாம சகிச்சுகிட்டு இருக்கணுமான்னு நினைக்கும் போது தான் ஒருத்தன் வந்தான்.
👇
சின்ன பையன். குள்ளமான உருவம், கரைபடிந்த பல்லு, அழுக்கு டிரஸ்சு. ஆனால் அவன் பேச்சை கேட்க ஆயிரக்கணக்கான பேரு கூட ஆரம்பிச்சாங்க. ஆயிரம் இரண்டாயிரம் ஆச்சு. 2000 2 லட்சமா மாறுச்சு.
அரசியல்ல நமக்கு ஒரு ஆளு வேணும் ன்னு யோசிச்ச பெரியார், காமராசரை போட்டியிட வைத்து முதல்வராக்குனாரு.
👇
பல விஷயங்கள் செய்தாலும், டெல்லியை மீறி எதுவும் பண்ண முடியாத நிலை.
போதாக்குறைக்கு அந்த நபரும் பதவி விலக, கொடூர ஆட்சி ஆரம்பிச்சிருச்சு. இந்தி திணிப்பு, மாணவர்கள் படுகொலை ன்னு நாடு மோசமாச்சு.
👇
15, 50 ன்னு வளர்ந்துட்டு வந்த அந்த இளைஞன், காயிதே மில்லத் மூலமா எல்லாரையும் இணைச்சு தேர்தலை சந்தித்தார். யாரும் எங்கள விழ்த்த முடியாது, படுத்துகிட்டே ஜெயிச்சோம்ன்னு சொன்ன எல்லாரையும் 1967 ல தோற்கடித்தார்.
👇
மக்கள் மனசுல ஒரு நம்பிக்கை பிறந்துச்சு. அதுவரை பிரிந்து இருந்த பெரியாரை, சந்திச்சாரு அந்த இளைஞன். Green Signal கிடைத்தது. மதராஸி மதராஸின்னு கூப்பிட்ட மக்களை தமிழன்னு கூப்பிடும் விதமா, தமிழ்நாடுன்னு பெயர் வச்சாரு.
👇
.
அன்றிலிருந்து இன்று வரை பார்ப்பனர்கள் என்ன என்னமோ செய்து பார்த்தாலும் அரசியல் அதிகாரத்தை அடைய முடியாததற்கு காரணம் அந்த இளைஞன் போட்ட அச்சாரமும், அந்த இளைஞன் உருவாக்குன இரண்டாம் கட்ட தலைவர்களும் தான்.
அந்த இளைஞன் தான் என் தலைவன் பேரறிஞர் அண்ணா..
#HBDAnna #அண்ணா112
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
