மேகோன் 🇮🇳 Profile picture
பெருமானே 🙏🏼 நாயேனையும் ஆட்கொண்டு அருள்புரியுங்கள் 🙏🏼 தமிழ் மொழியாக, பாரதம் நாடாக, சனாதன தர்மம் எம் நெறியானது! 🇮🇳🚩 🙏🏼நற்றுணையாவது நமச்சிவாயவே🙏🏼

Sep 15, 2020, 5 tweets

அறிவோம் சைவநெறி:
பகுதி-4

யார் சிவன்?

சிவபெருமான் அந்தம், ஆதி இல்லா அனாதியானவன்.
ஆனந்த கூத்தாடி, எல்லையில்லா அருள் ஞானமாக திகழ்பவன்.
அனைத்து உயிர்கட்டும் தாயானவன், தந்தையானவன், தலைவனாவன்.
பேரண்டத்துக்கும் எல்லா தெய்வங்களுக்கும் தலைவன்.

அருட்பெரும் சோதிப்பிளம்பாக நிற்பவர்.
உயிர்களின் உள்ளிருந்து உணர்த்துபவர்.

பிறவி அறுத்து, ஞான முக்தி தர வல்லவன் சிவன் ஒருவனே.

அடியவர்கள் உள்ளத்தில் உறைந்து, அன்பைப் பெற்று அருளைக் கொடுப்பவன், கேட்ட வரத்தைக் கொடுக்கும் பித்தன்.

சிவத்தின் எட்டு குணங்கள்:

1.தன்வயத்தன் ஆதல்
2.தூய உடம்பினன் ஆதல்
3.இயற்கை உணர்வினன் ஆதல்
4.முற்றும் உணர்தல்
5.இயல்பாகவே பாசங்களினின்று நீங்குதல்
6.பேரருள் உடைமை
7.முடிவிலா ஆற்றல் உடைமை
8.வரம்பிலா இன்பம் உடைமை

திருக்குறள்:
"கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை"

பொருள்: எண்குணத்தான் திருவடியை வணங்காத தலைகள், பொறிகள் இருந்தும் புலன்கள் அற்றவை போல, உணர்வில்லாதவை.

இப்படிப்பட்ட இறைவன்-சிவன், அருவம் (உருவம் அற்ற நிலை), உருவம் (நடராஜர்), அருவுருவம் (லிங்கம்) என மூன்று நிலைகளில் உயிர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

-தொடரும்.

#அறிவோம்_சைவநெறி
#நற்றுணையாவது_நமச்சிவாயவே 🙏
#அர்த்தமுள்ள_இந்து_மதம்
#ஜெய்_ஸ்ரீராம்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling