Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture
எமது கலாச்சாரம் எமது நம்பிக்கை JAI HIND 🇮🇳🙏

Oct 3, 2020, 7 tweets

Mr.#பொதுஜனம்....

$ நூற்றைம்பது சவரன் போட்டு மகளுக்கு திருமணம் முடித்தவன் வீட்டில் #கலைஞர் TV ஓடுகிறது.

$ ஊருக்குள் 30 வீடுகள் வாடகைக்கு விட்டவன் #பசுமை வீடு மானியத்தில் வீடு கட்டிக்கொண்டான்.

$ இரண்டு மகன்கள் #அமெரிக்காவில் சம்பாதிக்கிறார்கள். ஆனால் முதியோர் பணம் 1000 பெறுகிறார்கள்.

$காரில் சென்று இலவச சேலை பெறுகிறார் ஒரு பெண்.
IT கம்பனில் #லட்சத்தில் சம்பளம், ஆனால் ஜாதி படி ரேஷன்கார்டு படி #தாலிக்கு தங்கம் பெறுகிறார் இன்னொருவர்.

$ 5000 சதுர அடியில் நீச்சல் குளத்துடன் வீடு. ஆனால் #வீட்டுவரி ரூ350. அதாவது 20 வருடத்திற்கு முன்இருந்த பழையவீட்டின் வரியே தொடர்கிறது அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்து.

$ இது போக #ரேசன் பொருளை வசதியானவர்கள் வாங்கி, ஏழைகளுக்கு விற்பது.
#மானிய சிலின்டர்களை கார் பார்டிகளுக்கு விற்பது.

பைனான்ஸ்+சீட்கள் நடத்தி கோடியில் விளையாடும் ஒருவர் #Income #Tax என்றால் என்ன? என்கிறார்.

$ ஷென்சஸ் எடுக்கப்போனோம்.
#மாதவருமானம் 4000,5000 என்றுதான் அத்தனை குடும்பமும் கூசாமல் பொய் சொல்கிறது. அப்பத்தான் சலுகைகள் கிடைக்குமாம்.

$ இதெல்லாமே என் #தெருவில் நடக்கும் உதாரணங்கள்.
கடைசியாக 4 கட்சியிடமும் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுகிறார் Mr.#பொதுஜனம்.

1) #முறையாக வரி செலுத்தும், சலுகைக்காக பொய் பேசாத மக்கள்.

2) #ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவை செய்யும் அரசியல் வாதி.

3) #லஞ்சம் வாங்காது கடமையை செவ்வனே செய்யும் அரசு ஊழியன்.

நாடு உருப்பட இந்த #மூவரும் வேண்டும்.

யார் முதலில் #திருந்துவது.
எப்படி #திருத்துவது.

சட்டதின் வழியா??சர்வாதிகாரமா?? கல்வியா??
ஆன்மீகமா??எதைக்கொண்டு எதைத் #திருத்துவது????

எனவே நீங்கள் விடை சொல்லுங்கள்.

நாடும் மக்களும் ந.........ல்லா இருக்கட்டும்.....

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling