SundaR KamaL Profile picture
விவசாயி மகன்🌾 கமல் பக்தன்❤️ மக்கள் நீதி மய்யம்🔦 ஜாதி, மதம் இல்லை👊 சிம்பு, ஹாரிஸ், கெளதம் மேனன், ராஷ்மிகா🎥 சச்சின், பொல்லார்ட், மும்பை இந்தியன்ஸ்🏏

Apr 16, 2021, 17 tweets

#கமல்ஹாசன் சில தயாரிப்பாளர்களை அழித்தார் என கூறும் கருத்துக்கு அவர் தயாரிப்பாளர்களை "வாழ வைத்தார்" என்பது தான் உண்மை அதற்கான த்ரட்👇

#KamalHaasan

1) #அவ்வைசண்முகி தயாரிப்பாளர் முரளி "1996 லயே கமல் சார்க்கு 4.7 கோடிக்கு மேல லாபம், சென்னைல மட்டுமே அவருக்கு 1 கோடி ஷேர், எங்களுக்கும் மத்தவங்களுக்கும் டபுள் மடங்கு லாபம்"👏

2) #காதலாகாதலா தயாரிப்பாளர் தேனப்பன் "கமல் சார் நானே நடிக்கிறேன் எனக்கு சம்பளம் வேணாம், ராஜ்கமல்'னு போட்டு வியாபாரம் பண்ணிக்கோன்னு சொன்னாரு, அதுனால தான் என்னோட பொண்ணு பேரு & என்னோட கம்பெனி பேரு ராஜலட்சுமி‌ (அவரோட அம்மா பெயர்)👏

3) #காதலாகாதலா தயாரிப்பாளர் தேனப்பன் "படம் ரிலீஸ் ஆகி எனக்கு பெரிய லாபம் கிடைச்சது எல்லா பணத்தையும் எடுத்துகிட்டு கமல் சார்ட கொடுக்க போனேன் அவர் 100 ரூபாய் கூட எடுத்துக்கல, அது எல்லாம் உன்னோட பணம் அத வச்சிகிட்டு குடும்பத்த பாத்துக்கோன்னு சொன்னாரு"👏

4) #சதிலீலாவதி கடும் நிதிநெருக்கடியில் இருந்த பாலுமகேந்திரா, கமலிடம் பணம் கேட்க போன போது பாலுமகேந்திரா சொல்லாமலே அவர் கேட்க வந்த பணத்தை விட பலமடங்கு பணத்தை கொடுத்து, எனது அடுத்த படத்தை நீங்க இயக்கனும்னு சொல்லி கடன் வாங்க வந்தவரை கெளரவமாக நடத்தினார் கமல்👏

5) #மகராசன் "தயாரிப்பாளர் ஜி.என். ரங்கராஜன் வீட்டை அடமானம் வைத்து கடனில் இருந்த போது அவர் சொல்லாமலே கமல் தெரிந்து கொண்டு சம்பளமே வாங்காமல் மகராசன் படத்தில் நடித்து வீட்டை மீட்டு தந்தார், மீட்டு தந்த வீட்டிற்கு "கமல் இல்லம்" என பெயர் வைத்தார் ரங்கராஜன்"👏

6) #மகாநதி "தயாரிப்பாளர் ராஜ்கண்ணு பணக் கஷ்டத்தில் இருக்கிறார் அவருக்கு ஒரு படம் பண்ணி கொடுங்கன்னு கமல் சார்ட சொன்னேன் அவர் உடனே மகாநதி நடித்து கொடுத்து அவரின் முக்கால்வாசி கடனை அடைக்க உதவினார், இதை இன்று வரைக்கும் கமல் சார் வெளியில் சொன்னதே இல்லை"👏

7) #வயநாடுதம்பான் தமிழ் உரிமையாளர் சித்ரா லட்சுமணன் "மலையாளத்தில் கமல் நடித்த வயநாடு தம்பான் திரைப்படத்தை வாங்கி தமிழில் டப்பிங் செய்தேன், நான் தயாரிக்கும் முதல் படம் என்பதால் கமல் ஒரு ரூபாய் கூட வாங்காமல் இலவசமாக தமிழில் டப்பிங் பேசி எனக்காக உதவினார்"👏

8) #ஆளவந்தான் தயாரிப்பாளர் தாணு "தன்னால் ஹிந்தி உரிமத்தில் ஒரு இழப்பு வந்ததால் தன்னோடு சம்பளத்தை கணிசமாக குறைத்து கொண்டு ஒரு முன் உதாரணமாக இருந்தார் கமல்"👏

9) #அன்பேசிவம் தயாரிப்பாளர் முரளிதரன் "50 சதவீதத்திற்கு மேல கமல் சார் சம்பளம் வாங்கவே இல்ல, அவர் ரேஜ்க்கு அவர் அப்படி பண்ணணும்னு அவசியமே இல்ல ஆனா பண்ணாரு நாங்க அத மறக்கவே மாட்டோம்"👏

10) #முள்ளும்மலரும் தயாரிப்பாளர் பிரச்சினையால் "ஊட்டியில் கேமரா இல்லாமல் நின்று போன படப்பிடிப்பு பக்கத்தில் தான் நடித்த சட்டம் என் கையில் படத்தை நிறுத்திவிட்டு தன் கேமராவை கொடுத்து பாடல் காட்சிகள் மற்றும் ரஜினியின் காட்சிகளை எடுக்க உதவினார் கமல்"👏

11) #முள்ளும்மலரும் தயாரிப்பாளர் "கடைசி நேரத்தில் பாடல் மற்றும் முக்கியமான காட்சிகளை எடுக்க பணம் தராததால் நான் உதவின்னு கேட்காமலே கமல் தானாக முன்வந்துஅனைத்து காட்சிகளையும் எடுக்க பணம் கொடுத்து ஸ்டுடியோ ஏற்பாடு செய்தார், அவர் இல்லையென்றால் மகேந்திரன் இல்லை முள்ளும் மலரும் இல்லை"👏

12) #ஏக்துஜேகேலியே "கமலின் முதல் ஹிந்தி திரைப்படம் வெளியாகி 10 கோடிக்கு மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்தது, அந்த வசூலில் கட்டியது தான் ஆசியாவின் மிகப்பெரிய பிரசாத் 70mm தியேட்டர், கமலிடம் உன்னோட பட வசூலில் கட்டியது என எல். வி. பிரசாத் கூறினார்"👏

13) #மூன்றாம்பிறை தயாரிப்பாளர் தியாகராஜன் "படம் ஒரு வருஷம் ஓடிச்சு நினைக்க முடியாத வசூல் சாதனை, படத்தை முதலில் வேண்டாம்னு சொன்ன விநியோகஸ்தர்கள் எல்லாரும் டபுள் மடங்கு பணம் கொடுத்து வாங்கிட்டு போனாங்க"👏

14) #சூரசம்ஹாரம் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் " என்னுடைய படத்துலயே கமல் சார் அவரோட சம்பளத்தை தவிர கார் பேட்டாவோ, டீசல் பேட்டாவோ, மேக்கப் மேன் பேட்டாவோ எதுவுமே கேக்கவே இல்ல தயாரிப்பாளர வாழ வச்சாரு, சொல்ல போனா முழு சம்பளத்தையும் வெள்ளையா வாங்குனாரு👏

15) #இந்திரன்சந்திரன் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா "ஆந்திராவில் 365 நாள் ஒரு வருஷம் நான் ஸ்டாப்பா ஓடி வசூல் சாதனை செய்தது"

16) #ஏக்துஜேகேலியே "கமலின் முதல் ஹிந்தி படத்தை வாங்க மறுத்த விநியோகஸ்தர்க்கு பண மழை, மூனு வாரம் கழித்து வந்த அமிதாப்பின் சில்சிலா படம் பிளாப், படத்தின் வருமானம் மூலம் தியேட்டர் மற்றும் ரெக்கார்டிங் தியேட்டர் கட்டினார் தயாரிப்பாளர்"👏

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling