Master🍥 Profile picture
Out of Stock🤷🏿‍♂️. Goofy🎠 FakeID 🎭 @photophactory_📷 https://t.co/a0AqPXP9g0

May 24, 2021, 9 tweets

#goofymovies
ஒரு இயக்குனர் தன் வாழ்வில் சந்தித்த பத்து பெண்களின் கதைதான் பதினொரு இயக்குனர்கள் இயக்கியுள்ள “X : Past is Present (2014)” படத்தின் கதை.

ஒவ்வொரு பெண்ணின் கதையையும் 10  நபர்கள் எழுதி, இயக்கி இருக்கிறார்கள். ஆக , படம் பல்வேறு நபர்களின் ஒரு கூட்டுப்பார்வை. இப்படி ஒரு விசித்திரமான ஐடியாவிற்கு உரிமையாளர், விமர்சகரும், இயக்குனருமான சுதிஷ் கமாத்.

திரைப்பட திருவிழா ஒன்றில் இயக்குனர் கே என்கிற கிஷனை சந்திக்கிறார் ஒரு பெண். இரவு பத்து மணிக்கு ஆரம்பித்து காலை பத்து மணி வரை அந்தப்பெண்ணுடன் கிஷன் பேசும் உரையாடல் தான் படம். காதல், காமெடி, காமம், ஹாரர், ஃபேன்டசி என சினிமாவின் பல வகைகளை கலந்து எடுக்கப்பட்டு இருக்கிறது X.

சிறுவயதில் கே தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தில் சந்திக்கும் பெண்ணில் இருந்து, அவரது முதல் படத்திற்கு உதவும் பெண், பள்ளிப்பருவ காதலி, மனைவி என பலரது வாழ்க்கையை வெவ்வேறு கோணங்களில் பதிவு செய்து இருக்கிறார்கள் இந்தியாவின் new-gen இயக்குனர்கள்.

கல்கத்தாவில் இருக்கும் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்க செல்கிறான் கே. அங்கு ஸ்டூடியோவில் இரவு வேலை பார்ப்பதால், பகலில் மட்டும் வீடு தேவைப்படுகிறது. காலையில் அலுவலகத்திற்கு செல்லும் ஒரு பெண் இரவுதான் வீடு திரும்புகிறாள். இருவருக்கும் ஒரே வீட்டை வாடகைக்கு விடுகிறார் வீட்டின் உரிமையாளர்

இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்காமலே ஆறு மாதம் அந்த வீட்டில் தங்குகிறார்கள். திடீரென ஒருநாள், கிஷன் ஏதோ அவசர நிகழ்விற்காக கல்கத்தாவை விட்டு செல்ல வேண்டிய சூழல் உருவாகிறது. அந்தப்பெண் கதறி அழுவதோடு அந்தக்கதை முடிகிறது. இப்படி படம் முழுக்க காதலும், காமமும் கலந்து இருக்கிறது.

தனித்தனி படம் என்பதால் San Franciscoவில் ஒரு கதை, லண்டனில் ஒரு கதை என ஒவ்வொரு இயக்குனரும் colourful ஆக எடுத்து இருக்கிறார்கள். முழுப்படமும் இரண்டு நாட்களில் எடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் படத்தை எடிட் செய்து ஒரு கோர்வையாக மாற்ற மட்டும் ஒரு ஆண்டு காலம் ஆகி இருக்கிறது.

முழுப்படத்தையும் ஸ்ரீகர் பிரசாத்தும், விஜய் பிரபாகரனும் எடிட் செய்து இருக்கிறார்கள்.
பல கதைகள் பின்னிப்பிணைந்து இருப்பதால், படம் சற்றே தலை சுற்ற வைக்கும். சினிமா ஆர்வலர்கள், வித்தியாச சினிமா பார்க்க விரும்புபவர்கள் கண்டிப்பா பார்க்கலாம்.

நன்றி : விகடன்.

படம் telegram channelல இருக்கு.
Channel ID :

love_t_read

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling