SSR 🐘 Profile picture
#வழித்துணைநயினாரேசரணாகதி 🙏 #வீரசைவன் 💪 #நோக்கம்சிவமயம் 🙏 #SSRThreads #தினம்_ஒரு_திருமந்திரம் #யானைக்காதலன்_SSR🐘 #அரிக்கொம்பன்🐘

Jun 1, 2021, 25 tweets

வந்தார் இராஜராஜர்:- (Thread)

ஜூன் 1 வருடம் 2018.
மூன்று வருடங்களுக்கு முன்பு இதே நாள்...,

தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டது.
குஜராத் மாநிலம் கலிக்கோ அருங்காட்சியகத்திலிருந்த இராஜராஜர் மற்றும் அவரது நம்பிராட்டியார் செப்புத்திருமேனிகள் தஞ்சை பெரியகோவிலை வந்தடைந்தன.

#SSRThreads

சுமார் 80 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் செப்புத்திருமேனிகள் தாயகம் வந்தன,

என்ன நடந்தது..?

சுருக்கமாய் இச்சிலைகள் மீட்கப்பட்ட வரலாறு ஐயா மா.மாரிராஜன் பதிவிலிருந்து,

தஞ்சை பெரியகோவிலாம் இராஜராஜேஷ்வரம்'

வெகு சாமானியர் முதல் பலரும் பல நிவந்தங்களை இக்கோவிலுக்கு கொடுத்துள்ளனர்,

எண்ணிலடங்கா செப்புத்திருமேனிகளாக இறை வடிவங்களை செய்து
இக்கோவிலுக்கு சமர்ப்பித்தனர்.

இராஜராஜரின் 29ஆம் ஆட்சியாண்டு (கி.பி 1014)
தஞ்சை பெரியகோவிலின் நிர்வாக அதிகாரியான மூவேந்த வேளானுக்கு ஓர் நோக்கம் தம் அரசனுக்கும் அரசிக்கும் படிமங்கள் எடுக்க வேண்டும் என,

கல்வெட்டு இவ்வாறு ஆரம்பிக்கிறது,

ஸ்வஸ்திஸ்ரீ உடையார் ஸ்ரீராஜராஜீஸ்வரம் உடையார்க்கு ஸ்ரீகார்யம் செய்கின்ற பொய்கைநாடு கிழவன் ஆதித்யன் சூர்யனான தென்னவன் மூவேந்த
வேளான் ஸ்ரீராஜஜீஸ்வரமுடையார் கோயிலில் யாண்டு இருபத்தொண்பதாவது எழுந்தருளிவித்த செப்பு பிரதிமங்கள்.

இவ்வாறாக குறிப்பிட்டு இராஜராஜருக்கும் லோகமாதேவிக்கும் இரண்டு செப்புப் படிமங்கள் எடுக்கிறார்.

திருமேனிகளின் துல்லிய அளவு, உருவ அமைப்பு, இன்னும் பல விபரங்களை தெளிவாக கல்வெட்டில் காணமுடிகிறது.

நீண்ட காலம் இச்சிலைகள் கோவிலில் இருந்துள்ளது..

1855ல் மராட்டிய வாரிசு காமாட்சிபாய் சாகேப் இறந்தப்பிறகு மராட்டிய அரசுரிமை போட்டி சிக்கல் வழக்கு என்று கடும் குழப்பங்கள் நிறைந்த சூழல்.

இக்காலத்தில் கோவில் உடமைகள் கைமாறின இச்சமயத்தில் இவ்விரண்டு சிலைகளும் தஞ்சையைவிட்டு வெளியேறியிருக்கலாம் என்கிறார்
ஐயா குடவாயில் பாலசுப்ரமணியன்.

சோழமண்டல வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும் ஒரிஜனலைப் போன்று போலியாக ஒரு சிலை செய்து கோவிலில் சேர்த்துள்ளனர்.

1935 ஆம் ஆண்டு தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் வெளியிட்ட Great temple at Tanjore என்னும் நூலில் அந்த போலி சிலையின் சிலையின் புகைப்படம் வெளியானது.

அதன் பீடத்தில் ராஜேந்தரசோழ மகாராஜ என்று 19 ஆம் நூற்றாண்டு எழுத்துப்பொறிப்புடன் எழுத்துக்கள் உள்ளது.

ஒரிஜனல் சிலையை எடுத்துவிட்டு அதேபோன்று வடிவமுடைய போலி ஒன்றை கோவிலில் வைத்துள்ளனர்.

குஜராத் மாநிலம் சாராபாய் பவுண்டேசன் நடத்தும் காலிக்கோ மியூசியம் ஒன்றில்,

The royal couple என்ற தலைப்பில் இரண்டு சோழர்கால படிமங்கள் இருப்பதாக தகவல் கசிந்தது.

1963 ம் வருடம் டெல்லி நேஷனல் மியூசியத்தின் இயக்குனர் திரு. சி.சிவமூர்த்தி அவர்கள் தென்னிந்திய செப்புச்சிலைகள் குறித்த எழுதிய நூலில்
சாராபாய் மியூசியத்தில் இருப்பது

இராஜராஜன் மற்றும் லோகமாதேவி சிலைதான் எனத் தெளிவுப்படுத்தினார்.

1983 ம் வருடம் டெல்லியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் The great tradition india bronze master pieces என்னும் தலைப்பில் ஒரு நூல் வெளியிடப்பட்டது. அந்நூலில் தமிழக தொல்லியல் இயக்குனர் ஐயா. நாகசாமி அவர்கள்

கலிக்கோ மியூசியத்தில் இருப்பது இராஜராஜனும் லோகமாதேவியும்தான் என உறுதியாக குறிப்பிட்டார்

சிலைகளை மீட்டு தமிழகம் கொண்டு வரவேண்டும் என்னும் கோரிக்கை வலுப்பெற்றது சில வருடங்கள் கழித்து கலிக்கோ மியூசியத்திற்கு Catlog எழுதும்போது இச்சிலையை King of kings என குறிப்பிடுகிறார் ஐயா நாகசாமி

ஆகவே அருங்காட்சியகத்தில் இருப்பது இராஜராஜர் திருமேனிதான் என
வரலாற்று ஆய்வாளர்கள் கருத்திட்டனர்.

சிலையின் காலில் வீரக்கழல் உள்ளது இது அரசர்கள் அணியும் மரபு கல்வெட்டில் உள்ள அளவு மற்றும் உருவ அமைப்பு
சிலைகளுடன் ஒத்துப்போகிறது இது இராஜராஜரேதான் என்று பல ஆய்வாளர்கள் உறுதி செய்தனர்

2010 ம் வருடம்..

தஞ்சை பெரியகோவில் ஆயிரமாவது
ஆண்டு விழா..

தஞ்சையில் பல சிறப்புநிகழ்வுகள்
அரங்கேறின..

குஜராத்திலிருந்து இச்சிலைகளை மீட்டு
தஞ்சை கொண்டு வரவேண்டும் என்னும் கோரிக்கை வலுப்பெற்றது.

அப்போதய தமிழக முதல்வராக கலைஞர்..
முயற்சிகள் மேற்கொண்டார்.

சிலையை மீட்டு தமிழகம் கொண்டுவர முயற்சிகள் தொடங்கின.

ஆதாரத் தகவல்கள் சேகரிக்கும் பணி தொடங்கியது கல்வெட்டில் காணப்படும் அளவு மற்றும் உருவ அமைப்பு அப்படியே பொருந்துவதாக குடவாயில் பாலசுப்பிரமணியம் உட்பட
பல ஆய்வாளர்கள் உறுதி செய்தனர்..

இது போன்ற பல சான்றுகளை சேகரித்துக்கொண்டு,

குஜராத் புறப்பட்டது சிலை மீட்புக்குழு.

அப்போதைய கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, செயலர் இறையன்பு, குடவாயில் பாலசுப்ரமணியன்,
தொல்லியல் இயக்குனர் இரா.நாகசாமி ஆகியோர் குழுவாக குஜராத் சென்று அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சந்தித்தனர்.

அருங்காட்சியகம் சென்று பல சான்றுகளுடன் சிலைகளின் உண்மையை நிருபித்தனர்.

ஆனால் அருங்காட்சியக நிர்வாகமோ
நாகசாமி சொன்னால் சிலைகளை தருவதாக உறுதியளித்தார்களாம்.

ஐயா நாகசாமி அவர்களோ
அது இதுவல்ல என்றார்களாம்.

இது இராஜராஜர்தான் என்று முதலில் கூறிய அவர்.

இப்போது இது இராஜராஜன் சிலை அல்ல .. சண்டிகேசுவரர் என்றாராம்.

ஒட்டுமொத்த ஆய்வாளார்களின் கருத்தும் புறக்கனிப்பட்டு ஒருவரது ஆட்சேபனை ஏற்கப்பட்டது சிலைகளை மீட்கமுடியாமல்
ஏமாற்றத்துடன் தமிழகம் திரும்பியது சிலை மீட்புக்குழு,

காரணம் கையாலாகாத அதிகாரிகளை அனுப்பியது,

எல்லாம் சரியாக நடந்தும் பயன் இல்லாமலே போனது.

கலைஞர் எடுத்த அனைத்து முயற்சிகளும் பலனற்றதாய் ஆயின எண்ணம் அப்படி,,

உண்மையான சிங்கம் என்ட்ரி:-

2018 ம் வருடம் மார்ச் மாதம் சிலை கடத்தல் தடுப்பு ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் ஐயா தஞ்சை வருகிறார் சிலை திருடப்பட்டதை உறுதிப்படுத்துகிறார்.

உடனே Actionனில் இறங்குகிறார்,

வழக்குப் பதிவுசெய்யப்பட்டு முழு வீச்சில் விசாரணை தொடங்கியது

சிலையை விற்றவர் யார்..?
வாங்கியது யார்.?
எப்போ குஜராத் சென்றது என அனைத்து விபரங்களையும் துல்லியமாகச் சேகரித்தார்.

பின்பு ஐயா. பொன். மாணிக்கவேல் இவ்வாறு கூறினார்.

ராஜராஜ சோழன், லோகமாதேவி சிலைகளை நேரில் பார்த்தவர்கள்,வயது முதிர்ந்த நிலையில் இப்போதும் தஞ்சாவூரில் இருக்கிறார்கள்.

அந்த சிலைகள் மீட்கப்பட வேண்டும் என்ற உணர்வோடு இருக்கும் அவர்கள், கண்டிப்பாக இந்த வழக்கில் எங்களுக்கு ஒத்துழைப்பார்கள்.

வீல் சேரில் வைத்தாவது அவர்களை சாட்சி சொல்ல நீதிமன்றத்துக்கு அழைத்து வருவோம். குஜராத்தில் உள்ளவை, இராஜராஜன்தான் என்பதை தொல்லியல் ஆய்வாளர் நாகசாமி தான் எழுதிய புத்தகத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதுவே வலுவான ஆதாரம். சிலைகளை மீட்டு கண்டிப்பாக தஞ்சாவூர் கொண்டு வருவோம் என்றார்.

சரியாக தொண்ணூறு நாட்கள் கடந்தது..
ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், குடவாயில் பாலசுப்பிரமணியன், குழுவினர் குஜராத் சென்றனர்..

இம்முறை சரியான ஆதாரங்களுடன் வலுவான காவல் துறை Teamமுடன் சென்றார் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் ஐயா.

சரியான சான்றுகளை குடவாயிலார் முன் வைத்தார்.

இச்சிலை உங்களுக்கு எங்கே, எப்போ, எப்படி கிடைத்தது.?

என்ற கேள்விகளை அருங்காட்சியகம் எதிர் கொண்டது வழக்கு விசாரணை என்று தொடர்ந்தால் மேலும் பல சிக்கல்களை சந்திக்க வேண்டிவரும் என்று சிலைகளை தர சம்மதித்தது.

செய்தி வந்தது சிலையை மீட்டார்களாம் தஞ்சையை நோக்கி பயணம்
தொடங்கியதாம் என்று,

மே மாதம் 30 ஆம் தேதி குஜராத்திலிருந்து நவஜீவன் எக்ஸ்பிரஸில் செனனை சென்ட்ரல் நிலையம் வந்தடைந்தது.

இராஜராஜனும் அவரது தேவியரும் தாய் மண்ணைத் தொட்டனர்.

உணர்வு பூர்வமாக வரவேற்றனர் மக்கள்.
வழக்கு சம்பிரதாயங்களை முடித்து,

2018 ஆம் வருடம்....,

ஜூன் 1 ஆம் தேதி தஞ்சை பெரியகோவிலுக்கு தம்பதியார்கள் வந்தனர்.

எப்போதும் பெருவுடையாரை நோக்கியே இருக்குமாறு இராஜராஜர் தம்பதி சகிதமாக.
நிலை கொண்டார்.

தென்னவன் மூவேந்த வேளான் மனம் குளிர்ந்திருக்கும்.
🙏🙏🙏🙏🙏🙏
#நோக்கம்சிவமயம்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling