Sakthivel Gunasekaran. Profile picture
Rally Rider Racer Love Moto GP தீவிர தமிழ்தேசியவாதி. நாம் தமிழர் கட்சி ஆஸ்திரேலியா. From Coimbatore #BelongsToTamilianStock

Jun 4, 2021, 6 tweets

செய்திக்குறிப்பு: முதல்வர் ஸ்டாலினுடன் சீமான் சந்திப்பு - கொரோனா துயர்துடைப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 5 இலட்ச ரூபாய் வழங்கினார் | நாம் தமிழர் கட்சி

facebook.com/NaamTamilarKat…

இன்று 04-06-2021, தலைமைச் செயலகத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை - 1/5

ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, கொரோனா துயர்துடைப்பு பணிகளுக்காக, நாம் தமிழர் கட்சி சார்பாக 5 இலட்சம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். இச்சந்திப்பின் போது உடனிருந்த இயக்குநர் பாரதிராஜா அவர்களும் - 2/5

தனது சார்பில் ரூபாய் 5 இலட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

இச்சந்திப்பில் எழுவர் விடுதலையில் 161வது, சட்டப்பிரிவின் படி அமைச்சரவையைக் கூட்டி விரைவில் நல்ல முடிவு எட்டப்படவேண்டும் எனவும், கொரோனா தீவிர நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களுக்கும் தமிழ் சித்த - 3/5

மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்படவேண்டும் எனவும், கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படும் இணையவழி வகுப்புகளுக்கான கல்விக்கட்டணத்தை அரசே நிர்ணயம் செய்து ஒரு வரையறைக்குள் கொண்டுவரவேண்டும் எனவும், தேர்வுகளைவிட மாணவர்களின் உயிர் முக்கியம் - 4/5

என்பதைச் சுட்டிக்காட்டி, கொரோனா பரவல் குறையும்வரை 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகளை ஒத்திக்வைக்கவேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கோரிக்கை விடுத்தார்.

#தலைமை_அலுவலகச்_செய்திக்குறிப்பு

#நாம்_தமிழர்_கட்சி - 5/5

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling