அண்ணா அண்ணா அண்ணா...
அன்பின் அடையாளம் #அண்ணா
இந்த நிலத்தில் அண்ணா போல் வாழ்ந்த, சாமானியர்களின் ஒப்பற்ற தலைவன் எவருமில்லை என்று அவரது மரணத்தில் கூடிய மக்கள் கூட்டமே சான்றிளித்தது, மண்ணாங்கட்டிகளின் சான்று யாருக்கு வேண்டும்!?
வதந்திகள் அன்றே தவிடுபொடி ஆனது மக்கள் தீர்ப்பின் முன்.
திராவிட இயக்கத்தின் தீரர், அஞ்சா நெஞ்சன் அழகிரி உடல்நலம் குன்றியிருந்த பொழுது, அவருக்கு 100ரூபாய் பண அஞ்சல் அனுப்பிய சிட்டையைக் காட்டினால் தான் யாராக இருந்தாலும் சந்திப்பேன் என்றவர் அண்ணா.
1949ல் ஈட்டுத்தொகைக்காக உடன்பிறப்புகள் அனுப்பிய பணத்தை, திருப்பி அனுப்பி வைத்தவர் அண்ணா.
அஞ்சா நெஞ்சன் அழகிரியை இழந்த அவரது குடும்பதிற்கு, 1949ல் நாடகம் நடத்தி 5000ரூபாய் வழங்கியவர் அண்ணா.
#திராவிடநாடு பத்திரிகைக்கு நிதியளிக்கும்படி தோழர்களுக்குப் #பெரியார் விடுதலையில் அழைப்புவிடுக்க, தேவையான நிதி குவிந்திட, நிதி போதும் என்று பத்திரிகையில் தலையங்கம் எழுதியவர் #அண்ணா.
நாடகம் நடத்தி, காஞ்சி பச்சையப்பன் கல்லூரிக்கு 21000ரூ 1951ல் நிதி
புயல் நிவாரண நிதி 27000ரூ 53ல்
தியாகராயர் கல்லூரிக்கு நாடகம் நடத்தி நிதி
எதிர்க்கட்சியினர் தாக்குதலில் உயிரிழந்த தொண்டர் ஆறுமுகம் குடும்பத்திற்கு 1ஏக்கர் நிலம்
மேலும் இரு தொண்டர் குடும்பத்திற்கு வீடு மற்றும் நிலம்
குவிகின்ற நிதியைப் போதுமென அறிவித்த பெருந்தகை.
தான் எழுதிய கதைகளை, நாடகமாக்கி நிதி திரட்டி, பிறர் துயர் துடைக்க வழங்கியவர்.
இவர் அறிவிற்கு, உயர் பணிகளில் அமர்ந்து, ஒய்யார வாழ்வு வாழும் வாய்ப்பிருந்தும் பொதுப்பணியைத் தேர்ந்தெடுத்து வாழ்கிறார் என்று பெரியாரால் புகழப்பட்டவர் #அண்ணா
வழக்கு யாது!? பாரதிதாசன் அறிஞர் அண்ணாவை இழிவாகப் பேசியது. கட்டுரை இடம்பெற்ற தமிழ் இந்துவில் பாரதிதாசனின் சாதிய நோக்கை இழித்துப் பேசும் கட்டுறையில், போகிற போக்கில் அண்ணா மீதும் சேற்றை வாரி இறைத்திருக்கிறானுக. அது தான் பாரதிதாசன் முரணின் மொத்த உருவமாகக் காட்டியாயிற்றே, பிறகென்ன!?
பாரதிதாசனை அன்றே ஊகித்த பெரியார், "ரெண்டு பாட்டு எழுதீட்டா, இவனெல்லாம் புலவனா?, இந்த அண்ணாதுரைக்கு என்ன ஆச்சு?" என்றார். சோமசுந்தர பாரதியார் தலைமையில், கி.ஆ.பெ., மா.பொ.சி., எல்லோர் முன்னிலையில் அறிஞர் அண்ணா பாரதிதாசனுக்குப் பொற்கிழி வழங்கிய அந்த நிகழ்வில் கலந்துக்கல பெரியார்.
பாரதிதாசன் எது முதல் பிணக்கு கொண்டார்!? திமுகவின் புகழொளியில் 1954ல் புதுவை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்ற பின், திமுக 1957 பொதுத்தேர்தலில் போட்டியிட்டு 15தொகுதிகளில் வென்று 1958ல்மாநில கட்சி உரிமை பெற்ற பின்னர் தான் இந்த பொறாமைவேந்தனின் நா தடுமாறித் தடம்மாறத் தொடங்கியது.
கோவணத்தில் நாலு காசு கண்டது முதல், பெரியாரைச் சுற்றியிருந்த தளபதிகள் ஒவ்வொருவரிடமும் தூபம் போட்டுப் பெரியாரிடம் இருந்து, அவர்களைப் பிரிப்பைதையே நோக்கமாகக் கொண்டிருந்தவர் தான் இந்தப் பாவேந்தன். போட்டியும் பொறாமையும் குடிகொண்டு விட்டால், தன் வேட்டி அவிழ்வது கூடத் தெரியாது.
எப்பொழுது முதல் சிண்டு முடியும் வேலையைச் செய்து வந்தார் இந்த பா.தாசன், 1946ல் 25,000ரூ பொற்கிழி காசு கையில் கிடைத்தது முதல், பெரியாருடன் இருந்த அனைவரிடமும், குறிப்பாக அண்ணாவிடம், கா.அப்பாதுரையாரிடமும், "இந்தப் பணத்தைக் கொண்டு புதிய இயக்கம் துவங்கலாம் என்று தூபம் போட்டார் பா.தாசன்
கா.அப்பாதுரையார் பண்டிதமணி என்றழைக்கப்பட்ட பன்மொழி வித்தகர், தாழ்த்தப்பட்டோரும் இந்துக்கள் என்ற காந்தியின் பூனா ஒப்பந்தத்தை எதிர்த்து கடிதங்கள் எழுதியவர், 'தமிழன்' இதழிலும் தாழ்த்தப்பட்டோர் இந்துக்கள் என என்னுடன் பொது மேடையில் விவாதிக்கத் தயாரா என்று எழுதிய புரட்சியாளர்.
அண்ணா காலம் வரை அண்ணாவுடனும், பெரியார் காலம் வரை பெரியாருடனும் கொள்கைகளில் ஒன்றுபட்டு, அதன் பின்னரும் உறுதியாக இருந்த கா.அப்பாதுரையாரே தமிழ்தேசியமும் திராவிடமும் வெவ்வேறு அல்ல என்பதற்குச் சான்று. அவருக்கு உரிமை கொண்டாடும் நாம்தமிழர் தும்பிகளுக்கு இந்த வரலாறு எல்லாம் தெரியாது!!!
சரி, பொன்னப்பாவுக்கு #அண்ணா தம் தமக்கையின் மகளைக் கூட்டிக் கொடுத்தார் என்று நா கூசாமல் சொல்கிறானே இந்தப் பாவேந்தன், அந்தப் பொன்னப்பா தான் அண்ணாவின் அக்கா நாகம்மாவின் மகள் சுந்தரவள்ளியை மணந்து கொண்ட கணவர். பொன்னப்பாவும் திராவிட இயக்க சிந்தனையால் அண்ணாவுடன் இணைந்தவர் தான்.
இந்தப் பொன்னப்பாவின் இடத்தில் தான் திராவிடநாடு பத்திரிகை, பொன்னுசாமி முதலியாரிடம் ரூ500 கடனாகப் பெற்றுத் துவங்கப்பட்டது. வாய்க்கு வந்தபடி ஏசும் பேய்க்குப் பெயர் பாவேந்தன். தொத்தாவையும் விட்டுவைக்கவில்லை அவன். தொத்தா அண்ணாவின் சிற்றன்னை, அண்ணா அன்பின் வடிவானது அவர்களால் தான்.
தன் நகைகளை ஒவ்வொன்றாக விற்று அண்ணாவைப் படிக்க வைத்தவர் தொத்தா. அதனால் தான் தன் கடமையில் கண்ணாய் இருந்து படித்துக் கண்ணியம் காத்துக் கட்டுப்பாடோடு தன் கல்வியைக் கற்றார் அண்ணா. தொத்தாவின் அன்பும் பண்பும், திராவிட இயக்கத் தீரர்கள் அனைவரும் அறிந்தது, நாய்களின் சான்று தேவையில்லை.
அண்ணாவின் பண்பு, அண்ணா ஈவெகி சம்பத் நட்பில் விளங்கும், இருவரது நட்பும் துரியோதனன் கர்ணன் நட்பு போன்றது. ஆம், சுலோச்சனா அம்மையாரை அண்ணா தங்கையெனப் பாசமாக அழைத்ததும், இராணி அம்மையாரை சம்பத் அக்கா என்று அழைப்பதையும் அனைவரும் அறிவர். அண்ணாவைப் பார்க்காது சம்பத்தால் இருக்கவே முடியாது
அடிக்கடி ஈரோட்டிலிருந்து ஓடோடி வந்து விடுவார் சம்பத், அண்ணாவைக் காண. படிப்பை விடுத்து நாடகம் கூத்து எனத் திரிகிறானே அண்ணாதுரையோடு சேர்ந்து என்று பெரியாருக்குக் கோவம். இரண்டொரு நாட்களில் மீண்டும் ஈரோட்டிற்கே அனுப்பி வைத்து விடுவார் பெரியார். அதனையும் மீறி இருவரது நட்பும் மலர்ந்தது
சந்திரமோகன் (சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்) நாடகத்தில் சிவாஜியாக சம்பத்தை நடிக்க வைத்து அழகு பார்த்தவர் அண்ணா. சம்பத்தும் அருமையாக நடித்து அசத்துவார், பெரியார் தலைமையில் நாடகம் நடக்க, சம்பத்துக்குப் பதிலாக சிவாஜி பாத்திரம் ஏற்று நடித்தவர் தான் நடிகர் திலகம், காகபட்டராக அண்ணா.👇
திராவிட இயக்க உறவு என்பது தலைமுறைகள் கடந்தது இம்மண்ணில். இதனை அறியாதோர்க்கு அதன் வரலாறு தெரியாது, மண்ணாங்கட்டி உருட்டி வரலாறு என்பர். எனது தாய்க்கும் தாய்மாமனுக்கும் தமிழரசி(1949), வள்ளுவன்(1952) எனப் பெயர் சூட்டியவர் அண்ணா. மருமகளே மருமகனே என்று அன்போடு அழைத்தவர் அண்ணா.
1956 மாநில மாநாட்டில், தேர்தலில் போட்டியிடுவதென வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்த பொழுது, என் தாத்தாவை எம்.ஜி.ஆர். கட்டியணைத்து முத்தமிட்டார். 57,62,67 தேர்தல்களில் அண்ணாவின் இல்லத்திலேயே தங்கி தேர்தல் பணி செய்தார்கள் என் தாத்தாவும் பாட்டியும். அப்பொழுதே குடும்பக் கட்சி தான் திமுக
இராணி அம்மையாரை, அண்ணாவிற்கே தெரியாது முதன்முதலில் திமுக பொதுக்கூட்டத்திற்கு அழைத்துச் சென்றவர் எனது பாட்டி. சுயதம்பட்டத்திற்காக இதனைச் சொல்லவில்லை, அண்ணாவின் மாண்பை அருகிலிருந்து கண்டு உணர்ந்தவர்கள் என்பதனை தெளிவிக்கவே இவற்றைச் சொல்கிறேன். மூன்று தலைமுறைகளாக 1934முதல் ஒரே கொள்கை
தன்னுடைய வளர்ச்சியை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்பட்ட பாரதிதாசன், தன் நிலைப்பாட்டிலிருந்து மாறிக் கொண்டே இருந்தார். கவிஞர்கள் அப்படித்தான், நாம் அவர்கள் வசவுகளை சட்டை செய்யத் தேவையில்லை என்றார் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று சொன்ன கண்ணியம் மிகுந்த மாண்பின் மாண்பு #அண்ணா.
கொள்கைகளில் வலுவில்லாதார், சுயவளர்ச்சி வேட்கை கொண்டோர் செயற்பாட்டிற்கு, உளறல்களுக்கு பாவேந்தன் ஒரு உதாரணம். இவற்றை அண்ணாவும் அறிவார், வாழ்க வசவாளர்கள் என்றார்.
கலைஞர் பாவேந்தனின் பாடல்களை 90ல் நாட்டுடைமை ஆக்கினார், அவரது மகன் மன்னர்மன்னனுக்கு 99ல் திரு.வி.க. விருதளித்தார்.
அண்ணாவின் மருமகளின் கணவர் தான் பொன்னப்பா!
டி.என். இராமன் இசைவேளாளர், அண்ணா (நெசவாளர்) கைக்கோளர், பிறகெப்படி மேளமும் மேளமும் என்றான் பாவேந்தன்!?
அனைத்தும் கட்டுக்கதை
"வாழ்க வசவாளர்கள்"
வரலாறு அறிந்தோர் தன் குரல்வளையில் குத்திவிடுவர் என்றுணர்ந்து வாழட்டும் விசம் கக்கும் வசவாளர்கள்
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.