SSR 🐘 Profile picture
நாமார்க்குங் குடியல்லோம் நமனையஞ்சோம்🙏🙏

Sep 5, 2021, 10 tweets

வாழைத்தண்டு:- (திரேட்)

வாழைத்தண்டின் முக்கியமான பயன்களை பற்றி இங்கு காண்போம்.

குறைவான விலையில், அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த காய்கறிகளுள் வாழைத்தண்டும் ஒன்று. வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், சிறுநீர்ப்பிரச்சனைகள் விரைவில் குணமாகும்.

#மூலிகைஅறிவோம்

வாழைத்தண்டானது உடலின் தங்கி இருக்கும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் தினசரி வாழைத்தண்டு ஜூஸ் பருகி வந்தால் சிறுநீரக கல் கரைந்து காணாமல் போகும்.

சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரத்திற்கு மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், இரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்கள் இதை அடிக்கடி உணவாக எடுத்துக்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

மது, புகை போன்ற தீய பழக்கங்களால் அடிமைப் பட்டவர்களின் கல்லீரல் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும். கல்லீரல் பாதிப்பினால் கண் பார்வைக் கோளாறு, காமாலை நோய் தாக்கும்.

இவர்கள் வாழைத்தண்டை சூப் செய்து அருந்தி வந்தால், கல்லீரல் மீதான பாதிப்பு சற்று குறையும்.

உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் வாழைத்தண்டு சூப் செய்து தினமும் அருந்தி வந்தால் உடல் பருமன் குறையும்.

வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்த வாழைத்தண்டு, தோல் நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

இருமல், காச நோய், கர்ப்பப்பை நோய்கள், மஞ்சள் காமாலை, விஷக்கடிகளால் ஏற்படும் வலி மற்றும் இதர நோய்களுக்கு வாழைத்தண்டு மிகச் சிறந்த மருந்தாகத் திகழ்கிறது.

வயிற்றில் நீர்க்கட்டி இருந்தால் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு குடித்து வந்தால் நாளடைவில் குணமாகும்.

கோடைக் காலத்தில் வாழைத்தண்டு அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் வெப்பம் குறையும். உடலில் உள்ள நச்சுப் பொருளை வெளியேற்றி ஆரோக்கியம் தரும்.

வாழைத்தண்டில் உள்ள பொட்டாசியம் சத்துக்கள் நம்முடைய இதயத்தை கெடுக்கும் சோடியத்தின் அளவை குறைத்து,

இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு போன்ற இதயம் தொடர்பான பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது.

வாழைத்தண்டில் உள்ள சத்துக்கள் இரத்தத்தில் உள்ள குளுகோஸின் அளவை கட்டுப்படுத்துகிறது.

எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாழைத்தண்டை சேர்த்துக் கொள்வது நல்லது.

வறட்டு இருமல் உள்ளதா?

அது இரவு நேரத்தில் தூக்கத்தை கெடுத்து, தொண்டையை புண்ணாகி வீக்கத்தை ஏற்படுத்தும் இதற்கு வாழைத்தண்டில் சாறு எடுத்து குடித்து வந்தால் இருமல் காணாமல் போய்விடும்.

அன்றாட நம் உணவில் வாழைத்தண்டை சேர்த்துக் கொள்வதால், நெஞ்சு எரிச்சல் ஏற்படுவதை தடுத்து, இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்து, இரத்தசோகை வராமல் தடுக்கிறது.

வாழைத்தண்டினை பயன்படுத்தி அரேக்கியமாக வாழ்வோமாக,

நன்றி
வணக்கம் 🙏

#மூலிகைஅறிவோம்
#SSRThreads

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling