#Thread
#Diwali
கதை.1
ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
தேவர்களின் முறையீட்டின் படி மகாவிஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து கடலுக்குள் புகுந்து, அவனைக் கொன்று உலகத்தை மீட்டு மீண்டும் வந்து விரித்தார்.
(1/n)
விரித்த உலகம் அப் பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.
ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று, பவுமன் என்ற பிள்ளையைப் பெற்றது.
(2/n)
அவன் தனக்கு யாராலும் மரணம் நேர கூடாதென்று பிரம்மனை நோக்கி தவம் புரிந்தான்.
அவன் முன் வந்த பிரம்மனிடம் வரத்தை கேட்க, இவ்வுலகில் பிறக்கும் உயிர்கள்யாவும் ஒரு நாள் இறந்தே தீரும் என்றார் பிரம்மன்.
பின் அவன் என் தாயால் மட்டுமே மரணம் நேர வேண்டும் என்று வரம் வாங்கினான்.
(3/n)
மனிதனாக இருந்து ஒரு அசுரன் ஆக மாறியதால்,
அவன் நரகாசுரன் ஆனான் பின் தேவர்களை வருத்தினான்.
தேவர்களுக்காக விஷ்ணு, நரகாசூரனுடன் போர் துவங்கினார்.
விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை
(4/n)
விஷ்ணுவின் மனைவியில் ஒருவரான சத்தியபாமா (பூமாதேவியின்) அவதாரமாவார்.
சத்தியபாமாவை நரகாசுரனுடன் போர் தொடுக்க வைத்து நரகாசுரனை கொன்றான்.
இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
(5/n)
இந்த மகிழ்ச்சியை (நரகாசுரன் இறந்ததற்காக) அந்த நாளை தீபாவளியாக கொண்டாட வேண்டும்.
சரி இந்த கதையை ஆராய்வோம்.
பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா?
(6/n)
எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலைமீதோ எடுத்து ஏக முடியுமா? எங்கிருந்து தூக்குவது?
கடலில் ஒளிந்து கொள்வதாயின் கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்?
(7/n)
விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?
அரக்கனைக் கொன்று பூமியை விரித்தால் பூமிக்கு பன்றி மீது காதல் ஏற்படுவானேன்?
பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா?
(8/n)
பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?
நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது....
மற்றொரு ஊர் பிரகத் ஜோதி ஷா என்று சொல்லப்படுகிறது இது வங்காளத்தில் அசாம் மாநிலத்துக்கு அருகில் இருக்கிறது.
(9/n)
இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள்... வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?
இவைகள் எதையும் யோசிக்காமல் நாம் கொண்டாட்டத்தை மட்டும் கணக்கில் கொள்வது அறிவுடைமை ஆகுமா?
End ♥️
@The_69_Percent @esemarr3 @lineardood @thil_sek @theekameeka @TamilSpaces @bharath_kiddo @vpselva @TamilSpaceViz @MaduraiStark @YEM_AAR @RamyaMervin @ShaliniJKA @thisisRaj_ @simpleton_set @Vpayyal @yuva_uthvar @RamyaMervin @RamyaDpalani @karuneelamalar @TamilSpaces
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.