SSR 🐘 Profile picture
#வழித்துணைநயினாரேசரணாகதி 🙏 #வீரசைவன் 💪 #நோக்கம்சிவமயம் 🙏 #SSRThreads #தினம்_ஒரு_திருமந்திரம் #யானைக்காதலன்_SSR🐘 #அரிக்கொம்பன்🐘

Nov 18, 2021, 10 tweets

கொக்கரை:- (Thread)

நீண்டு நெளிந்த ஒரு மாட்டுக்கொம்புதான் சிவவாத்தியமான கொக்கரை.

பாலை நிலத்துக்கு உரிய கருவி கொக்கரை.

கோயில் இசைக்கருவிகளில் நாதஸ்வரம் முக்கியத்துவம் பெற்ற கருவி என்பது நம் எல்லாரும் அறிந்த ஒன்று இதன் தொடக்க வடிவமே கொக்கரை என்கிறார்கள் இசை வல்லுனர்கள்.

1/1

கொக்கரையை ‘சின்னக்கொம்பு’ என்றும் சொல்வர். திருவாரூர் தியாகராஜர் கோயிலில் இக்கருவி இசைக்கப்படுகிறது.

திருமுறை முழுவதும் கொக்கரை பற்றிய குறிப்புகள் உள்ளன.

திருமுறை 3,4,5,6,7,11 ஆகியவற்றில் கொக்கரை கருவி இடம்பெறுகிறது.

1/2
#நோக்கம்சிவமயம்

கந்தபுராணத்தில் பல இடங்களிலும் திருப்புகழில் சில இடங்களிலும் கொக்கரை பற்றிய குறிப்புகள் உள்ளன.

நக்கீரர், காரைக்காலம்மையார், அப்பர், சம்பந்தர், சுந்தரர், சேரமான் பெருமான் ஆகியோர் கொக்கரை பற்றி பாடியுள்ளனர்.

நான்காம் திருமறையில் ஈசனின் வடிவத்தை வர்ணிக்கும் ஒரு பாடலில்,

1/3

”கொக்கரை தாளம் வீணை பாணிசெய் குழகர்போலும்”
என்றொரு வரி இடம்பெற்றுள்ளது.

”கொக்கரை இசைக்குத் தகுந்த கூத்தாடும் ஈசன்” என்று பொருள்படும் இவ்வரியே இதன் பழமைக்குச் சான்று.

மேலும், சிவபெருமான் கொக்கரையின் இசைக்கேற்ப பாடுவதாகவும் திருநாவுக்கரசர் குறிப்பிடுகிறார்.

1/4

கொக்கரை யோடுபாட லுடை யான்குட மூக்கிடமா”.

”கொக்கரையன் காண்” என்பது ஆறாம் திருமுறை. கொக்கரையை சிவபெருமான் விருப்பமுடன் சேகரித்து வைத்து இருப்பதாக குறிப்பிடுகிறார் அப்பரடிகள்.

சங்கரநாராயணக் கோலத்தை வருணிக்கும் 11ஆம் திருமுறை சிவ பாகமான வலப்புறம் கொக்கரை ஆட்டம் நடப்பதாகவும்

1/5

திருமால் பாகமான இடப்புறம் குடமாட்டம் நடப்பதாகவும் குறிக்கின்றது.

திருவாருர் தியாகராஜர் கருவறை அருகில் பூதகனமொன்று கொக்கரையை வாசிப்பது போன்ற சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

இத்தனை பெரும் சிறப்புகள் பொருந்திய இக்கருவி இன்று வழக்கொழிந்து விட்டது.

1/6

கொக்கரை போன்ற பழந்தமிழர் கருவிகளை ஆலயங்களில் இசைக்க முயற்சி செய்பவர்களுக்கு அர்ச்சகர்கள், கோவில் நிர்வாகம், நீதிமன்றம் மூலம் தொல்லைகளும் தடைகளும் உள்ளன.
" தமிழே இசை இசையே சிவம்"
இது தான் திருகைலாய வாத்தியத்தின் தாரக மந்திரம்.

கொக்கரையும்,சங்கும் தான் உலகின் பழமையான இசைகருவி. 1/7

தமிழர்களின் பாரம்பரியத்தில் பயணித்து வந்த இந்த மாதிரி பழைமையான இசைக்கருவிகளை தற்காலப் பண்பாடு, கலாசார முன்னேற்றம் என்ற மாயைகளில் சிக்கி, அலட்சியம் செய்துவிட்டோம் பாரம்பரிய இசையோடு இணைந்து பயணிப்பதே உண்மையான தமிழர் பண்பாடும் கலாசாரமும் என்பதை உணர்வதே தெளிவு.

1/8

திருகைலாய வாத்தியத்தின் தந்தை திரு.இராமலிங்கம் ஐயா எங்களின் குருநாதர் அவர்களின் பாதம் பணிந்து அவரின் ஆசியுடன் #திருவிரிஞ்சை யில் அருள் பாலித்துகொண்டிருக்கும் எம்பெருமானுக்கு #வழித்துணைநாதர்சிவனடியார்_திருகூட்டம் நாளை முதல் கைலாய இசையுடன் கொக்கரையும் சேர்த்து வாசிக்க போகிறோம்.
1/9

உலகின் மிக பழமையான இசைகருவியை 1300 வருடங்களுக்கு மேல் பழமையான எங்கள் திருவிரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் கோவிலில் #கொக்கரை வாசிக்க வைத்த எம்பெருமானுக்கு நாங்கள் கடமை பட்டுள்ளோம்.

நன்றி
வணக்கம் 🙏

#கொக்கரை
#நோக்கம்சிவமயம்
#SSRThreads

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling