Dr. Nagajothi 👩🏽‍⚕️ Profile picture
| Doctor of Pharmacy (Pharm.D) | | I am a #PharmDian | | Rationalist | | Student of Periyar, Dr. B.R. Ambedkar and Marx | |Belongs to Dravidian Stock| 🌈

Feb 14, 2022, 14 tweets

#Thread

#சங்கஇலக்கியம்

#தமிழ்

#காதல்

#காதலை_கொண்டாடுவோம்

சங்கப்பாடல்களின் மொத்த எண்ணிக்கை 2381.
இதில் 1862 பாடல்கள் அகப்பாடல்களாகும்.
சங்கப்புலவர்களின் எண்ணிக்கை 473.
இதில் அகப்பாடல்களைப் பாடியோர் எண்ணிக்கை 378.

(1/n)

இதிலிருந்தே நாம் ஒன்றை புரிந்து கொள்ள முடியும் சங்க இலக்கியப் பாடல்களில் முதன்மையாகத் திகழ்வது அகத்திணையாகும்

உள்ளம் ஒன்றுபட்ட தலைவனும் தலைவியும் ஒன்றுகூடி தாம் அனுபவித்த இன்பம் இப்படிப்பட்டது என்று பிறருக்குச் சொல்ல முடியாததாய் அகத்தினுள் அனுபவிக்கும் உணர்ச்சியே அகத்திணை

(2/n)

உதாரணமாக சில பாடல்களை பார்க்கலாம்,

"விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய,
‘நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்த்தது;
நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்’ என்று
அன்னை கூறினள், புன்னையது நலனே –

(3/n)

அம்ம! நாணுதும், நும்மொடு நகையே,
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப,
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க! நீ நல்கின்,
இறைபடி நீழல் பிறவுமார் உளவே.

(நூல்: நற்றிணை - பாடல் - 172)"

(4/n)

இதன் பொருள்,

"தலைவன் தன் காதலியை பகற்பொழுதில் ஒரு புன்னைமரத்தின் அடியில் சந்திக்கிறான். அப்போது அவள் மரத்தைக் காட்டி இது நாங்கள் சிறு குழந்தையில் விளையாடிய பொழுது மறந்து போட்டு விட்ட விதையிலிருந்து முளைத்தது. பிறகு நாங்கள் அதற்கு பாலும் தேனும் ஊற்றி வளர்த்தோம்.

(5/n)

அப்போது எங்கள் தாய் உங்களை விட உங்கள் தங்கையான புன்னை மிக நல்லவள்.அவள் எதற்கும் அடம் பிடிக்க மாட்டாள் எனப் பாராட்டினாள்.எனவே என் உடன்பிறப்பான இப்புன்னை நிழலில் உங்களுடன் பேச வெட்கமாக இருக்கிறது.இங்கு வேறு இடங்களும் இருக்கின்றன.நாம் அங்கே போய்ப் பேசிக் கொண்டிருப்போம் என்றாள்
(6/n)

காதலர்களின் உணர்வுகளையும், காதலின் மயக்கத்தையும் நானத்தையும் இந்த பாடல் காட்டுகிறது.

அதே போல இன்னொரு எடுத்துக்காட்டை பார்க்கலாம். இந்த பாடல் கண்டதும் காதல் எனும் பொருள் பட சிலாகித்து பாடியுள்ளார் கம்பர்.

(7/n)

"எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி
கண்ணொடு கண் இணை கவ்வு ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்."
(கம்பராமாயணம் - 1.519)

இதன் பொருள் இவ்வாறு வருகிறது.

(8/n)

"கணக்கில் அடங்காத நல்ல குணங்கள் உள்ள சீதையும் இராமனும் ஒருவரை ஒருவர் நோக்கினார்கள். அவர்கள் கண்கள் ஒன்றை ஒன்று கவ்விக் கொண்டது. அவர்கள் உணர்வுகள் ஒன்று பட்டது. அண்ணலும் நோக்கினாள் , அவளும் நோக்கினாள்"

(9/n)

இராமனும் சீதையும் ஒருவரைக் கண்டு ஒருவர் விரும்பியதையும், இராமன் சென்றதும், காதல் நோய் கொண்டு சீதை தவித்ததையும், இராமன் சீதை நினைவால் ஏங்கியதையும் 56 பாக்களில் விளக்கி உள்ளார் கம்பர்.

(10/n)

இப்படி காதலை அள்ளி அள்ளி தந்த சங்க இலக்கியம் படைத்த தமிழர் வாழ்வில் பிரிக்க முடியாத அளவு கலந்து நிற்கிறது காதல்.

இதில் மிக முக்கியம் இன்று நாம் காதலுக்கு வகுத்து வைத்துள்ள எந்த இலக்கணமும் தமிழர் மரபில் இல்லை. அதை எடுத்து சொல்ல இந்த ஒரு பாடல் போதுமானது.

(11/n)

"யாயும் ஞாயும் யாராகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல்நீர் போல,
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே!"

(பாடல்:குறுந்தொகை - 40)

(12/n)

இதன் பொருள்,

"என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் யார் யாரோ
என் தந்தையும் உன் தந்தையும் எந்த முறையில் உறவினர்?
நானும் நீயும் எவ்வாறு முன்பு அறிந்தோம்?
செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் போல
அன்புடைய நம் நெஞ்சம் தாமாக ஒன்றுபட்டனவே."

இவை சில உதாரணங்கள் மட்டுமே.

(13/n)

இப்படி காதலுக்கு காதலர்களின் மனங்கள் இணைந்தால் போதும், வேறு எதுவும்/ யாரும் காதலை தடுக்க இயலாது, என்று சொல்லும் சங்க இலக்கியம் படைத்த தமிழர்கள், காதலை கொண்டாட என்றும் தவறியதில்லை.

"காதலை கொண்டாடுவோம்
வாழ்வியல் சிறக்க"

End ♥️

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling