அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Mar 13, 2022, 10 tweets

#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் நமது ஒவ்வொரு மூச்சும் 'ராம்’ 'ராம்' என்றே உட்சென்றும், வெளியேறுதலும் வேண்டும். நாம் அறியாமல் செய்த தவறுக்கு ராம நாமமே மிகச்சிறந்த பிராயசித்தம். அறிந்தே செய்த தவறானால் அதற்கு வருந்துவதும் தண்டனையை ஏற்பதும், பிராயசித்தமும் ராம நாமமே. காலால் நடக்கும் ஒவ்வொரு

அடியும் ராம் ராம் என்றே நடக்க வேண்டும். எல்லா விதமான கஷ்டங்களுக்கும் நிவாரணம் ‘ராம நாம ஜெபமே.’ ராம நாம ஜெபத்திற்கு குரு கிடைக்கவேண்டும் என்று கால தாமதம் செய்தல் கூடாது. காலை படுக்கையில் விழிப்பு வந்தவுடனே சொல்லவேண்டியது 'ராம நாமம்.' ராம நாம ஜெபத்தில் நாம் இருந்தால் நமது கர்ம

வினைப்படி ஏதேனும் துக்கமோ அவமானமோ நிகழவேண்டியதாயின் அவைகள் தடுக்கப்படும். எந்த இடத்திலும், எந்த நிலையிலும் 'ராம நாமத்தைச் சொல்லலாம். எங்கும் உணவு உண்ணுமுன் 'ராம நாமா' சொல்லலாம். இறைவனும் அவனது நாமாவும் ஒன்றே! ராம நாமத்தை எழுத மனம், உடம்பு, கைகள் ஒருமித்து செயல்படவேண்டும். ஆனால்

ராம நாமத்தைச் சொல்ல மனம் மட்டும் போதும். இதைதான் "நா உண்டு, நாமா உண்டு" என்றனர் பெரியோர்கள். ஒரு வீட்டில் உள்ள பெண் ராம நாமத்தைச் சொன்னால் அந்த பெண்ணின் குடும்பம், கணவன் குடும்பம், குழந்தைகள், பெற்றோர்கள் அனைவரும் பிறப்பு, இறப்பு சக்கரத்திலிருந்து விடுபடுவார்கள். அந்த வீட்டினில்

தெய்வீகம் நிறைந்துவிடும். அதுவே கோவிலாகும். எல்லாவித சாஸ்திர அறிவும் ராம நாமாவில் அடங்கும். எல்லாவித நோய்களுக்கும் 'ராம நாமம்’ சிறந்த மருந்து. துன்பங்களுக்கும் அதுவே முடிவு. நமது இலட்சியம் அழியா ஆனந்தமே. அதை ராம நாம ஜெபத்தால் பெற முடியும். ராம நாமாவினால் வினைகள் எரிந்து, எரிந்து

நோய்கள் குறையும். சஞ்சிதம், ஆகாமியம் கருகி ப்ராரப்தம் சுகமாக அனுபவித்து ஜீரணிக்கபடும். நமது பயணத்தில் பஸ்சிலோ, காரிலோ, ரயிலிலோ, பைக்கிலோ செல்லும் போதும் 'ராம நாமா' சொல்லலாம். அதனால் விபத்துக்கள் தவிர்க்கப்படும். காசி விஸ்வநாதர் கோவிலில் மாலை வழிபாட்டின் போது (சப்தரிஷி பூஜையின்

போது) ஒவ்வொரு நாளும், வில்வ தளங்களில் சந்தனத்தால் ராம நாமம் எழுதி, அவற்றை விஸ்வநாதருக்கு சமர்ப்பிக்கிறார்கள். ராம நாமத்தை உரக்க சொல்லுங்கள். காற்றில் ராம நாம அதிர்வு பரவி, நம்மை சுற்றிலும் காற்றில் ஒரு தூய்மையை ஏற்படுத்தும். கேட்கும் மற்றவருக்கு உள்ளும் அந்த தூய அதிர்வு ஊடுருவி

தூய்மை மற்றும் அமைதியை கேட்பவருக்கும் தரும். சுற்றியுள்ள மரம், செடி, கொடிகள், பறவைகள், விலங்குகள் எல்லாம் 'ராம நாமத்தைக்’ கேட்டு கேட்டு அவைகளும் மிக உயர்ந்த பிறவிகளை பெறும். ராம நாமவை சொல்லும் பொழுது ஏற்படும் தூய அதிர்வானது காற்றில் பதிந்துள்ள மனிதர்களின் தீய எண்ணங்களால் ஏற்பட்ட

தீய அதிர்வுகளை, தீய சக்திகளை நோய்க் கிருமிகளை அழித்துவிடும். ராம நாம அதிர்வு சாந்தம், பொறுமை, பணிவு, உண்மை, தூய்மைக்கு காரணமான ராமரின் குணங்களை ஏற்படுத்தும்.('யத் பாவோ தத் பவதி'--எதை நினைக்கிறாயோ அதுவே ஆகிறாய்!) ராம நாமத்தைச் சொல்ல சொல்ல நாம் பரப்ரம்மமே ஆகிவிடுகிறோம். அகில

உலகையும் வியாபித்து காக்கும் விந்தை மிக்கதோர் நுண்ணிய சக்தியே ராம். அதுவே உருவம் கொண்டபோது தசரத ராமனாக, சீதாராமானாக, ரகுராமனாக, கோதண்ட ராமனாக பெயருடன் ( நாம ரூபமாக ) வந்தது.
#ஜெய்ஶ்ரீராம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling