#Thread
#பகவத்கீதை
“நானே நால்வகை (பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என மக்களை நான்கு வகையினராகப் பிரித்தல்) வருண அமைப்பினை அவரவர்களுக்குள்ள செயல் வேறுபாடுகளுக்கு ஏற்றவாறு படைத்துள்ளேன். எனவே நானே இந்த சதுர்வருணங்களை உருவாக்கியவனாவேன்.” - (கீதை 4:13)
(1/n)
“ஒருவன் இன்னொரு வருணத்தானின் தொழிலைச் செய்வது எளிதாக இருப்பினும், ஒருவன் தன் வருணத்திற்குரிய தொழிலை மிகுந்த திறனோடு செய்ய முடியாத போதிலும் தன் வருணத்திற்குரிய தொழிலைச் செய்வதே மிகச் சிறந்தது.
(2/n)
ஒருவன் தன் வருணத்திற்குரிய தொழிலைச் செய்தால் மரணமே நேர்வதாக இருந்தாலும் தன் வருணத் தொழிலைச் செய்வதே இனியது: ஆனால் பிற வருணத்தாரின் தொழிலைச் செய்வது ஆபத்தானது.”
(கீதை 3:35)
(3/n)
“மக்கள் தத்தமக்குரிய தொழில்களைச் செய்ய வேண்டும் என்று விரும்பும் அறிவாளியானவன், தம் தொழிலில் பற்றுடைய அறிவீனர்களுக்குப் புத்திக் குழப்பத்தை உண்டாக்கக் கூடாது. அவனவன் தமது வருணத்திற்குரிய தொழிலைச் செய்து மற்றவர்களையும் அவ்வாறே செய்விக்க வேண்டும்.
(4/n)
கற்றறிந்தவன் தன் தொழில் ஈடுபாடு இல்லாதவனாக இருக்கலாம். ஆனால் தம் தொழிலில் ஈடுபாடுடைய கல்லாதோரையும் மந்த புத்தியுள்ளவர்களையும் தம் தொழிலை விட்டு வேறு தொழிலைச் செய்வதற்குரிய கெட்ட வழியில் செல்வதற்குக் கற்றறிந்தவன் விட்டுவிடக்கூடாது.”
(கீதை 3:26, 29)
(5/n)
“அருச்சுனா! கடமைகளும் தொழில்களுமான இந்தத் தருமம் (நால் வருணமான இந்த மதம்) தளர்வுறும் போதெல்லாம், இந்த இழிவுக்குக் காரணமானவர்களை அழித்துத் தருமத்தை நிலை நாட்டுவதற்காக நானே பிறப்பேன்”
(கீதை 4:7-8)
(6/n)
"என் உற்றார் உறவினர்களைக் கொல்லுவது நமது குலத்தையே அழிப்பதாகும். அவ்வாறு அழிப்பதென்றால் நமது பண்டைய குலதர்மம் அழிந்துவிடும். அதனால், இந்தத் தவறைச் செய்பவர்கள் நரகத்திற்குத்தான் போவார்கள்.''
(கீதை 1: 39)
(7/n)
மக்களை அழிப்பது பாவமில்லையாம். ஆண் மக்களை அழித்துவிடுவதால், வீட்டில் பெண்கள் வர்ணக் கலப்புக்கு ஆளாகிவிடுவார்களாம். இது அர்ஜூனன் சொல்வது.
பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள். (கீதை - 9 : 32)
இவை சில உதாரணங்கள் மட்டுமே.
(8/n)
இப்படி பெண்களுக்கும் பிராமணர் அல்லாத மக்களுக்கும் அநீதி இழைக்கும் கருத்தை உடைய பகவத் கீதையை பள்ளிகளில் கற்பிப்பது அப்பட்டமான சூழ்ச்சி.
சாதி கட்டுப்பாட்டை வர்ண கோட்பாட்டை தூக்கிப்பிடிக்கும் பகவத்கீதையை கொளுத்தாமல் பள்ளிகளில் கற்பிப்பது சனாதனிகளின் சதி மட்டுமே.
(9/n)
உடன் பிறப்புகளை கொல்லச் சொல்லிக் கொடுக்கும் கீதையை, சாதிக்கு ஒரு நீதி சொல்லும் கீதையை, பெண்களுக்கு எதிரான கருத்தை விதைக்கும் கீதையை கொளுத்துவோம்.
End ❤️🔥
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
