அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Apr 21, 2022, 7 tweets

#சங்கரஜெயந்தி 6.5.2022. ஆதி சங்கர பகவத் பாதாள், சேது-ஹிமாச்சலம் மூன்று முறை பாத யாத்திரையாக திக்விஜயம் செய்து, தன்னுடைய தரிசனத்தால், மக்களை புனிதப்படுத்தி, தன் வாக் அம்ருதத்தினால் அனைவருக்கும் தெளிவு பிறக்கும்படி செய்தார். #ஆதிசங்கரர் #திருவானைக்காவிற்கு வந்த பொழுது,

திருவானைக்காவில் அன்னை அகிலாண்டேஸ்வரி இந்த அண்டசராசரத்திற்கும் தாயார், கருணையே வடிவானவள் தான் ஆனால் இந்த கலியில மக்கள் ரொம்ப பாவம் செய்வதால் கோபமாக உக்கிர ரூபத்தில் அங்கு இருந்தாள். அப்படி ரொம்ப கோபத்துடன் இருந்த அவளை சாந்தப் படுத்தி, மக்களுக்கு அனுக்கிரஹம் கிடைக்க செய்யணும்

என்று சங்கரர் நினத்தார். என்ன கோபமாக இருந்தாலும் அம்மாக்கு தன் பிள்ளையை பார்த்தால் மனஸ்சாந்தி ஏற்படும், சந்தோஷம் வந்துவிடும் என்று எண்ணம் உதிக்க, விநாயகரை அம்பாளுக்கு முன் பிரதிஷ்டை செய்தார். திரும்ப அந்த உக்கிரமான கோபம் வந்துவிடக் கூடாது என்பதற்காக, உக்கிர கலையை, இரண்டு

தாடங்ககளாகச் செய்து, இரண்டு காதுகளிலும் ஸ்ரீ சக்ரம், சிவ சக்ரம் என்று அம்பாளின் காதில் அணிவித்தார். அம்பாளின் தாடங்கத்தின் மகிமை, அவளின் பாதிவ்ரத்யத்தை காட்டுகிறது என்று சௌந்தர்ய லஹரி ஸ்தோத்ரம் சொல்கிறது. அப்படி அந்த அம்பாளை ஆதி சங்கரர் குளிர செய்தார். #தமிழ்நாட்டுக்கும் ஆதி

சங்கரருக்கும் நிறைய தொடர்பு உள்ளது. திருச்செந்தூரில் சுப்ரமண்ய புஜங்கம் பாடி இருக்கிறார். ஆதி சங்கரர் பௌத்தர்களுடன் வாதாடும் போது திருவிடைமருதூரில் பகவான் அவருக்கு ரெண்டு கைகளையும் தூக்கி அத்வைதமே சத்யம் என்று பிரமாணம் செய்திருக்கார். கேரளத்தில் காலடியில் தான் பிறந்தார்.

தமிழ்நாட்டுக்கு நிறைய வந்திருக்கிறார். ராமநாத ஸ்வாமியை தரிசனம் செய்து பாடி உள்ளார். திருப்பதியில் தனாகர்ஷண யந்த்ரம் பிரதிஷ்டை செய்தார். கடைசியில் காஞ்சீபுரத்துக்கு வந்து அங்கேயும் காமாக்ஷி தேவி உக்ரமாக இருந்த போது சாம்யம் பண்ணி ஸ்ரீ சக்ர பிரதிஷ்டை செய்துள்ளார். இங்கே சர்வக்ஞ

பீடம் எறி இருக்கார். சௌந்தர்ய லஹரி ஸ்தோத்ரம் பாடி இருக்கார். ஒரு மடம் ஸ்தாபனம் செய்து பின் காமாக்ஷி அம்பாளோடு ஐக்கியம் அடைந்தார். ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling