அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Apr 25, 2022, 12 tweets

#மகாபெரியவா #பூர்வாசிரம_வாழ்க்கை மஹா பெரியவா, சுப்பிரமணிய  சாஸ்திரிகள், மஹாலக்ஷ்மி அம்மையார் என்ற திவ்ய தம்பதிகளுக்கு இரண்டாவது குழந்தையாக வைகாசி அனுஷத்தில் மே 20 ம் தேதி 1894 அவதாரம் செய்தார். பெரியவாளுக்கு முன் பிறந்தவர் கணபதி சாஸ்திரிகள். பிறகு ரொம்ப வருடங்கள் கழித்து

பிரார்த்தனை செய்து, அவர்கள் குலதெய்வமான சுவாமிமலை முருகனை பிரார்த்தனை செய்து குழந்தையாக பிறந்தவர் மஹா பெரியவா. அதனால் பெரியவாளுக்கு, ஸ்வாமிநாதன் என்று பேர் வைத்தனர். அடுத்து, லலிதாம்பா, பிறகு சாம்பமூர்த்தி, சதாசிவம் என்கிற சிவன் சார், கடைசியாக கிருஷ்ணமூர்த்தி பிறந்தனர். இவர்கள்

எல்லோரும் தாத்தாவில் இருந்து ஆரம்பித்து, அதற்கு முன் எத்தனை தலைமுறைகளோ தெரியாது அனைவரும் மடத்த்திலிருந்து ஒரு பைசா கூட எடுத்துக்காமல் மடத்திற்காக வாழ்க்கை முழுதும் சேவை செய்திருக்கிறார்கள். இந்த ஆறு பேரோட பேரைப் பார்த்தாலே, கணபதி, ஸ்வாமிநாதன், லலிதாம்பா, சாம்பமூர்த்தி, சதாசிவம்,

கிருஷ்ணமூர்த்தி என்று இந்த ஆறு பெயர்களும் ஷண் மதத்தில் இருக்கும் ஆறு தெய்வங்களின் பெயராக உள்ளன. அப்படி ஓர் அழகு!
ஸ்வாமிநாதன் பிறந்து, வளர்ந்து வரும் போது நல்ல சூட்டிகையா இருந்திருக்கிறார். இவர் அப்பா inspector of schools பதவியில் இருந்தார். ஒரு முறை சிங்காரவேல முதலியார் என்று ஒரு

பள்ளி கல்வி இன்ஸ்பெக்டர் விழுப்புரத்தில் இவர் படித்துக் கொண்டு இருக்கும் பள்ளியை ஆய்வு செய்ய வந்து கேள்விகள் கேட்கிறார். ஓலை தடுப்பு போட்டு ரெண்டு மூணு வகுப்புகள் கொண்ட பள்ளி அது. ஒரு வகுப்பில் அவர் கேள்வி கேட்டிருக்கிறார். யாரும் பதில் சொல்லவில்லை. தட்டிக்கு அந்தப்பக்கம் இருந்து

ஸ்வாமிநாதன் பதில் சொல்கிறார். அவர் படிப்பது ஆறாம் வகுப்பு. பதில் சொல்வது எட்டாம் வகுப்பு பாடத்திற்கான கேள்விக்கு. எப்படி உனக்கு தெரியும் என்று வாத்தியார் கேட்கிறார். “எங்க அண்ணா கணபதி வாய்விட்டு படிப்பார் அதனாலே தெரியும்” என்று சொல்கிறார். உடனே சிங்காரவேலு முதலியார், “இவன் ரொம்ப

புத்திமானா இருக்கான். ரொம்ப தேஜஸா இருக்கான். ரொம்ப நன்னா வருவான். பெரிய பதவிக்கு வருவான்” என்கிறார். அந்த பெரிய பதவி “லோககுரு” என்கிற பதவி என்பது அப்பொழுது யாருக்கும் தெரியவில்லை. இதற்கு நடுவில் சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள், 66 வது காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் அங்கே பக்கத்து

ஊருக்கு வருகிறார். ஸ்வாமிநாதனை கூட்டிக்கொண்டு போகிறார்கள். ஸ்வாமிநாதனும் ஆசார்யாளும் கொஞ்ச காலத்திலேயே மிகவும் நெருக்கமாக ஆகிவிடுகிறார்கள். “அடிக்கடி கூட்டிண்டு வா குழந்தையை” என்று இவர் குடும்பத்தாரிடம் சொல்லி நிறைய முறை சுவாமிநாதனுடன் பேசுகிறார்.
ஒரு நாள் இவரும் இவர் நண்பரும்

வீட்டில் கூட சொல்லாமல் கிளம்பி வெளியூரில் இருக்கும் மடத்துக்கு சென்றுவிடுகிறார்கள். வீட்டில் அனைவரும் இவரை காணாமல் தேடிக் கொண்டிருக்க, ஆச்சார்யாள் ஆள்விட்டு சொல்லி அனுப்புகிறார். “குழந்தை இங்க தான் இருக்கான். பத்திரமா இருக்கான். நான் அவனை நாலு நாள் வெச்சுண்டிருந்து, அனுப்பறேன்”

என்று சொல்லி அனுப்புகிறார் குருநாதர். இந்த பையன், ஸந்யாஸிகளை தேடிப் போறானே என்று அவர் அப்பா, கிருஷ்ணஸ்வாமி ஐயர் என்கிற தன் நண்பரிடம் சுவாமிநாதன் ஜாதகத்தை காட்டி “ஏதாவது தெரியறதா பாரேன், இவன் என்னவா வருவான்?” என்று கேட்கிறார். அந்த ஜாதகத்தை, பார்த்த உடனே, “குழந்தையை நீ அழைச்சிண்டு

வா” என்று சொல்கிறார். குழந்தையை உயரமா ஒரு திண்ணையில் உட்கார வைத்து, கிருஷ்ணஸ்வாமி ஐயர் அவர் கால்களை நன்கு அலம்பி, உத்துப் பார்த்துவிட்டு, ரெண்டு கால்களையும் எடுத்து, தலைமேல் வைத்துக் கொள்கிறார். “என்ன மாமா, என்ன மாமா”என்கிறார் சுவாமிநாதன். அவர் அப்பாவிடம், “இந்த காலை, நான்,

இன்னிக்கு பிடிச்சேன். இது ராஜாகளும், ராணிகளும், உலகத்தில் இருக்கும் எல்லாரும், எல்லா மஹான்களும் நமஸ்காரம் பண்ணப் போற பாதங்கள். இதோட பெருமையை என்னால் வாயால் சொல்ல முடியாது. நீ ரொம்ப கொடுத்து வெச்சவன் ஸுப்ரமணி” என்கிறார். அப்பேற்பட்ட, ஒரு பெரியவா🙏🏻
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling