மோடி மல்லையா, நீரவ்மோடி மாதிரி கடன்காரனுங்கள எல்லாம் தப்பிக்க விட்டுட்டார் பாத்தீங்களா - எட்டு வருஷமா காங்கிரஸ், தி.மு.க சொல்ற முக்கியமான குற்றச்சாட்டு -
இருபது முப்பது வருஷம் திருடித், திருடி சொகுசா வாழ்ந்த ஒருத்தன் இருக்கற எடத்த விட்டு, சொத்தவிட்டு, சொந்தங்களவிட்டு
பொறந்த நாட்டை விட்டே ஓடறான்னா அதுக்கு என்ன காரணம் இருக்க முடியும்? -
நம்மள்ள பலர் நம்ப ஊர்லயே பாத்திருப்போம் ஊரச்சுத்தி கடன் வாங்கி, திருப்பிக் கட்ட முடியாம ஊரவிட்டு ஓடிப்போனவங்கள, அது எவ்வளவு அசிங்கம், அவன் செத்ததுக்குச் சமம்னு நாம நெனைப்போம் -
இது மல்லையாவுக்குக் கெடையாதா?-
இருக்கு, அப்பறம் ஏன் ஓடிப்போனான்?-
அதான், இருபது முப்பது வருஷமா சொகுஷா வாழ்ந்தவன் திடீர்னு ஓடிப்போறான்னா இங்க அவனால இனி திருடி, ஏமாத்தி பழயபடி சொகுசா வாழ முடியாம தடுக்க யாரோ அல்லது ஏதோ புதுத் தொல்லை வந்திருக்குன்னு அர்த்தம்-
அந்த யாரோ யார்னா 2014-ல பிரதமர் ஆன #மோடி-
அந்த எதுவோ என்னன்ன #IBC -
அதாவது #Insolvency_and_Bankruptcy_Code_
தனிநபரா இருந்தாலும் சரி பெரிய, பெரிய நிறுவனங்களா இருந்தாலும் சரி பேங்ல கடன் வாங்கறதே திரும்பக் கட்டத் தேவையில்லைன்ற மனநிலையோடதான் கடன் வாங்கறாங்க-
ஒரு வேளை சட்டநடவடிக்கை எடுத்தா கூட கோர்ட் கேஸ்னு அவனோட ஆயுள் முடியற வரைக்கும் இழுத்துக்கிட்டே இருக்கலாம் இதுதான் 2015 வரைக்கும் இருந்தது -
ஆனா, மோடி அரசு டிசம்பர் 2015 - ல #IBC மசோதா அறிமுகம் செஞ்சதுக்கு அப்புறம்தான்
கடன்காரனுங்களுக்கெல்லாம் அஸ்தில ஜூரம்னு சொல்லுவாங்களே அது வந்துச்சு -
#IBC-பத்தி சுருக்கமா, ஒருத்தன் அல்லது ஒரு கம்பெனி தொடர்ந்து 90 நாள் தவனை கட்டாம இருந்தா அவனோட கடன வாராக்கடனா மாத்தி (Write off) சட்டரீதியா வசூல் செய்ய ஏற்பாடு செய்றது -
அதன்படி இந்தத் தீர்பாயம் ஆறுமாசம் (180 நாள்) அவகாசம் கொடுக்கும்-
அதுக்குள்ள கட்ட முடியலன்னா, திரும்ப ஒரு 90 நாள் அவகாசம் அப்பவும் முடியலன்னா அந்த நிறுவனம் தீர்பாயம் Control-க்கு போய்டும் -
அடமானம் கொடுத்த சொத்துக்கள வித்து பணத்த வசூல் பண்ணுவாங்க-
சம்பந்தப்பட்ட நபர் திவால் ஆனாத அறிவிச்சுடுவாங்க (செத்த பொணத்துக்குச் சமம்)-
இது தான் #IBC யோட சுருக்கம்-
சட்டம் அறிமுகமானது 2015 டிசம்பர்ல மல்லய்யா ஓடிப்போனது 2016 மார்ச் 2-ல-
சட்டம் நிறைவேறினது மே 5 2016-ல-
குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்தது மே 28 2016-ல-
ஆக, ஆப்பு ரெடியாய்டிச்சின்னு தெரிஞ்சே தான் மல்லய்யா எஸ்கேப் ஆகியிருக்கான்-
அவனோட சேத்து அவனமாதிரியே 36 கடன்காரனுங்களும் வெளிநாடுகளுக்குத் தப்பிச்சி நாயப் போல ஓடிப்போயிருக்காங்கன்னா அதுக்கு மோடி மட்டும்தான் காரணம்-
ஆனா, அவனுங்கத் தப்பிக்க விட்டது மோடி இல்ல 70 வருஷமா இங்க அதிகாரத்துல இருக்கற வாங்கி மட்டுமே பழகின அதிகாரிங்கதான் காரணம் (அத அப்பறம் விரிவா பேசுவோம்)-
இப்ப இந்த #IBC வந்ததால என்னத்த சாதிச்சீங்கன்னு நீங்க மனசுல நெனைக்கறது எனக்குக் கேட்குது-
2016 இந்தச் சட்டம் வர்றதுக்கு முன்னாடி வாராக்கடன்றது ஒரு வருஷத்துக்கு வெறும் 2000 கோடி கூட வசூல் ஆகாது-
ஆனால் -
இந்தச் சட்டம் வந்ததுக்கு அப்பறம் -
கடந்த 2016 - 17 நிதி ஆண்டில் 61,930 கோடி ரூபாய் -
2017 - 18 நிதி ஆண்டில் 77,563 கோடி ரூபாய் -
2018 - 19 நிதி ஆண்டில் 1,21,076 கோடி ரூபாய் -
ஆக,
மூன்று வருடங்களில் 2,65,569 கோடி ரூபாய் வசூல் ஆகியிருக்கு-
இந்தச் சட்டத்துக்குப் பயந்துதான் 21,000 கம்பெனிகள் தங்களோட நிலுவைத் தொகையக் கட்டி இருக்காங்க, கட்டிகிட்டே இருக்காங்க-
மனசாட்சியத் தொட்டுத் சொல்லுங்க இது சாதனை இல்லையா?-
ஊரான் வீட்டு நெய் மாதிரி காங்கிரஸ் வாறி எறச்ச கடனயெல்லாம் மோடி அரசாங்கம் உயிரக் கொடுத்து வேலை செஞ்சு மீட்டுட்டிருக்கு அது மட்டும்தான் உண்மை -
ஏன்னா, அது உங்க பணம், என் பணம்-நம்ம பணம்
நீங்க யாரும் மோடிய பாராட்ட வேண்டாம்_
தயவு செஞ்சு அநியாயம் பேசாதீங்க அது பாவம் -
தேசப்பணியில் என்றும்-
நன்றி நமுரா முகநூல்
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.