பிடிசாம்பல் Profile picture
உனக்கான அடையாளம் தனிமையில் வீழ்ந்து கிடப்பதல்ல தனியாக நின்று போராடி ஜெயிப்பதுவே ..சே.. I BELONG TO THE DRAVIDAN STOCK

May 11, 2022, 15 tweets

சற்று நீண்ட பதிவு. பொறுமையோடு படித்தால் நாம் எப்படியெல்லாம் பாஜக அரசால் வஞ்சிக்கப்பட்டுள்ளோம் என்பது புரியவரும்.

வெள்ளையாக இருக்கறவன் பொய் சொல்லமாட்டான்,உயரிய பதவியில் இருக்கறவங்க பொய் சொல்ல மாட்டாங்க என்பதெல்லாம் பாஜக கட்சியில் கிடையவே கிடையாது.

பிரதமரே கூட நிறைய இடங்களி்ல் உண்மைக்கு புறம்பாக பேசியுள்ளார்.

அண்மையில் துக்ளக் விழாவில் மேடையேறிய அம்மையார் இந்திய நிதியமைச்சர் பல தவறான தகவல்களை பேசிவிட்டு போயுள்ளார். அப்படி பேசியதில் எது உண்மை?

முதலில் அவர் கூறியவை என்ன?

1.ஒன்றிய அரசு தமிழக அரசுக்கு போதிய நிதி வழங்கவில்லை என்பது தமிழக அரசின் குற்றச்சாட்டு - இது உண்மையல்ல.

2. சரக்கு மற்றும் சேவை வரி நிலுவைத் தொகை தொடர்பாக தமிழக அரசு சொல்லும் தகவல்கள் பொய்யானவை.

3. மத்திய-மாநில அரசுகளுக்கிடையே சுமூக உறவு இருப்பதில்லை.

பாகுபாடு பார்க்கிறார்கள் ஒன்றிய அமைச்சர்கள் எனக் கூறிவரும் குற்றச்சாட்டுகள் எல்லாமே பொய் பிரச்சாரம்.

4. ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல் டீசல் விலையை கொண்டுவர தமிழக நிதியமைச்சர் ஒப்புக்கொண்டால் அதனை ஜிஎஸ்டி கவுன்சிலில் கொண்டு விவாதிக்க தயாராக இருக்கிறோம்.

5. தங்களை ஓரவஞ்சனை செய்வதாக தமிழக அரசு சொல்வதும், தங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என்பதெல்லாம் பிரிவினைவாதம் என்று அம்மையார் பேசி உள்ளார்.

முதல்வர் அம்மையாரை புதுடெல்லியில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார்.

அம்மையார் முழுவதுமாக அதைப்படித்திருந்தால் பல கேள்விகளின் உண்மைத்தன்மை அறியமுடியும்.

உண்மையான நிலவரம் என்ன?

இதோ:

2015-2016 காலக்கட்டத்தில் 14 வது நிதிக்குழு ஊராட்சிகளுக்கு அடிப்படை மானியமாக 7899.69 கோடி ரூபாய் பரிந்துரைத்தது.

2016-17 ஆண்டிற்கான நிதியாக 494.09 கோடி ரூபாயை விடுவித்துள்ளது ஒன்றிய அரசு. அதற்கான பயன்பாட்டு சான்றிதழ் அனுப்பியுள்ளது அன்றைய அதிமுக அரசு. 2017-18 ஆண்டின் மானியக் கோரிக்கையை வைத்த போதும், தொடர்ச்சியாக 2018-19,2019-20 ஆகிய ஆண்டுகளில் மானியமாக வழங்க வேண்டிய ...

எந்த நிதியையும் ஒதுக்கவில்லை #பாஜக அரசு.

அதே ஆண்டுகளில் மற்ற பெரும்பாலான மாநிலங்களுக்கு நிதியைத் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே அடிப்படை மானிய நிலுவைத்தொகை 548.76 கோடியும், செயல்பாட்டு மானியமாக 2,029.22 கோடி தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என..

முதல்வர் தந்துள்ள நிதியமைச்சருக்கான மனுவில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது.

இது போக,

சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு நிலுவைத் தொகையான 13,504.74 உட்பட 20860.40 கோடி ரூபாய் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு அளித்தாகவேண்டும்.

இவை விடுவிக்கப்பட்டால் தமிழ்நாடு தனது நிதி நெருக்கடியிலிருந்து மீண்டு வர உதவியாக இருக்கும். இதனை உடனடியாக விடுவிக்க கோரி முதல்வர் தனது மனுவில் இந்திய நிதியமைச்சருக்கு கேட்டுள்ளார்.

#துக்ளக் விழாவில் பேசிய அம்மையார் ஓன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய..

நிலுவைத் தொகையைப் பற்றி பேசாமல் மற்ற மாநிலங்களுக்கு விடுவித்த விவரத்தை கூறியதன் பின்னணி என்ன?

தமிழ்நாடு அரசு தவறான தகவல்களை தருகிறது என்றால் ஒன்றிய அரசு விடுத்துள்ளது என்ன? அதை பொதுவெளியில் சொல்லி இருக்கலாமே ?

இப்போது தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறதா?

நிதியை முறையாக தராதது ஏன்? அதைச் சுட்டிக் காட்டிய நிதி அமைச்சரை பிரிவினை பேசுகிறார் என மேடைப் பேச்சாளர் போல நிதி அமைச்சர் ஒரு தனியார் ஊடக நிகழ்ச்சியில் பல கோடி பேர் பார்க்கும் ஒளிபரப்பில் ஏன் கூறவேண்டும்?

ஆனால் இத்தனை நடந்தும் இது பற்றிய செய்திகளை கூற வேண்டிய அதிமுக கள்ள மௌனம் சாதிப்பது ஏன்? #திமுக-அதிமுக அரசியலுக்கு தானே தவிர மாநில நலன் கருதி சென்ற ஆட்சியின் நிதியமைச்சர் வாய் திறந்து பேசாதாது ஏன்?

நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனா? நிர்மலா சீதாராமனா?

தமிழக நிதியமைச்சர் தான் ஜிஎஸ்டியில் #பெட்ரோல்/#டீசலை கொண்டுவரவேண்டும் என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார் என்பது எவ்வளவு பெரிய பொய். ஒருவேளை பிடிஆர் தடுத்தாலும் நிதியமைச்சர் நினைத்தால் கண்டிப்பாக கவுன்சிலில் இதைப்பற்றி விவாதிக்கலாம்.

#பிடிஆர் கூறுவது பழைய பாக்கியை தராமல் பேச வேண்டாம் என்பதே.

மொத்தத்தில் தமிழ்நாடு பாஜகவால் பழிவாங்கப்படுகிறது என்பது திண்ணம். தவிர பாஜகவுக்கும் உண்மைக்கும் என்றுமே வெகுதூரம்.மூலதனமே அவர்களுக்கு பொய் தான்.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling