பிடிசாம்பல் Profile picture
உனக்கான அடையாளம் தனிமையில் வீழ்ந்து கிடப்பதல்ல தனியாக நின்று போராடி ஜெயிப்பதுவே ..சே.. I BELONG TO THE DRAVIDAN STOCK
5 subscribers
Nov 20, 2023 7 tweets 1 min read
#கலைஞர்100

1) வாய்மை என்பது என்ன?

2010 பிப்ரவரி 10 அன்று சென்னையில் ஐந்தமிழறிஞர் கலைஞருக்கு 'திருக்குறள் பேரொளி' எனும் விருது தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகள் அவர்களால் வழங்கப்பட்டது. அப்போது ஏற்புரை நிகழ்த்திய கலைஞர், 'வாய்மையே வெல்லும்' என்ற சொற்றொடருக்கு உண்மையான பொருள் Image என்ன என்பது பற்றி இவ்வாறு குறிப்பிட்டார்:

"#அண்ணா அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்று சட்டமன்றத்திலே நானும் நாவலரும் பேராசிரியரும் அமருகின்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்ட போது, அப்பொழுது சில வாசகங்களை எப்படியெல்லாம் நாம் நடைமுறைப்படுத்தலாம் என்று எண்ணிய நேரத்திலே,
Jul 1, 2023 5 tweets 1 min read
50 ஆண்டுகளை கண்ட
கலைஞரின் அண்ணா மேம்பாலம்

சென்னையில் கட்டப்பட்ட முதல் மேம்பாலமும், இந்தியாவிலேயே மூன்றாவதாக கட்டப்பட்டதும், கட்டி முடிக்கப்பட்ட காலத்தில் இந்தியாவிலேயே நீண்ட பாலமாகவும் திகழ்ந்த சென்னை அண்ணா மேம்பாலம் 1973 ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டது. சென்னை அண்ணா மேம்பாலம் தான் Asia's First Grade Separator.

அண்ணா மேம்பாலத்தை திறந்து வைத்த தலைவர் கலைஞர்,

"தமிழகத்தின் பாலங்கள் நம்முடைய தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்களுடைய பெயரால், நம்முடைய சமுதாயத்திற்குப் புத்துணர்ச்சி ஊட்டியவர்களின் பெயரால்..
May 27, 2023 5 tweets 2 min read
லார்டு #மவுண்ட்பேட்டன் சுதந்திரம் கொடுத்த போது, அவருடனும் #நேரு மாமாவுடனும் தருமபுர ஆதீனமோ அல்லது செங்கோலோ அல்லது ராஜாஜியோ இருப்பது போல் ஒரு படத்தைக் கூட காட்ட முடியாத சங்கிகள்…
தங்களின் மிகப்பெரிய ஆயுதமான வாட்ஸப் யூனிவர்சுட்டி மூலம் கட்டிவிடும் கதைகள்… Image அப்பப்பா…! காது கிழிந்து ரெத்தமே வந்து விடும். அந்தளவுக்கு 1947ல் நடந்ததையே மாற்றி கதை கட்டுகிறானுங்க.

படம் 1 : 15 Aug 1947 எடுத்த படம். Lord Mountbatten கையில் இருந்து ஆதீனம் செங்கோலை வாங்கி நேரு மாமா கையில் கொடுத்தார் என்பதெல்லாம் அப்பட்டமான பச்சைப் பொய். Image
May 27, 2023 6 tweets 2 min read
#செங்கோல் கருங்கல், யார் திறந்து வைப்பது போன்ற விவாதங்களுக்கு நடுவில், ஒரு கொடுஞ்செய்தி முகத்தை மறைத்துக்கொண்டு நழுவிச் செல்கிறது..
புதிய நாடாளுமன்ற மக்களவையில்
'எதிர்காலத் தேவைகளைக் கருத்தில்கொண்டு' 888 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன..
அது என்ன எதிர்காலத்தேவை..? Image 543 என்கிற எண்ணிக்கை 888-டாக மாற வேண்டிய தேவையென்ன..?
அதாகப்பட்டது மக்கள் தொகை அதிகரிப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகமாகப் போகின்றனவாம்..
தென்னிந்தியாவில் பெரும்பாலும் குடும்பக்கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது..
May 26, 2023 5 tweets 2 min read
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்தி துபாய் எஸ்போ போல சாதிக்கவேண்டும் என்று ஓடிக்கொண்டு இருக்கிறார்...அதை திசை திருப்ப என்னமோ செய்கிறார்கள்...

ஜப்பானில் முதல்வர் பேசியது முக்கியமானத:- Image மருத்துவ சாதனங்கள் பூங்கா,உணவுப் பூங்காக்கள்,
மின் வாகனங்களுக்கான பூங்கா மற்றும் வருங்கால நகர்
திறன் பூங்கா,
மின்னணுவியல் உற்பத்தித் தொகுப்புகள்,ஒருங்கிணைந்த ஆடை மற்றும் ஜவுளி பூங்கா,தோல் காலணிகள் மற்றும் உப பொருட்களின் உற்பத்தித்தொகுப்புகள்.. Image
May 3, 2023 16 tweets 6 min read
உங்கள் கலவர ராமன் இல்லை..

மதங்களை கடந்து மனிதம் போற்றும் எங்கள் அழகன்..

மதுரை புதூர்ல ஒரு பைக்கை எடுத்தா, இருபது நிமிஷத்துல அழகர் கோவிலுக்குப் போயிடலாம்.

வருஷம் பூராம் அழகரு அங்கேயே தான் இருக்காரு.

ஆனால்,
அழகரு வருஷத்துல ஒரு தடவ மதுரைப் பக்கம் வந்துட்டுப் போவார்.. Image தங்கச்சி மீனாச்சி கல்யாணத்தப் பாக்க ஆசப்பட்டு அழகர்மலையில இருந்து, மதுரைக்கு கிளம்புவாரு

சும்மால்லாம் கிளம்பிட முடியாது,
அங்க காவல் தெய்வமான பதினெட்டாம்படிக் கருப்புகிட்ட உத்தரவு வாங்கிட்டு தான் கிளம்ப முடியும்

எங்கள் எளிய மனித கள்ளர் வேடத்தில் கொண்டை போட்டு கிளம்புவாருய்யா Image
Dec 24, 2022 11 tweets 2 min read
#periyarforever

பெரியார் எங்கள் இனத்தை தலைநிமிரச் செய்தவர்.

தேசத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட அண்ணல் காந்தி அவர்கள் சென்னை வந்தால் மைலாப்பூரில் இருந்த சீனிவாச அய்யங்கார் வீட்டு திண்ணையில்தான் உட்கார்ந்திருப்பார். அய்யங்கார் வீடு என்பதால் வைஸ்யரான காந்தியை வீட்டினுள் நுழைய அனுமதிக்கவில்லை.

"சூத்திரர்கள் படிக்க ஆசைப்படக்கூடாது,அப்படி படித்தாலும் ஐந்தாம் வகுப்புக்குமேல் படிக்கக்கூடாது,மீறி படித்தாலும் பிராமணர்களைப்போல அதிகாரத்திற்கு வர நினைக்கக்கூடாது" என்று..
Dec 24, 2022 4 tweets 2 min read
#periyarforever
#பெரியார் பெயரை கேட்டாலே ஏன் உங்களுக்கு எரிகிறது எனில் அவரைப் பற்றி காலம் காலமாக சாதி மத வெறியர்களால் கட்டவிழ்த்துவிடப்படும் கட்டுகதைகள்தான்.

பெரிய செல்வந்த குடும்பத்தில் பிறந்து கறுப்பு சட்டையுடன் மட்டுமே அவர் தமிழ்நாடு முழுவதும் தன் வாழ்வின் இறுதிகாலங்களில். மூத்தரப்பையுடன் உழைத்தது யாருக்காக?

ஏழைத்தாயின் மகன், டீ கடை நடத்தியவன் என்று சொல்லிவிட்டு பதவிக்கு வந்து பதினைந்து லட்சத்திற்கு கோட் போட்டு கலர் கலராக புகைப்படம் எடுக்கும் நபரை ஆதரிக்கும் உங்களுக்கு பெரியார் விரோதியாக தெரிவதில் எந்த ஆச்சரியமும் அதிசயமும் இல்லைதான்..
Nov 26, 2022 5 tweets 2 min read
#பங்கர்_கோமாளி
#அறிவோம்ஈழம்
#தமிழினத்தலைவர்68

2005 இல் மகிந்த ராஜபக் ஷ வை ஜனா­தி­பதியாக கொண்டு வரவதற்கு பிரபாகரன் வாங்கிய தொகை எவ்வளவு தெரியுமா??

2005, 2010 ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தல்­களில் மோச­டிகள் இடம் பெற்­றுள்­ளன. குறிப்­பாக 2005 ஆம் ஆண்டு விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் பிர­பா­க­ர­னுக்கு நிதி வழங்கி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை தோற்­க­டிப்­ப­தற்கு மகிந்த ராஜபக் ஷ செயற்­பட்­டி­ருந்தார்.

பஷில் ராஜபக் ஷவுடன் நான் உரை­யாற்றிக் கொண்­டி­ருந்த சந்­தர்ப்­பத்தில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு..
Nov 25, 2022 8 tweets 3 min read
#அறிவோம்ஈழம்

புலிகள் சரணடைய #இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்வைத்த திட்டத்தை நிராகரித்த பிரபாகரன்-
எரிக் சொல்ஹெய்ம்

லண்டன்: இலங்கை இறுதிப் போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைவது தொடர்பாக இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்வைத்த திட்டத்தை அந்த இயக்கத்தின் தலைவர் #பிரபாகரன் நிராகரித்துவிட்டதாக நார்வே முன்னாள் சமாதானத் தூதர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். லண்டனில் "ஒரு உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, இலங்கையில் நார்வேயின் அமைதி முயற்சிகள்" என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
Nov 25, 2022 4 tweets 3 min read
#அறிவோம்ஈழம்

1986 இல் #LTTE க்கும் #TELO விற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது TELO தலைவர் #சபாரத்தினம் உட்பட அவ்வியக்கத்தின் ஆயிரக்கணக்கான போராளிகள் #பிரபாகரனால் கொல்லப்பட்டனர்.அதன் பிறகு
அவ்வாறே #EPRLF இயக்கத்தினரும் கூண்டோடு #புலிகளால் அழிக்கப்பட்டனர். தமிழ் MP க்கள்
அமிர்தலிங்கம்
அருணாசலம் தங்கதுரை
ஆல்பிரட் துரையப்பா
M. கனகரத்தினம்
A. L.அப்துல் மஜீத்
S. சன்முக நாதன்
நிமலன் சவுந்தர நாயகம்
சாம் தம்பிமுத்து
நீலன் திருச்செல்வம்
G. யோகேஸ்வரி
V. யோகேஸ்வரன் எல்லோரும் LTTE #பிரபாகரனால் கொல்லப்படவர்களில் சிலர்.
Nov 25, 2022 8 tweets 4 min read
#அறிவோம்ஈழம்

கொத்துகுண்டு கொலைகள்..

வன்னியில் தமிழர்களைக் கொன்ற புலி உறுப்பினர் பரிஸ் நகரில் #ஈபிடிபி பொறுப்பாளர் வீட்டில் இருக்கிறார்!

வன்னியில் இறுதிப்போரில் புலிகளால் பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். தப்பியோடியவர்கள்.
ஊனமுற்றவர்கள். மற்று புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டு சித்திரவதை முகாம்களில் இருந்தவர்கள் நூற்றுக்கணக்கானோர். இறுதி யுத்ததின்போது கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாதவாறு எரிக்கப்ப்பட்டு அவர்கள் இராணுவத் தாக்குதலில் இறந்ததாக புலிகளின் பிரச்சார ஊடகங்களால் உலகெங்கும் காண்பிக்கப்பட்டது.
Nov 25, 2022 13 tweets 3 min read
#கான்ஸ்டபிள்_மாணிக்கம் யார் தெரியுமா.?

பிரபாகரனின் இந்த புகைப்படத்தின் கதை...!!

#பிரபாகரனும், #உமாமகேஸ்வரனும் சென்னை #பாண்டி_பஜாரில் பொதுமக்கள் நடமாடிய ஒரு தினத்தில் பரஸ்பரம் சுட்டுக் கொண்டனர்.

இச் சம்பவம் 1982 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்றது. இதற்கு முன்பாகவே இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் முற்றிப் போய் காணப்பட்டது. இத்துப்பாக்கிச் சூட்டுச் சண்டைக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் ஜனவரி 1982. 02 ஆம் திகதி புளொட் இயக்க முக்கியஸ்தர் சுந்தரம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
Nov 25, 2022 4 tweets 1 min read
சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஒரு பெண் புலியின் வாக்குமூலம்!..

#வித்யாராணி என்ற பெண்விடுதலைப் புலி ஒருவர் அளித்ததாக விகடன் வார இதழில் வெளியான நேர்காணல் குறித்து பலத்த சர்ச்சை எழுந்துள்ளது. எனது குழந்தைகளுக்கு அடுத்த வேளை உணவு இல்லாமல் பாலியல் தொழில் செய்துவரும் என்னிடம் வந்து, ‘எப்போது உங்கள் அடுத்த போராட்டம்?’ என்று கேட்டால், விளக்குமாறால் அடிப்பேன் - முன்னாள்பெண் போராளி வித்யாராணி..
Nov 24, 2022 36 tweets 7 min read
நயீமாக்களின் பெருமூச்சு #புலிக்களை சுட்டெரித்தது.

அப்துல் மனாபை கட்டி இழுத்துக் கொண்டு சென்ற காட்சி அவளுக்கு இன்னும் நினைவிருக்கிறது. முகத்திலிருந்தும் தலையிலிருந்தும் ரத்தம் வழிய வழிய அவனை இழுத்துச் சென்றார்கள். அவர்கள் தான் விடுதலைப்புலிகள் அவர்களுக்குத் தான் தமிழீழம் வேண்டும் கற்பிட்டிக் கடற்கரையில் அவள் கால்கள் பதழத்த தடங்களை அழித்து விட அலைகள் முட்டி மோதிப் பாய்ந்து திரும்பின.

அவள் மனக் கடலில்பிரளயத்தை ஏற்படுத்திப் படார்! தடார்! என்று விழும் எண்ண அலைகளை முறியடிக்க இந்தக் கடலுக்கு முடிந்து விடப்போகிறதா என்ன?.
Nov 7, 2022 11 tweets 2 min read
மேற்கு தாம்பரத்திற்கு 80களில் மூன்று குடும்பங்கள் வந்து இறங்குகிறது. குடும்பம் 1 மாயவரம் கணேசன், 2 மதுரை கோபாலன் மற்றும் 3 ஸ்ரீரங்கம் மாதவன். மூவருமே ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ரயில்வேயில் வேலை செய்யும் கணேசன் தனது மகன் வைத்தீஸ்வரனை எப்படியாவது ரயில்வேயில் பணிக்கு.. அமர்த்திட படிக்க வைக்கிறார். 15 ஆண்டுகளுக்கு பிறகு தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேருகிறார் வைத்தீஸ்வரன். கை நிறைய சம்பளம்.
Jul 6, 2022 6 tweets 2 min read
*நிலக்கரி இறக்குமதி விஷயத்தில் மேடையில் மோடியை பிய்த்து உதறிய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்.*

"உங்களுக்கு வேறு வழியில்லை, நீங்கள் உங்கள் முதலாளிகளை ஆதரித்துதான் ஆகவேண்டும்.

அதற்காக நீங்கள் மாநில அரசுகளின்மீது அதிகாரம் செலுத்தி 10 சதவீதம் நிலக்கரியை உங்கள் தனியார்.. முதலாளிகளிடம் அதிக விலைக்கு வாங்கச் சொல்லி வற்புறுத்துகிறீர்கள்.

இல்லாவிட்டால் கோல் இந்தியாவின் நிலக்கரி சப்ளை நிறுத்தப்படும் என்று மிரட்டுகிறீர்கள்.

இது என்ன ரெளடிசமா?

வலுக்கட்டாயமா?

மாநில அரசுகளை மானம், மரியாதையுடன் நடத்தும் முறையா?
May 11, 2022 15 tweets 4 min read
சற்று நீண்ட பதிவு. பொறுமையோடு படித்தால் நாம் எப்படியெல்லாம் பாஜக அரசால் வஞ்சிக்கப்பட்டுள்ளோம் என்பது புரியவரும்.

வெள்ளையாக இருக்கறவன் பொய் சொல்லமாட்டான்,உயரிய பதவியில் இருக்கறவங்க பொய் சொல்ல மாட்டாங்க என்பதெல்லாம் பாஜக கட்சியில் கிடையவே கிடையாது. Image பிரதமரே கூட நிறைய இடங்களி்ல் உண்மைக்கு புறம்பாக பேசியுள்ளார்.

அண்மையில் துக்ளக் விழாவில் மேடையேறிய அம்மையார் இந்திய நிதியமைச்சர் பல தவறான தகவல்களை பேசிவிட்டு போயுள்ளார். அப்படி பேசியதில் எது உண்மை?

முதலில் அவர் கூறியவை என்ன?
Jan 3, 2022 4 tweets 1 min read
“மாரி அம்பின் மழை தோல் சோழர்

வில் ஈண்டு குறும்பின் வல்லத்து புற மிளை

ஆரியர் படையின் உடைக என்

நேர் இறை முன்கை வீங்கிய வளையே” மேலுள்ள அகநானூற்றுப் பாடலில் (336: 20–23) சோழரது விற்படை செறிந்துகிடக்கும் அரணையுடைய வல்லம் என்ற ஊருக்கு வெளியேயுள்ள காவல்காட்டில் வந்தடைந்த ஆரியரின் படையைத் தோற்கடித்த செய்தி சொல்லப்படுகின்றது.
Sep 4, 2021 20 tweets 4 min read
ஒரு குதிரை வண்டிக்காரர் எம்.எல்.ஏ ஆனா கதை தெரியுமா சகோ..

எப்பேர்ப்பட்ட அசகாய சூரன் .
நம் தலைவர்கள் அண்ணா கலைஞர் .

இன்று திமுக சார்பாக போட்டியிடுவோர் போட்டியிடலாம் என்று அறிவித்தால் தொகுதிக்கு 1000 பேர் வரை மனு செய்வார்கள். அன்று 50 ஆண்டிற்கு முன்
திமுகவிற்கு ராமநாதபுரம் தொகுதிக்கு வேட்பாளர் கிடைக்கவில்லை என்று
சொன்னால் அது நிஜம்.

காரணம் காங்கிரஸ் நிற்க வைத்தது.ராஜ வம்சத்து வேட்பாளரை, ராஜா
சேதுபதி. அவர் அந்தசமஸ்தானத்து அரசர்.
Sep 1, 2021 17 tweets 2 min read
உங்களுக்குத் தெரியுமா?

1968ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா உயிரோடு இருந்தபோதே, தன்னுடைய ஈரோட்டு மாணவர் கலைஞருக்கு சிலை வைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார் தந்தை பெரியார். Image 1971ஆம் ஆண்டு பெரியார் திடலில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கலைஞர் முன்னிலையிலேயே மீண்டும் அந்தக் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினார் பெரியார்.

“யார் யாருக்கோ சிலை இருக்கிறது.