G K Profile picture
G K
தென் நாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

Jul 12, 2022, 8 tweets

#ஓம்_நமசிவாய #சைவ_சமயம்
#கோலாகலமாக_தொடங்கிய_மாங்கனி_திருவிழா!

காரைக்கால்: மாங்கனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பரமதத்தர் புனிதவதியார் திருக்கல்யாணம் பக்தர்கள் பங்கேற்பு இன்றி எளிமையாக நடைபெற்றது. மாலை வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிவபெருமானின் 63 நாயன்மார்களில் இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்ட சிறப்பு பெற்றவர் காரைக்கால் அம்மையார். ஐந்தாம் நூற்றாண்டில் அவதரித்தவருமான புனிதவதியார் எனும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனிக்கோயில் உள்ளது.

இக்கோயிலில் அம்மையாரின் வரலாற்றை விளக்கும் விதமாக ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தப்படும் மாங்கனித் திருவிழா மிகவும் சிறப்புப் பெற்றதாகும். காரைக்காலில் ஆண்டுதோறும் மிகவும் விமரிசையாக நடத்தப்படும் காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணம்

திருக்கல்யாண வைபவம்
திருமண வைபவம் தொடங்கியதும் மகா மண்டபத்திற்கு புனிதவதியார் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து பரமதத்த செட்டியார் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். சிவாச்சாரியார்கள் திருமங்கல்யத்தை எடுத்து அம்மையாருக்கும் பரமதத்தருக்கும் திருக்கல்யாணம் செய்து வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. 16 வகையான சோடச உபசாரங்கள் செய்யப்பட்டன. மாலை 6.30 மணிக்கு பிச்சாண்டவர்(சிவன்) வெள்ளை சாத்தி புறப்பாடு நிகழ்ச்சியும்,

13-ந் தேதி பிச்சாண்ட மூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும் நடைபெறுகிறது. தொடர்ந்து, காலை 7 மணிக்கு, பிச்சாண்டவர் திருவீதியுலா செல்லும் நிகழ்ச்சியும், அதேசமயம், பக்தர்கள் மாங்கனிகளை இறைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

அன்று மாலை 6 மணிக்கு பிச்சாண்டவரை காரைக்கால் அம்மையார் எதிர்கொண்டு அழைத்து அமுது படையல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 14-ந்தேதி அதிகாலை அம்மையார் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

லட்சக்கணக்கான பக்தர்கள் மாங்கனிகளை இறைத்து வழிபடுவார்கள்
மாங்கனிகள் உண்டால் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் கிட்டும்

பரமசிவன் அடியார் கோலத்தில் பவழக்கால் விமானத்தில் வீதியுலா

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling