SSR 🐘 Profile picture
#வழித்துணைநயினாரேசரணாகதி 🙏 #வீரசைவன் 💪 #நோக்கம்சிவமயம் 🙏 #SSRThreads #தினம்_ஒரு_திருமந்திரம் #யானைக்காதலன்_SSR🐘 #அரிக்கொம்பன்🐘

Aug 7, 2022, 21 tweets

தஞ்சாவூர் என்றால் உங்களுக்கு எது ஞாபகத்திற்கு வரும்?

தஞ்சை பெரியகோயில்,
திருமுறைகளை மீட்ட இராஜராஜன்,
தலையாட்டிப் பொம்மைகள்,
தஞ்சாவூர் ஓவியம்.
இதானே ?

ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி தஞ்சாவூர் நாவில் நீர் ஊறவைக்கும் உணவுகளுக்கும் பெயர் போனது என்பது தெரியுமா?

1/20
#SSRThreads

உணவுப் பாரம்பரியமே ஒருநாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கிறது.

ஒருமுறை தஞ்சை மாவட்ட உணவுகளைச் சுவைப்பவர்கள் அதன் சுவைக்கு அடிமையாகிவிடுவார்கள் என்னை போல,

காவேரி பாய்ந்து வளம் சோ்த்த விவசாயம் முதன்மைத் தொழிலாக இருப்பதால் தமிழகத்தின் நெற்களஞ்சியம்னு சும்மாவா சொன்னாங்க

2/20

வயல்வெளிகளும் தண்ணீரின் சுவையும் அப்பப்பா,

சரி நம்ம மேட்டருக்கு வருவோம்,

தஞ்சாவூரில் ஓங்கி வளர்ந்த உணவு வரலாற்றில் இன்று இடம் பிடித்திருப்பது லஸ்ஸி.

நல்ல ருசியான தயிர்தான் லஸ்ஸிக்கு மிகமுக்கியமான அடிப்படை பொருள். கறந்த பாலை வாங்கி, ஒன்றுக்கு பாதியாக சுண்டக்காய்ச்சி,

3/20

உரைக்கு ஊற்றி, தயிராக்கி லஸ்ஸி தயாரிக்கின்றனர்.

தஞ்சாவூரில் 40 வருட பாரம்பரியம் கொண்ட அன்பு நிலையம் லஸ்ஸி கடையினர்.

மேலாக, பாலாடை மிதக்க மிதக்க, ஜில்லென்று குடிக்கும் லஸ்ஸி வெயிலுக்கு அமிர்தம்.

அடுத்து,

தஞ்சாவூரில் மிகவும் பிரபலமான ஒரு பாரம்பரியமான அடை ‘தவலை அடை’.

4/20

பருப்பு அடையில் எல்லா பருப்பும் சேர்க்கப்படும்.

ஆனால், தஞ்சாவூர் தவலை அடைக்கு பிரதானமானது துவரம் பருப்பு. பச்சரிசி, துவரம்பருப்பு இரண்டையும் ஊறவைத்து அரைத்து அதில் காய்ந்த மிளகாய், கடுகு, உளுந்து, தேங்காய்த்துருவல் தாளித்து கொட்டி இந்த அடை செய்கின்றனர்.

5/20

சாதாரண அடை போல இதை தோசைக்கல்லில் வார்ப்பதில்லை.

குழிவான பாத்திரமே இதற்கு சிறந்தது. கிட்டதட்ட ஒரு கேக் வடிவில் பொன்னிறமாக வார்க்கப்படும் இந்த அடைக்கு தேங்காய்துவையல் சரியான காம்பினேஷன்.

தஞ்சாவூரின் அடுத்த பாரம்பரியம், இனிப்புகளில் உள்ளடங்கும் அசோகா எனப்படும் அல்வா.

6/20

தஞ்சை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எல்லா விசேஷங்களிலும் இந்த அசோகா அல்வா முக்கிய இடம் பிடித்திருக்கும்.

பாசிப்பருப்பு, நெய், முந்திரிப்பருப்பு சேர்த்த வித்தியாசமான அல்வா இது.

திருவையாற்றில் ஆண்டவர் ஹல்வா கடையில் கிடைக்கும் அசோகா அல்வா உலக பேமஸ்.

7/20

தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் அதன் டிகிரி காபிக்கு பெயர் போனது.

பித்தளை அல்லது தாமிரத்தால் ஆன டம்ளர் - டபரா செட்களில் நுரை பறக்க பறக்க சூடாகவும், சுவையாகும் மனதை நிரப்புகிறது டிகிரி காபி.

ஐம்பது வருடங்களுக்கு முன்பாக கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ஆலய பின்புறம்,

8/20

அமைந்திருந்த ‘லெட்சுமி விலாஸ் காபி கிளப்’ டிகிரி காபிக்கு வெகு பிரசித்தம்.

பசும்பாலை நுரை ததும்பக் கறந்து, துளிக்கூட தண்ணீர் கலக்காமல், காய்ச்சி எடுத்து, ப்ரெஷாக வறுத்து அரைக்கப்பட்ட தரம் குறையாத காபி தூளில் ஒரே ஒரு முறை டிகாஷன் இறக்கு மணக்க மணக்க டிகிரி காபி கிடைக்கும்.

9/20

உண்மையான டிகிரி காபியின் தரமே ஏ.ஒன் காபிக்கொட்டைகளில்தான் இருக்கின்றன,

மேலும், ஒரே ஒருமுறைதான் காபிதூளில் டிகாஷன் இறக்க வேண்டும்.

அதிக நேரம் சூடாக இருக்கவே பித்தளை, தாமிர டபரா செட்டுகள் உபயோகிக்கப்பட்டன.

இயற்கை எழில் கொஞ்சும் நீடாமங்கலம் கிராமம்,

9/20

பால்திரட்டு என்னும் சுவையான இனிப்புக்கு புகழ்பெற்றது.

நீடாமங்கலம் மேல ராஜவீதியில் மட்டுமே தரமானதாக கிடைக்கிறது இந்த பால்திரட்டு.

பால் சுண்டும் மணம் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த பால்திரட்டில் நல்ல பசும்பால் ஆடையின் ருசியும் நம்மை சொர்க்கத்திற்கே அழைத்துச் செல்லும்.

10/20

இன்றும் விறகடுப்பில்தான் இந்த பால்திரட்டு செய்யப்படுகிறது.

கும்பகோணத்தில் புகழ்பெற்ற மற்றொன்று ‘கும்பகோணம் கடப்பா’. தஞ்சை மண்டலத் திருமணங்களில் கடப்பாவிற்கு பிரிக்க முடியாத ஒரு பிணைப்பு உண்டு. வெண்மையாக குழம்பும் இன்றி, குருமாவும் இன்றி ஒரு கெட்டியான கூட்டாக செய்யப்படும்,

11/20

இந்த கடப்பாவில் பாசிப்பருப்பு, உருளைக்கிழங்கு ஆகியவை முக்கியமானவை. தேங்காயுடன், பொட்டுக்கடலை அரைத்துவிடுவது சூடான இட்லியுடன் செம காம்பினேஷன்.

தஞ்சாவூரில் மற்றொரு வெயிலைத் தணிக்கும் ஸ்பெஷல் உணவு சர்பத் வகைகள். இதில் மிக முக்கியமான சர்பத் ‘நன்னாரி நார்த்தங்காய் சர்பத்’.

12/20

தஞ்சாவூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அதிகளவில் கிடைக்கும் நார்த்தங்காயை வைத்து, எலுமிச்சை சர்பத் போலவே நாவில் நடனமாடும் சுவை கொண்ட ருசியான ஜில்ஜில் சர்பத் இது.

ஐஸ்ஸுடன், பாதம்பிசினும் கலக்கப்படுவது இந்த சர்பத்தின் சிறப்பு.

13/20

இதிலேயே குளிர்ந்த பாலும் கலந்து கொடுத்தால் அது பால் சர்பத். குளிரக் குளிர இனிப்பும், புளிப்புமாக எலுமிச்சம்பழ சர்பத்துக்கு நல்ல மாற்று இது.

தஞ்சாவூரில் கிடைக்கும் மற்றொரு இனிப்பான உணவு ‘சுருள் ஆப்பம்’. தோசை மாவில், தேங்காய், சர்க்கரைத் தூவி சுருட்டி தரப்படும் இந்த ஆப்பம்,

14/20

புதுமணத்தம்பதிகளுக்கு தஞ்சாவூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் செய்து தரப்படும் ஒரு பாரம்பரிய இனிப்பு.

மண் பானை சோறு, வாழை இலை, பாரம்பரிய அரிசி வகைகள், செக்கில் ஆட்டிய எண்ணெய், மணக்க மணக்க ருசியான உணவுகள்,

சிரித்த முகத்துடன் பரிமாறுதல் என்று தனித்துவமாக இருக்கிறது தஞ்சாவூர்,

15/20

செல்லம்மாள் மண்பானைச் சமையல் என்ற சைவ உணவகம்,

எல்லா வகையான உணவையும் மண் பானையில் தயாரிக்கின்றனர்.

அரிசி சாதம் தொடங்கி பொரியல்,கூட்டு வரை மண் சட்டி,மண் கலயம்,மண் தட்டு போன்றவற்றிலேயே பரிமாறுகின்றனர். சாம்பார்,பருப்பு உருண்டை,வாழைப்பூ உருண்டை என 8 வகைக்குழம்புகள் உள்ளன.

16/20

கொள்ளு, பருப்பு ரசம் என இரண்டு வகை ரசம், வெந்தயக் கீரை, புளிச்சக் கீரை என 5 வகை கீரைகள், 5 வகையான காய்கறி வறுவல்கள், வாழைப்பூ வடை, முடக்கத்தான் கீரை சூப், சாப்பிட்டு முடித்து செரிமானத்துக்கு பானகம் என நாற்பதுக்கும் மேற்பட்ட உணவு வகைகள் சமைக்கப்படுகின்றன.

17/20

சாதம் தொடங்கி ஊறுகாய் வரை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வேண்டியதை வாங்கிச் சாப்பிடலாம். 200 ரூபாய்க்கு எல்லாவற்றையும் ருசி பார்க்கலாம்.

18/20

மாலை மயங்கினால் போதும்,

சுப்பையா மெஸ்ஸில் பூண்டு போடி தோசை, முடக்கத்தான் தோசை, காளான் தோசை,வாழைப்பூ வடை, இடியாப்பம் தேங்காய்ப்பால் எல்லாம் வேற ரகம்

பர்வீன்’ தியேட்டர் அருகே இருக்கிற அக்கா கடை கௌசா மற்றும் வாழைத்தண்டு சூப்,
பயங்கர பிரபலம்,

19/20

இப்போதைக்கு இவ்வளவு தான் இந்த திரேட் பார்ட்-II கண்டிப்பா இன்னும் கொஞ்ச நாள் பொறுத்து எழுதுறேன்.

நன்றி 🙏
வணக்கம் 🙏🙏

20/20

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling