தஞ்சாவூரில் மிகவும் பிரபலமான ஒரு பாரம்பரியமான அடை ‘தவலை அடை’.
4/20
பருப்பு அடையில் எல்லா பருப்பும் சேர்க்கப்படும்.
ஆனால், தஞ்சாவூர் தவலை அடைக்கு பிரதானமானது துவரம் பருப்பு. பச்சரிசி, துவரம்பருப்பு இரண்டையும் ஊறவைத்து அரைத்து அதில் காய்ந்த மிளகாய், கடுகு, உளுந்து, தேங்காய்த்துருவல் தாளித்து கொட்டி இந்த அடை செய்கின்றனர்.
5/20
சாதாரண அடை போல இதை தோசைக்கல்லில் வார்ப்பதில்லை.
குழிவான பாத்திரமே இதற்கு சிறந்தது. கிட்டதட்ட ஒரு கேக் வடிவில் பொன்னிறமாக வார்க்கப்படும் இந்த அடைக்கு தேங்காய்துவையல் சரியான காம்பினேஷன்.
தஞ்சாவூரின் அடுத்த பாரம்பரியம், இனிப்புகளில் உள்ளடங்கும் அசோகா எனப்படும் அல்வா.
6/20
தஞ்சை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எல்லா விசேஷங்களிலும் இந்த அசோகா அல்வா முக்கிய இடம் பிடித்திருக்கும்.
பாசிப்பருப்பு, நெய், முந்திரிப்பருப்பு சேர்த்த வித்தியாசமான அல்வா இது.
திருவையாற்றில் ஆண்டவர் ஹல்வா கடையில் கிடைக்கும் அசோகா அல்வா உலக பேமஸ்.
7/20
தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் அதன் டிகிரி காபிக்கு பெயர் போனது.
பித்தளை அல்லது தாமிரத்தால் ஆன டம்ளர் - டபரா செட்களில் நுரை பறக்க பறக்க சூடாகவும், சுவையாகும் மனதை நிரப்புகிறது டிகிரி காபி.
ஐம்பது வருடங்களுக்கு முன்பாக கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ஆலய பின்புறம்,
8/20
அமைந்திருந்த ‘லெட்சுமி விலாஸ் காபி கிளப்’ டிகிரி காபிக்கு வெகு பிரசித்தம்.
பசும்பாலை நுரை ததும்பக் கறந்து, துளிக்கூட தண்ணீர் கலக்காமல், காய்ச்சி எடுத்து, ப்ரெஷாக வறுத்து அரைக்கப்பட்ட தரம் குறையாத காபி தூளில் ஒரே ஒரு முறை டிகாஷன் இறக்கு மணக்க மணக்க டிகிரி காபி கிடைக்கும்.
9/20
உண்மையான டிகிரி காபியின் தரமே ஏ.ஒன் காபிக்கொட்டைகளில்தான் இருக்கின்றன,
மேலும், ஒரே ஒருமுறைதான் காபிதூளில் டிகாஷன் இறக்க வேண்டும்.
அதிக நேரம் சூடாக இருக்கவே பித்தளை, தாமிர டபரா செட்டுகள் உபயோகிக்கப்பட்டன.
இயற்கை எழில் கொஞ்சும் நீடாமங்கலம் கிராமம்,
9/20
பால்திரட்டு என்னும் சுவையான இனிப்புக்கு புகழ்பெற்றது.
நீடாமங்கலம் மேல ராஜவீதியில் மட்டுமே தரமானதாக கிடைக்கிறது இந்த பால்திரட்டு.
பால் சுண்டும் மணம் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த பால்திரட்டில் நல்ல பசும்பால் ஆடையின் ருசியும் நம்மை சொர்க்கத்திற்கே அழைத்துச் செல்லும்.
10/20
இன்றும் விறகடுப்பில்தான் இந்த பால்திரட்டு செய்யப்படுகிறது.
கும்பகோணத்தில் புகழ்பெற்ற மற்றொன்று ‘கும்பகோணம் கடப்பா’. தஞ்சை மண்டலத் திருமணங்களில் கடப்பாவிற்கு பிரிக்க முடியாத ஒரு பிணைப்பு உண்டு. வெண்மையாக குழம்பும் இன்றி, குருமாவும் இன்றி ஒரு கெட்டியான கூட்டாக செய்யப்படும்,
11/20
இந்த கடப்பாவில் பாசிப்பருப்பு, உருளைக்கிழங்கு ஆகியவை முக்கியமானவை. தேங்காயுடன், பொட்டுக்கடலை அரைத்துவிடுவது சூடான இட்லியுடன் செம காம்பினேஷன்.
தஞ்சாவூரில் மற்றொரு வெயிலைத் தணிக்கும் ஸ்பெஷல் உணவு சர்பத் வகைகள். இதில் மிக முக்கியமான சர்பத் ‘நன்னாரி நார்த்தங்காய் சர்பத்’.
12/20
தஞ்சாவூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அதிகளவில் கிடைக்கும் நார்த்தங்காயை வைத்து, எலுமிச்சை சர்பத் போலவே நாவில் நடனமாடும் சுவை கொண்ட ருசியான ஜில்ஜில் சர்பத் இது.
ஐஸ்ஸுடன், பாதம்பிசினும் கலக்கப்படுவது இந்த சர்பத்தின் சிறப்பு.
13/20
இதிலேயே குளிர்ந்த பாலும் கலந்து கொடுத்தால் அது பால் சர்பத். குளிரக் குளிர இனிப்பும், புளிப்புமாக எலுமிச்சம்பழ சர்பத்துக்கு நல்ல மாற்று இது.
தஞ்சாவூரில் கிடைக்கும் மற்றொரு இனிப்பான உணவு ‘சுருள் ஆப்பம்’. தோசை மாவில், தேங்காய், சர்க்கரைத் தூவி சுருட்டி தரப்படும் இந்த ஆப்பம்,
14/20
புதுமணத்தம்பதிகளுக்கு தஞ்சாவூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் செய்து தரப்படும் ஒரு பாரம்பரிய இனிப்பு.
மண் பானை சோறு, வாழை இலை, பாரம்பரிய அரிசி வகைகள், செக்கில் ஆட்டிய எண்ணெய், மணக்க மணக்க ருசியான உணவுகள்,
சிரித்த முகத்துடன் பரிமாறுதல் என்று தனித்துவமாக இருக்கிறது தஞ்சாவூர்,
15/20
செல்லம்மாள் மண்பானைச் சமையல் என்ற சைவ உணவகம்,
எல்லா வகையான உணவையும் மண் பானையில் தயாரிக்கின்றனர்.
அரிசி சாதம் தொடங்கி பொரியல்,கூட்டு வரை மண் சட்டி,மண் கலயம்,மண் தட்டு போன்றவற்றிலேயே பரிமாறுகின்றனர். சாம்பார்,பருப்பு உருண்டை,வாழைப்பூ உருண்டை என 8 வகைக்குழம்புகள் உள்ளன.
16/20
கொள்ளு, பருப்பு ரசம் என இரண்டு வகை ரசம், வெந்தயக் கீரை, புளிச்சக் கீரை என 5 வகை கீரைகள், 5 வகையான காய்கறி வறுவல்கள், வாழைப்பூ வடை, முடக்கத்தான் கீரை சூப், சாப்பிட்டு முடித்து செரிமானத்துக்கு பானகம் என நாற்பதுக்கும் மேற்பட்ட உணவு வகைகள் சமைக்கப்படுகின்றன.
17/20
சாதம் தொடங்கி ஊறுகாய் வரை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வேண்டியதை வாங்கிச் சாப்பிடலாம். 200 ரூபாய்க்கு எல்லாவற்றையும் ருசி பார்க்கலாம்.
மூங்கில் நெல்லால் பசியைப் போக்கிய ஊர் என்பதாலும் நெல்வேலி என்கிற பெயர் பெற்றது.
பின்னர் திரு என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு திருநெல்வேலியாக பெயர் மாற்றம் பெற்றது என்பது வரலாறு.
#சைவஉணவு
#SSRThreads
1/25
திருநெல்வேலி என்றாலும் உள்ளூர்க்காரர்களுக்கு என்றும் நெல்லை தான்.
தாமிரசபையின் தலைவன் திருநெல்வேலி உடைய நயினார் வீற்றிருக்கும் திருநெல்வேலியை
பாண்டிய அரசர்கள், இராஜேந்திரசோழன், விசயநகர மன்னர்கள், பாளையக்காரர்கள்,
சந்தா சாகிப்,
ஆற்காடு நவாப், மருதநாயகம், போர்த்துக்கீசியர்,
2/25
ஒல்லாந்தர்கள், பிரிட்டிசார் என பல்வேறு ஆட்சி மாற்ற வரலாறு நெடுகிலும் கண்டது.
ஆதிச்சநல்லூரிலும், கொற்கையிலும் மேற்கொண்ட புதைபொருள் ஆய்வுகளில் தமிழர்களின் பழங்கால நாகரீகங்கள் குறித்த மிகத்துள்ளியமான சித்திரம் கிடைத்தது. தமிழர்கள் வேளாண்மை, தொழில்திறமை,பழக்க வழக்கங்கள் பற்றிய
கொஞ்சம் நாட்களாய் மதுரைக்கு அடிக்கடி பயணபடுகிறேன்.
தனியாகவும், நண்பர்களுடன் சேர்ந்து எப்பொழுது சென்றாலும் அசைவ உணவுக்கடைகளே கண்களில் அதிகம் தென்படும்,
உணவுகளைப் பற்றி நான் நிறைய திரேட் போட்டு இருந்தும் இது கொஞ்சம் Special,
1/25
சாப்பாடுன்னா மதுரை தான்யா,
மதுரையை அடிச்சிக்க தமிழ்நாட்டில் ஒரு ஊரே இல்லன்னு பல பேர் சொல்லுவாங்க,
அது வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான் என்பது போல,
விதவிதமான அசைவ உணவுகளும் புரோட்டா கடைகளும், தள்ளுவண்டிகளும், நடைபாதை இட்லி கடைகளுக்கும் மதுரை இன்று புகழ் பெற்றுள்ளது.
2/25
கறி தோசை,
நண்டு ஆம்லெட்,
அயிரைமீன் குழம்பு, வெங்காயக் குடல், விரால்மீன் ரோஸ்ட்னு வித விதமா அசைவத்தில் பட்டையை கிளப்பும் மதுரையில் இப்போ சைவ உணவுகளுக்கு ஏன் அந்தளவு முக்கியத்துவம் தரவில்லை ?
சைவத்தில் அந்தளவு வெரைட்டி இல்லையா இல்ல மக்கள் எல்லாம் அசைவத்துக்கு மாறிட்டாங்களா ?
#அரிக்கொம்பன்🐘 கன்னியாகுமரி மாவட்டத்தில் அப்பர்கோதையார் முதல் முத்துகுழிவயல் வரையுள்ள இடத்திலே சுற்றி கொண்டு இருக்கிறான்.
அரசி,கரும்பு,சர்க்கரையை உண்டவன் கன்னியாகுமரி அப்பர்கோதையார் வந்த பிறகு இயற்கை உணவுக்கு தன்னை பக்குவப்படுத்தி கொண்டான் என நம்புவோம்,
#யானைக்காதலன்_SSR
1/13
அப்பர்கோதையார் முதல் முத்துகுழிவயல் வரை (கன்னியாகுமரி மாவட்டம்) இந்த இடம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த மழை காடுகள் நிறைந்த பகுதி அதே நேரத்தில் சோலை காடுகள் என்னும் கரும் பச்சை பசுமையான புல்வெளிகளும் உண்டு,
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாயும் கோதையாறு ஒரு வற்றாத ஆறு,
2/13
வருடம் முழுக்க தண்ணீர் பாயும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 5500 அடி உயரத்தில் உள்ளது,தினசரி மழை பொழிந்து கொண்டே இருக்கும் கடும் குளிர் வாட்டும்,
இந்த கோதையாறு அப்பர்கோதையார் மலையில் உற்பத்தி ஆகி அப்பர்கோதையார் அணையில் நீர் சேமிக்கப்பட்டு வருகிறது,
கேரளா மாநிலம், இடுக்கி மலையில் வசித்தவனை அவன் அட்டகாசம் தாங்காமல், கேரள வனத்துறை அரிசிக்கொம்பனை பிடித்து அவன் உடலில் ஜி.பி.எஸ் கருவியைப் பொறுத்தி, பெரியாறு அணையை ஒட்டிய மேதகானம் பகுதியில் விட்டுவிட்டு தீவீரமாக கண்காணித்தனர்.
#யானைக்காதலன்_SSR
1/26
அவனே கண்ணகி கோயில் வழியாய் தேனிக்குள் புகுந்து குறிப்பாக கம்பம் ஊருக்குள் இருந்தவனை,
தமிழக வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு 2 கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றி நெல்லை மாவட்டம், மணிமுத்தாறு மலையில் 35 கி.மீட்டர் தூரத்தில் உள்ள முத்துக்குளி வயல் என்கிற இடத்தில் விட்டனர்
2/26
காரணம் என்ன ?
களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகத்திலுள்ள முத்துக்குளி வயல்தான் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வளமான இடம். புலிகளும், ராஜநாகங்களும் அதிகமாக வசிக்கும் பகுதி.
சூரிய ஒளியே புகமுடியாத அடர்ந்த காடு என்பதால் உணவு மற்றும் தண்ணீருக்குப் பஞ்சம் இருக்காது,