Newman ❤ INDIA Profile picture
47., B.A. B.L., ML., Dravidian., Food Lover., Entrepreneur., Politics

Aug 19, 2022, 5 tweets

இலவசங்களால் என்ன பயன் ? தமிழ் மக்கள் வாழ்வு எப்படி மேம்பட்டிருக்கிறது எனப் பிரதமருக்கு முட்டு கொடுத்து சீமான் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
கலைஞர் தந்த இலவச டிவி திட்டத்தின் பலன்கள் பற்றி இந்த இழையில் பார்ப்போம் #thread #freebies

1996ல் கலைஞர் இலவச டிவி அறிவிக்கும் போது 14" டிவியின் சந்தை விலை ₹5000/-. திமுக அரசு 2006-11 நடந்த 5 ஆண்டு ஆட்சியில் 1,62,59,526 குடும்பங்களுக்கு 3687 கோடி ரூபாய் செலவில் டிவி வழங்கியது. அதாவது ஒரு டிவியின் விலை சுமார் ₹2200/-. டெண்டர் முறை மூலம் அரசு வாங்கியதால் மக்களிடம்

இருந்து போயிருக்கக் கூடிய ஆயிரக்கணக்கான கோடிகள் மிச்சமாகி அது புழக்கத்தில் இருந்தது. தமிழ்நாட்டில் டிவி ஊடுருவல் (penetration) 95% ஆனதால் தமிழில் இத்தனை சேனல்கள் வந்தன. மற்ற மாநிலங்களில் HUL, P& G, ITC போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் பிராண்டுகளே கோலோச்சும் போது இங்கே கோல்டுவின்னர்

சக்தி மசாலா, ஆச்சி மசாலா, சிக் ஷாம்பு, இதயம், லயன் டேட்ஸ் என தமிழ்நாட்டில் இத்தனை பிராண்டுகள் உருவானதற்கு காரணம் இந்த டிவி ஊடுருவல் தான். இந்த சேனல்கள் ஏற்படுத்திய மூதலீடுகளை கணக்கில் எடுத்தாலே அரசு போட்ட காசை விட பல மடங்கு திரும்ப வந்திருக்கும். இந்த முதலீடு

உருவாக்கிய வேலை வாய்ப்புகள் மற்றும் விஸ்காம் கல்வி தான் இன்று யுடியூப் சேனல் நடத்துவதில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னணியில் இருப்பதற்கு காரணம் எனச் சொன்னால் மிகையல்ல. கலைஞர் தந்தது வெறும் டிவியல்ல. அனைவருக்குமான சமூக, பொருளாதார முன்னேற்றம் 🖤❤

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling