Newman ❤ INDIA Profile picture
47., B.A. B.L., ML., Dravidian., Food Lover., Entrepreneur., Politics
Dec 11, 2023 6 tweets 1 min read
சென்னையில் வரலாறு காணாத மழை. நகரின் 50% பால் தேவையை நிறைவு செய்யும் அம்பத்தூர் பால் பண்ணை வெள்ளக் காடாக இருக்கிறது. தனியார் பாலும் சப்ளை இல்லை. பாலுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் படங்கள் தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் பரவுகின்றன. முதலவர் அலுவலகத்திலிருந்து ஒரு போன் வருகிறது "மக்களுக்கு தேவையான பால் தாராளமாக கிடைக்க வேண்டும், என்ன பண்ணுவீங்களோ தெரியாது" எனக் கண்டிப்பான உத்தரவு போடுகிறார். செய்வது தெரியாமல் அதிகாரிகள் கையைப் பிசைந்து நிற்கிறார்கள். முதல்வரிடம் போய் "மற்ற மாவட்ட பால் பண்ணைகளில் இருந்து வரவழைத்தாலும் சுமார்
Sep 8, 2023 8 tweets 2 min read
மேஜிஸ்டிரேட் கோர்ட் என்றழைக்கப்படும் கீழமை நீதிமன்றங்கள் தான் நீதித்துறையின் கை, கால், உடல் முதுகெலும்பு எல்லாமே! உச்ச/உயர்நீதிமன்றங்கள் தலை மட்டும் தான். இந்த கீழமை மன்றங்களின் நீதிபதிகள் தேர்வாணையம் போட்டித் தேர்வு மூலம் 'மெரிட்'டில் வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1/6 Image உயர் நீதிமன்ற நீதியரசர்களோ மூத்த நீதிபதிகளின் கொலீஜியம் எனப்படும் தெளிவற்ற (opaque) தேர்வு முறையில் பணிக்கு வந்தவர்கள். கீழமை நீதிமன்றங்களின் செயல்பாடுகளில் குறை இருந்தால் அதை தலைமை நீதிபதியிடமோ, உள்ளரங்கு கூட்டத்திலோ சொன்னால் அது ஆக்கபூர்வமாக இருக்கும். அதை விடுத்து 2/6
Jan 26, 2023 10 tweets 2 min read
இந்தியாவுக்கு விடுதலை கிடைச்ச ஆகஸ்ட் 15ஐ எளிமையாக கோட்டையில் கொடியேற்றி, பிரதமர் உரையோட முடிச்சிடறோம். ஆனால், குடியரசு தினத்தை அயல்நாட்டு தலைவரை எல்லாம் அழைச்சு விமரிசையாக கொண்டாடுகிறோம். இது ஏன்னு சின்ன வயதில் யோசித்திருக்கிறேன். எதனால் குடியரசு நாளுக்கு அவ்வளவு முக்கியத்துவம்? நம் கூடவே சுதந்திரம் பெற்ற பாகிஸ்தான், இலங்கையில் ராணுவ ஆட்சி, அதிபர் என்ற பெயரில் தனி மனித ஆட்சி எல்லாம் பார்த்து விட்டோம். ஆனால், 75 ஆண்டுகளாக மக்களாட்சி என்ற பாதையிலிருந்து விலகாமல் நாம் பயணம் செய்து கொண்டிருப்பதற்கு காரணம் நம்முடைய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கிய
Nov 20, 2022 7 tweets 3 min read
செல்வி. ப்ரியா இறந்த வழக்கில் டாக்டர்களை கைது செய்வது அவசியமா?
நடந்த மரணத்திற்கு அனைவரும் வருந்துகிறோம். இதற்கு மருத்துவர்கள் தான் காரணம் என்றால் அவர்கள் தண்டிக்கப் பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், மருத்துவர்களைக்
#health #law #thread கைது செய்வது சட்டப்படி சரி தானா? உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் சில வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது:
1. மருத்துவர் என்பவர் கொலை செய்யும் நோக்கில் மருத்துவம் பார்ப்பதில்லை. உயிரைக் காப்பாற்றும் வேலையில் அறிந்தோ அறியாமலோ தவறு நிகழலாம்.
2. மருத்துவர் அந்த சிகிச்சையை செய்ய
Aug 19, 2022 5 tweets 3 min read
இலவசங்களால் என்ன பயன் ? தமிழ் மக்கள் வாழ்வு எப்படி மேம்பட்டிருக்கிறது எனப் பிரதமருக்கு முட்டு கொடுத்து சீமான் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
கலைஞர் தந்த இலவச டிவி திட்டத்தின் பலன்கள் பற்றி இந்த இழையில் பார்ப்போம் #thread #freebies 1996ல் கலைஞர் இலவச டிவி அறிவிக்கும் போது 14" டிவியின் சந்தை விலை ₹5000/-. திமுக அரசு 2006-11 நடந்த 5 ஆண்டு ஆட்சியில் 1,62,59,526 குடும்பங்களுக்கு 3687 கோடி ரூபாய் செலவில் டிவி வழங்கியது. அதாவது ஒரு டிவியின் விலை சுமார் ₹2200/-. டெண்டர் முறை மூலம் அரசு வாங்கியதால் மக்களிடம்
May 24, 2022 4 tweets 1 min read
பட்டினப் பிரவேசம் நிகழ்வில் வலதுசாரிகளுக்கு கிடைத்திருப்பது தற்காலிக வெற்றி மட்டுமே. மனிதனை மனிதனே சுமந்து செல்வது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று நீதிமன்றம் சொல்லவே வாய்ப்புகள் அதிகம் என்கிறது இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளிவந்துள்ள கட்டுரை. 1/4 மத சம்பந்தப்பட்ட விவகாரங்களில் "அவசியமற்ற பழக்கங்கள்" (non essential practices) என பலவற்றை நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. உ.தா. சபரிமலையில் பெண்கள் அனுமதி, ஹிஜாப் விவகாரம். 50 ஆண்டுகளுக்கு முன்பே தருமபுரம் ஆதீனம் கைவிட்ட பல்லக்கில் புதிய ஆதீனகர்த்தர் ஏறியதை எந்த விதத்திலும் 2/4
Nov 23, 2021 5 tweets 2 min read
"சார், லீஸ்ல போன வீட்டை காலி பண்ணப் போறேன். வாங்கிய காசைத் திருப்பித் தர முடியாதுன்னு சொல்றாங்க. என்ன பண்ணட்டும்?" என காலையில் ஒரு போன். விவரங்களை விசாரிக்கும் போது தான் அவர் நம்மூரில் பல ஆண்டுகளாக நடந்து வரும் மோசடிக்கு பலியாகி இருக்கிறார் எனத் தெரிய வந்தது #fraud #alert
1/4 இரண்டு ஆண்டுகளுக்கு முன் முகப்பேரில் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒர் ஃப்ளாட்டை 12 லட்சத்திற்கு லீஸுக்கு எடுத்திருக்கிறார் நண்பர். போன வருடம் ஒரு வங்கியிலிருந்து வந்து கடன் கட்டாததால் வீட்டை காலி செய்யச் சொல்லி நோட்டீஸ் ஒட்டியிருக்கிறார்கள். அரண்டு போன நண்பர் ஓனருக்கு 2/5
Jun 11, 2021 4 tweets 1 min read
திமுக வின் பதவி வகித்த திரு. சாதிக் பாட்சாவின் வீட்டுக்கு எதிரில் நாங்கள் வசித்ததால் 1987 எம்ஜியார் மறைவின் போதும், 91 ராஜீவ் காந்தி கொலையின் போதும் அவர் வீட்டின் மேல் பொறுக்கிகள் கல் எறிவதை பார்த்திருக்கிறேன். அவர் மட்டுமல்ல, பல திமுகவினர் வீடுகள், கடைகள் சூறையாடப்பட்டன ஆனாலும், அவர்கள் கரை வேட்டி கட்டுவதை விடவில்லை. இறுதிப் போரின் போதும், 2ஜி வழக்கு நடந்த போதும் திமுகவினர் மீது வார்த்தைக் கணைகள் வந்து விழுந்தன. ஆனாலும், ஏச்சுக்கும், பேச்சுக்கும் பயந்து விடாமல் கழகத்திற்காக பல உடன்பிறப்புகள் கம்பு சுற்றினார்கள். இதோ, இன்று ஒரு தோழரை