இலவசங்களால் என்ன பயன் ? தமிழ் மக்கள் வாழ்வு எப்படி மேம்பட்டிருக்கிறது எனப் பிரதமருக்கு முட்டு கொடுத்து சீமான் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
கலைஞர் தந்த இலவச டிவி திட்டத்தின் பலன்கள் பற்றி இந்த இழையில் பார்ப்போம் #thread#freebies
1996ல் கலைஞர் இலவச டிவி அறிவிக்கும் போது 14" டிவியின் சந்தை விலை ₹5000/-. திமுக அரசு 2006-11 நடந்த 5 ஆண்டு ஆட்சியில் 1,62,59,526 குடும்பங்களுக்கு 3687 கோடி ரூபாய் செலவில் டிவி வழங்கியது. அதாவது ஒரு டிவியின் விலை சுமார் ₹2200/-. டெண்டர் முறை மூலம் அரசு வாங்கியதால் மக்களிடம்
இருந்து போயிருக்கக் கூடிய ஆயிரக்கணக்கான கோடிகள் மிச்சமாகி அது புழக்கத்தில் இருந்தது. தமிழ்நாட்டில் டிவி ஊடுருவல் (penetration) 95% ஆனதால் தமிழில் இத்தனை சேனல்கள் வந்தன. மற்ற மாநிலங்களில் HUL, P& G, ITC போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் பிராண்டுகளே கோலோச்சும் போது இங்கே கோல்டுவின்னர்
சக்தி மசாலா, ஆச்சி மசாலா, சிக் ஷாம்பு, இதயம், லயன் டேட்ஸ் என தமிழ்நாட்டில் இத்தனை பிராண்டுகள் உருவானதற்கு காரணம் இந்த டிவி ஊடுருவல் தான். இந்த சேனல்கள் ஏற்படுத்திய மூதலீடுகளை கணக்கில் எடுத்தாலே அரசு போட்ட காசை விட பல மடங்கு திரும்ப வந்திருக்கும். இந்த முதலீடு
உருவாக்கிய வேலை வாய்ப்புகள் மற்றும் விஸ்காம் கல்வி தான் இன்று யுடியூப் சேனல் நடத்துவதில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னணியில் இருப்பதற்கு காரணம் எனச் சொன்னால் மிகையல்ல. கலைஞர் தந்தது வெறும் டிவியல்ல. அனைவருக்குமான சமூக, பொருளாதார முன்னேற்றம் 🖤❤
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தி இந்து நாளேடு @the_hindu @THChennai ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் 5000 பக்க குற்றப்பத்திரிகையை ஆய்வு செய்து மூன்று பாக கட்டுரையாக வெளியிட்டுள்ளது. அதன் மூன்றாம் பாகத்தின் தமிழ் சுருக்கம். விரிவான திட்டத்தின் வலைப்பின்னலை பிரித்தெடுத்த காவல்துறை #இழை 1/14
வெறும் பழிக்குப் பழி கொலையாகத் தோற்றமளித்த சம்பவத்தை 17 தனிப்படைகள் அமைத்து, தொழில்நுட்ப உதவியுடன் நேர்த்தியான வகையில் விசாரணையை நடத்தி குறிப்பிட்ட நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்தது சென்னை பெருநகர காவல்துறை 2/14
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்யப் பயன்படுத்திய ஆயுதங்களின் பயணம் ஒரு சினிமா ஸ்க்ரிப்டை மிஞ்சிவிடும். கொலையாளிகள் சம்பவ இடத்தில் விட்டுச் சென்ற நாட்டு வெடிகுண்டுகள் சம்பவ செந்திலின் கூட்டாளி புதூர் அப்புவால் வாங்கப்பட்டு ஒரு கருப்பு நிற லன்ச் பாக்சில் கோடம்பாக்கத்தில் உள்ள 3/14
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் குற்றப்பத்திரிக்கை இரண்டாம் பாகம் #இழை
வெறும் பழிக்குப் பழியல்ல! மூன்று குழுக்களுக்கு இடையே நடந்த சென்னையின் நிழல் உலகத்தை ஆளும் போட்டியே கொலைக்கு காரணம்! துப்பு துலக்கிய காவல்துறை 1/9
முதல் சந்திப்பு:
ஏப்ரல் 9, 2024 அன்று வியாசர்பாடியில் உள்ள அஸ்வத்தாமனின் வீட்டில் ஆற்காடு சுரேஷின் உறவினரான
வழக்கறிஞர் அருள் (எதிரி.எண்.3) உள்ளிட்ட குழு ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான திட்டத்தை விவாதித்தது. சிறையில் இருக்கும் தந்தையுடன் கலந்தோசிக்க நாள் குறித்தார் அஸ்வத்தாமன் 2/9
சதியாலோசனை: சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல்லீரல் சிகிச்சைக்காக நாகேந்திரன் வருவது வழக்கம். அப்படி ஏப்ரல் 20 அன்று வந்து வேலூர் சிறைக்குத் திரும்பும் வழியில் வாலாஜாவில் உள்ள உணவகத்தில் வண்டி நின்றது. வண்டியைத் தொடர்ந்து சென்ற அஸ்வத்தாமன் உணவகத்தில் தந்தையுடன் 3/9
தி இந்து நாளேடு @the_hindu @THChennai ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் 5000 பக்க குற்றப்பத்திரிகையை ஆய்வு செய்து மூன்று பாக கட்டுரையாக வெளியிடுகிறது. அதன் முதலாம் பாகம் இன்று (02.11.24) வெளியாகியுள்ளது. அதன் தமிழ் சுருக்கம் #இழையாக 1/13
திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்த ஒரு குடும்பத்தின் ஒன்பதாவது பிள்ளை ஆம்ஸ்ட்ராங். ரயில்வே துறையில் வேலைக்கு சேரும் ஆர்வத்தில் சிறு வயதில் பாக்சிங் கற்றுக் கொண்டார். 2006ல் கவுன்சிலரான ஆம்ஸ்ட்ராங் திருப்பதியில் சட்டப் படிப்பு முடித்து வழக்கறிஞராக தொழில் செய்தார் 2/13
2007ல் பகுஜன் சமாஜ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். சில வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு சரித்திர பதிவேடு குற்றவாளியாக காவல்துறையால் கருதப்பட்டவர், காலப்போக்கில் எல்லா வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டார். சமூக செல்வாக்கோடு சேர்ந்து எதிரிகளும் வளர்ந்தனர் 3/13
#ChennaiAirShow My personal experience
இது என் தனிப்பட்ட அனுபவம் மட்டுமே. எந்த அரசியல் சார்பும் அற்ற பதிவு இது.
ஞாயிறு காலை எட்டு மணி வரை இந்த நிகழ்ச்சிக்கு போவதாக எந்த திட்டமும் இல்லை. பிள்ளைகள் ஆசைப்பட்டதால் கூட்டிப் போவதென்று முடிவாகி 9:30 மணிக்கு பல்லாவரத்தில்
இருந்து சொந்த வாகனத்தில் புறப்பட்டோம். செய்தித்தாள்களில் வந்த தகவலை வைத்து, ஆல் இந்தியா ரேடியோ பின்புறம் உள்ள செயிண்ட் பீட்ஸ் மைதானத்தில் பார்க்கிங் செய்துவிட்டு காந்தி சிலை வரை நடந்து சென்று சேர்ந்த போது மணி 11:00. சில நிமிடங்களில் நிகழ்ச்சி தொடங்கியது
கைவசம் கொண்டு சென்ற பொருட்கள்: ஒரு குடை, ஆளுக்கொரு தொப்பி, தண்ணீர் பாட்டில்கள், மிட்டாய்கள். இது போக பார்க்கிங் அருகே அரசு வினியோகித்த தொப்பி கிடைத்தது. வழி நெடுக காவல்துறையினர் பாதசாரிகளை ஒழுங்குபடுத்தினர். பீச்சில் ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்திருந்தனர்
"என்னிடம் நூற்றாண்டுகளின் தாகம் இருக்கிறது" பூரண மதுவிலக்கு மாநிலமான பீகாரில் ஒரு டாக்சி ஓட்டுநரின் வார்த்தைகளில் தொடங்கும் இந்தக் கட்டுரை தங்களின் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள பீகாரிகள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று விவரிக்கிறது. கங்கை நதியில் படகு வழியாக கடத்துவது முதல் 1/4
அண்டை நாடான நேபாளத்திற்கு பயணித்துக் குடிப்பது, டெல்லியில் படிக்கும் மாணவர்கள் கைச்செலவுக்காக மது கடத்துவது, கார்களில் நடமாடும் பார் என்று ஒரு தனி வாழ்வியலையே உருவாக்கியிருக்கிறது. குடிப்பழக்கம் உள்ளவர்கள் அதை விட முடியாமல் இரு மடங்கு விலை கொடுத்து குடிப்பது, 2/4
விலை குறைந்த மட்டமான சரக்குகளைக் குடிப்பது, வாய்ப்பு கிடைக்கும் போது கழுத்து வரைக்கும் குடித்து நிலை தடுமாறுவது என்று உள்ள போக்கின் ஆபத்தை சுட்டிக் காட்டுகிறார். எல்லை மாவட்டங்களில் பெட்டிக் கடைகளில் கூட மதுவை ஒளித்து வைத்து விற்கும் அவல நிலை இருப்பது மது விலக்கு 3/4
அன்ரிசர்வ்டு பெட்டியில் உட்கார கடும் தள்ளு முள்ளு போட்டியில் வெற்றி பெற்று இடம் பிடித்தவர்கள் மற்றவர்கள் அந்த பெட்டியில் ஏறி விடாமல் இருக்க தங்களால் என்ன முடியுமோ அத்தனை முயற்சி செய்வார்கள். பட்டியல் பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டிலும் அது தான் நடக்கிறது என்று #இழை 1/12
நீதியரசர் கவாய் தனது தீர்ப்பில் ஒரு உவமையைக் கூறியுள்ளார். உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை எளிமையாகப் புரிந்து கொள்ள இது உதவும். எஸ்.சி பட்டியல் என்பது அரசியலமைப்பு சட்டத்தால் செயற்கையாக உருவாக்கப்பட்டது. ஒரே பட்டியலில் இருப்பதால் எல்லா தலித்களும் சமமான சமூக பொருளாதார 2/12
நிலையில் இருப்பதாகக் கருத முடியாது. 1950ல் கொண்டு வரப்பட்ட பட்டியலின இட ஒதுக்கீட்டை மீளாய்வு செய்யும் போது, அவர்களுக்குள்ளும் பல சாதிகள் இன்னும் பின்தங்கிய நிலையில் இருப்பதைப் பார்க்க முடிகிறது. மாநில அரசுகள் அப்படிப்பட்ட சாதிகளுக்கு உள் ஒதுக்கீடு வழங்கி கைதூக்கி விட 3/12