கலைஞரின் ஏழ்பரியோன் Profile picture
சமூகநீதி பேசும் 2K Kids |தாயின் கருவிலிருந்தே நான் சுயமரியாதைக்காரன் ❤️🖤🖋️| மற்றொரு ஜென்மத்தில் கலைஞரின் கணையாழியாக பிறக்க தவம் செய்துகொண்டிருப்பவன்...💥💥

Aug 23, 2022, 7 tweets

யார் இந்த மன்னை நாராயணசாமி??

திமுக வரலாற்றை எதிர்காலத்தில் பாமரமக்கள் பேசும் போது கற்பனைக்கு எட்டாத ஒரு பெயர் வரும். ஆம்,அந்த பெயர் தான் "மன்னை நாராயணசாமி".. தஞ்சையின் பெரியார், பெரியாரின் சீடர், அண்ணாவின் ஆற்றலாளன், தலைவர் கலைஞரின் தஞ்சை மாநகரத் தளபதி, தர்ம சத்திரத்திரத்தின்

சகலகலாவல்லவன், தருமத்தாயின் மூத்தபிள்ளை, தஞ்சையின் தளகர்த்தர் என்றெல்லாம் புகழப்படக் கூடியவர் அய்யா "மன்னையார்" அவர்கள்.சிவகங்கை மாநாட்டிற்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் தொண்டர்களை எப்படி அழைப்பது என எண்ணிக்கொண்டிருந்த போது "மன்னை நாராயணசாமி" தலைமையில் மாநாடு நடைபெறும் என அறிவித்தார்.

அதில் மாநாட்டு வாசகமாக அண்ணா எழுதிய "எறும்பனையர் எம் மறவர் இன்னனையர் நம் மன்னை" என்று புகழேணியின் உச்சியில் இருந்தார் அய்யா மன்னையார். தமிழகத்தின் அப்போதைய #ஏக்நாத்சிண்டே என்றழைக்கப்படும் MGR ஜெயலலிதா பேச்சை கேட்டு தனிகட்சி தொடங்கிய போது தலைவர் கலைஞரின் நிழலாக வலம் வந்தவர் தான்

அய்யா மன்னை நாராயணசாமி அவர்கள். 1975ல் மிசாவில் கைது செய்யப்பட்ட போது இக்கழகத்திற்கு மேலும் ஒரு மணிமகுடத்தை சூட்டியவர் இவர்தான்.. ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டத்தில் இன்று திமுக அசைக்க முடியாத கோட்டையாக உள்ளதற்கு காரணம் நம் மண்ணையார் போட்ட விதைதான்..மாநாடுகளை அவ்வப்போது நடத்தி MGRன்

அரசாங்கத்தின் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்தவர்.. வயதில் கலைஞர் இளையவராக இருந்தாலும் அவரை தலைவராக ஏற்று கழக கட்டுப்பாட்டு விதிகளை மீறி எந்த திசையிலும் சென்றதும் இல்லை..வளரும் தலைமுறைக்கு சொன்னால் அன்னமிட்ட கரத்துக்கு சொந்தகாரர். ஆம்,தீவிர நாத்திகரான இவர் தன் குடும்ப பாரம்பரிய

முறைப்படி "தைப்பூசம்" திருநாளன்று இலவச நலத்திட்டங்களை தனது சொந்த பணத்திலிருந்து வழங்குவார். இன்று வரை 100 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் விட்டுச் சென்ற தர்ம சத்திரத்தை அவர் குடும்பம் நடத்தி வருகிறது.. திமுகழகத்திற்காக பல சித்திரவதைகளை அனுபவத்ததால் தான் இந்த இயக்கம் ஒரு நூற்றாண்டு காண

போகிறது. கொண்ட கொள்கையில் விசுவாசமும், தலைவர் கலைஞரின் துன்பத்தை தலையில் தாங்கிய தொண்டனாகவும் விளங்கிய மன்னையின் மன்னனை போற்றுவோம் உடன்பிறப்பே!! 🙏
💥💥💥

🖤❤️

#Dravidian_Leaders #Mannai_Narayanasami

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling