மெட்ராஸ் மாகணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வலியுறுத்தி அவர் இருந்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமையான காமரஜரை எதிர்த்து போராடி 76 நாட்கள் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்த்தியாகம் செய்த தியாகி சங்கரலிங்கனார் நினைவு தினம் இன்று 1/1
சங்கரலிங்கனார் 27.7.1956 அன்று விருதுநகரில் அவர் போரட்டத்தை துவங்கினார் அந்த போரட்டாம் முதல்வர் காமராசரின் ஆட்சியை அலட்சியப்படுத்தியது பிரதமர் நேருவோடு பேசி சங்கரலிங்கனாரின் உயிரை பாதுகாக்க வேண்டிய காமராசர் செய்தியாளர்களிடம் இந்த பெயர் மாற்றங்களால் ஒரு பயனும் இல்லை என்றார் 1/2
இது மக்களின் உணர்ச்சியை தூண்டி விடுகிற வேலை அவர் முன் வைத்த 12 கோரிக்கைகளில் 10 கோரிக்கைகள் மத்திய அரசோடு தொடர்புடையது என்று பதிலளித்தார் காமராஜர் மேலும் சங்கரலிங்கனார் இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன் நான் ஒரு வேலை இறக்க நேரிட்டால் 1/3
என் உடலை தயவு செய்து காங்கிரஸ்காரர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் என் போரட்டதிற்கு உறுதுணையாக இருந்த கம்யூனிஸ்டுகளிடம் ஒப்படையுங்கள் என பத்திரிக்கை நிருபர்களுக்கு பேட்டியளித்தார் போரட்டத்தை நிறுத்தும் படி ம.பொ.சி, அண்ணாதுரை, ஜீவானந்தம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர் 1/4
அண்ணா அவர்கள் சங்கரலிங்கனாரை நேரில் சந்தித்தார் அப்போது “எல்லையை வாங்க முடியாதா ? இதில் என்ன கஷ்டம்? இதய சுத்தியோடு ஆந்திரா சர்க்காருடன் பேசினால் காரியம் நடக்காதா? என்று கண்ணீர் சிந்தியபடி கேட்டதாக அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார் 1/5
அவரின் போரட்டம் 60 நாட்களை தாண்டியது ஆனாலும் காமராசரின் கல்மனம் கரையவில்லை அவரின் போராட்டத்திற்கு பொதுவுடைமை கட்சி முழுமையாக துணை நின்றது
அவர் உயிருக்கு போராடிய நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கும் போரட்டத்தை தொடர்ந்தார் 79வது நாளில் உயிர் பிரிந்தது 1/6
காங்கிரஸால் தோற்கடிக்கப்பட்ட தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானம் பேரறிஞர் அண்ணா ஆட்சி அமைந்த பிறகு 1968 ஜுலை 18 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது பேரவை தலைவர் ஆதித்தனார் அனுமதியுடன் அண்ணா "தமிழ்நாடு" என மூன்று முறை கூற "வாழ்க" என்று உறுப்பினர்கள் வின்னதிர முழக்கமிட்டார்கள் 1/7
சங்கரலிங்கனார் தோழர் ஜீவானந்தம் ம.பொ.சி , அண்ணா என்று தலைவர்கள் போராடி தீர்மானத்தை பல முறை முன் மொழிந்து தோற்க்கடிப்பட்ட தமிழ் நாடு பெயர் திமுக ஆட்சிக்கு வந்த உடனே நிறைவேறியது “நான் பேரவையில் தமிழ் நாடு என்று கூறுவேன் நீங்க எல்லாம் வாழ்க வாழ்க என்று கூற வேண்டும் என்றார் அண்ணா 1/8
சங்கரலிங்கனாருக்கு கொடுத்த வாக்குறுதியை முதலமைச்சர் ஆனதும் அதை மறக்காமல் நிறைவேற்றினார். இதை ஒரு வெற்றியாக சொல்லாமல் இது தமிழுக்கு வெற்றி. தமிழருக்கு வெற்றி. தமிழ் வரலாற்றுக்கு வெற்றி. தமிழ்நாட்டுக்கு வெற்றி அனைவரும் இந்த வெற்றியிலே பங்குகொள்ள வேண்டும்" என்றார் அண்ணா 1/9
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.