M.SivaRajan Profile picture
| ஓம் நமசிவாய 🕉 | | என்றும் பொன்னம்பலத்தாரின் திருவடி நிழலில் அடியேன் 🙏 | | Temple Priest 🕉 ஜோதிடர் 🙏 | #சிவவழிபாடு #ஜோதிடம்அறிவோம்

Jan 23, 2023, 6 tweets

#சோமாஸ்கந்தர்

பேரருளைப் பெற்றுத் தரும் சோமாஸ்கந்தர் :

சனாதன தர்மத்தில்

சைவம் (சிவன்),

வைணவம் (விஷ்ணு),

சாக்தம் (சக்தி),

கௌமாரம் (முருகன்),

சௌரம் (சூரியன்),

காணாபத்தியம் (விநாயகர்) என ஆறுபிரிவுகளைக் கொண்டது.

இதில் சிவன், சக்தி, முருகன் மூன்றும் இணைந்த வடிவமாக இருப்பது ‘சோமாஸ்கந்தர்’ அமைப்பு.

சிவபெருமானும், பார்வதியும் இருக்க அவர்களுக்கு இடையில் முருகப்பெருமான் இருக்கும் இந்த வடிவம், நல்புத்திரப்பேறு நல்கும் சக்தி படைத்தது.

உண்மையாகிய சிவனும், அறிவாகிய சக்தியும் சேர்ந்தால் கிடைப்பது கந்தன் என்ற இன்பம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் தான் இந்த ‘சோமாஸ்கந்தர்’ இருக்கிறார்.

சுகாசனமூர்த்தியான சிவபெருமான் அமர்ந்த நிலையில் இருந்து,

பார்வதியின் பக்கம் சற்றே முகம் சாய்த்துப் பார்க்க,

அதே ஆசனத்தில் வலது காலை மடக்கி, இடது காலை தொடங்கவிட்ட நிலையில் பார்வதி வீற்றிருக்கிறாள்.

அவளது இடது கையில் வரத முத்திரையும், வலது கையில் குவளை மலரும் தாங்கியுள்ளாள்.

இருவருக்கும் இடையில் முருகப்பெருமான் வீற்றிருக்கிறார்.

இவர் பார்வதியின் கழுத்தளவு உயரத்திற்கு நின்ற நிலையில் இருப்பார்.

சோமாஸ்கந்த மூர்த்தியே தியாகராசர் என்ற பெயருடன் விளங்குகின்றார்.

இத்தலங்கள் `சப்த விடங்கத் தலங்கள்' என்று அழைக்கப்படுகின்றன.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling