꧁ད Dr.மகிழினி தஞ்சை ཌ꧂🖤❤️ Profile picture
The Spirit of Magilini Writes MBBS, MD - General Medicine, DM - Nephrology

Feb 10, 2023, 8 tweets

Thread!

இவ்வளவு ஆணவத்துடன் நடந்துகொள்ளும் பார்ப்பனர்களின் உயர்சாதி எண்ணத்தை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
~பெரியார் (1/1)

சேரன்மாதேவியில், வ.வே.சு ஐயர் என்கிற தேச பக்தர், காந்திய நெறிமுறைப்படி குருகுலம் ஒன்றை நடத்தி வந்தார். இதற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ரூ.10,000 நிதி அளித்திருந்தது. பொதுமக்கள் சார்பிலும் நிதியுதவி அளிக்கப்பட்டது. பல்வேறு காங்கிரஸ் தலைவர்களின் பிள்ளைகள்,(1/2)

இந்தக் குருகுலத்தில் தங்கிப் படித்து வந்தனர். அவர்களில், முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் மகனும் ஒருவர்.இந்த குருகுலத்தில் பிராமண மாணவர்களுக்கு அறுசுவை உணவும், பிரமணரல்லாத மாணவர்களுக்கு சாதாரண உணவும் வழங்கப்பட்டது.(1/3)

தண்ணீர்ப் பானையும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒருநாள், ஓமந்தூராரின் மகன் பிராமணர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த பானையில் தண்ணீர் அருந்தியதைக் கண்ட வ.வே.சு ஐயர், அவனை ஓங்கி அறைந்துவிட்டார். இதை அவன் ஓமந்தூராரிடம் கூற, அவர் அவனை ஈரோட்டில் சென்று முறையிடச் சொன்னார்.(1/4)

தீண்டாமை கண்டு கடும் கோபமுற்ற ஈ.வெ.ரா, இது குறித்து விசாரிக்க 1925-ம் ஆண்டு ஜனவரி 17-ம் நாள், காங்கிரஸ் செயற்குழுவைக் கூட்டினார். குருகுலத்தில் அனைவருக்கும் சமமான உணவு வழங்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்துவிட்ட வ.வே.சு ஐயர்,(1/5)

“இங்கு இப்படித்தான் நடக்கும்” என்று சாதி ஆணவத்துடன் பதிலளித்தார். தகவல் காந்தியடிகள்வரை கொண்டு செல்லப்பட்டது. அவர், வழவழ கொழகொழ என்று சப்பைக் கட்டு கட்டினார். “குருகுலத்தை உருவாக்குவது கடினம். அதன் நிர்வாகத்தில் நாம் தலையிடக்கூடாது” என்றார் இராஜாஜி.
( 1/6)

இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, ஈ.வெ.ரா அணி வெற்றிபெற்றது. சமபந்தி கோரிக்கை ஏற்கப்படாததால், நிதியுதவி நிறுத்தப்பட்டது. இதன் பிறகு ஒருநாள், மகளை அழைத்துக்கொண்டு பாபநாசம் சென்ற வ.வே.சு ஐயர், அருவியில் தவறி விழுந்த மகளை காப்பாற்ற முயன்று, இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.(1/7)

குருகுலம் மூடப்பட்டது. சேரன்மாதேவியில் நடைபெற்ற நிகழ்வு ஈ.வெ.ரா.வின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இவ்வளவு ஆணவத்துடன் நடந்துகொள்ளும் பார்ப்பனர்களின் உயர்சாதி எண்ணத்தை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

#வரலாறு

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling