🇮🇳DURGAaa 🪷ஜெய் ஹிந்த் 🚩 🔰 Profile picture
உலகை காக்கும் இனிய ஈசனே சிவகாமி நேசனே எனை ஆளும் பரமே பராபரமே 🙏 🌿எம் தந்தை வெள்ளியங்கிரி ஆண்டவரின் துணை 🌿🌿🌿🌿 ஓம் சரவண பவ 🙏 வேலும் மயிலும் சேவலும் துணை

Feb 16, 2023, 11 tweets

அவன் அருளால் அவன் தாள் வணங்கி 🙏
#வெள்ளியங்கிரி மலை ஏற நடை நாளை முதல்
17 :02:2023அன்று திறக்கப்பட்டது.may 30 வரை நடை திறக்கப்பட்டிருக்கும்.

கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பூண்டி செல்லும் பேருந்தில் செல்லலாம் . அல்லது ஈஷா செல்லும் பேருந்தில் செல்லலாம்.

ஈஷா செல்லும் பேருந்தில் சென்றால் தண்ணீர் பந்தல் எனும் இடத்தில் இறங்கி ஒன்றரை கிலோ மீட்டர் நடக்கவேண்டும் அல்லது அங்கு இருக்கும் ஆட்டோவில் செல்லலாம்.
மலை ஏறுகிறவர்கள் ஒருவருக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் கேன் உணவு (புளி சாதம் சப்பாத்தி அல்லது விரைவில் கெடாத உணவு ஒரு நேரத்திற்கு),

கடலை மிட்டாய் வாங்கி செல்லுங்கள்.இரவில் செல்ல பேட்டரி அவசியம்.
குளிர் இருக்கும் எனவே குளிர் தாங்கும் சொட்டர் எடுத்துக் கொண்டு செல்லவும் குளிர் தாங்க இயலாதவர்கள்.

#குறிப்பு:சிவன் சொத்து குல நாசம் எனவே வெள்ளியங்கிரி ஆண்டவரின் சொத்தை காப்பது உங்கள் கடமை மலையின் தூய்மையை உங்கள்

கையில் தான் அவரவர் கொண்டு செல்லும் பொருட்களின்
குப்பையை அவரவர் திருப்பி கீழே எடுத்து கொண்டு வந்து விடுங்கள்.அங்குள்ள கடைகளில் வாங்கி நீங்கள் உபயோகிக்கும் பொருளின் குப்பையையும் கீழே எடுத்து கொண்டு வந்து விடுங்கள்

தனிமனித சுகாதாரத்தினால் மட்டுமே இயற்கையை பாதுகாக்க முடியும் 🙏

ஆறாவது மலை திருநீறு மலையில் திருநீறு எடுக்கிறேன் என்ற பெயரில் அங்கே உள்ள மண்ணை எடுக்காதீர்கள்.அதனால் வழியில் சிறுகுழிகள் ஏற்படும் மழை பெய்யும் போது அரிப்பு ஏற்பட்டு அந்த இடம் பெரிய பள்ளமாக மாற்றம் பெரும் பிறகு பாதை அழிந்து விடும்.இதை புரிந்து கொள்வீர்கள்.

உண்மையில் அது #திருநீறு இல்லை கால்சியம் சத்து அதிகம் கொண்ட மண் அவ்வாளவே.
அவசியம் மூங்கில் தடி வாங்கி செல்லுங்கள் அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.மூங்கில் தடி அடிவாரத்தில் உள்ள அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கடையில் கிடைக்கும் அதன் விலை 30 ரூபாய் தான்.

பெண்கள் மலை ஏற அனுமதி இல்லை.10 வயது சிறுமிகள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட அம்மாக்கள் மட்டுமே ஏற அனுமதி கிடைக்கும்
(பெண்கள் மலையேற அனுமதிக்காத காரணம் பெண் அடிமை தனம் இல்லை இந்த மலை அதிக உயரம் தூரம் மற்றும் மலையில் அடிப்படை வசதிகள் இல்லை என்பதே காரணம்)

வெள்ளியங்கிரி வரும் வெளிமாவட்ட நண்பர்கள் காண வேண்டிய திருக்கோயில்கள் வெள்ளியங்கிரி மலை ஏற்றம் காணும் முன்பே தரிசனம் செய்து விடவும்

கோயம்புத்தூர் அடையாளம் #கோனியம்மன் கோவில் டவுன்ஹால் மணிக்கூண்டு

#பேரூர்பட்டீஸ்வரர் கோயில் பேரூர்
மருதமலை முருகன் கோயில் பாம்பாட்டி சித்தர் குகை

மலைக்கு மேல் போதைப்பொருள் மற்றும் பீடி குட்கா போன்ற பொருட்கள் பாலித்தீன் பைகள் எடுத்து செல்ல அனுமதி இல்லை இதற்காக சோதனை நடத்திய பிறகு தான் நீங்கள் மலை ஏற அனுமதிக்கபடுவீர்கள்

மலைக்கு கொண்டு செல்லும் குப்பைகளை அவரவர் கீழே கொண்டுவந்து விட்டால் போதும் மலையின் தூய்மையை காக்க வேண்டும்

இந்த ஆண்டு நீங்கள் கொண்டு செல்லும் வாட்டர் பாட்டில்களில் வனத்துறை சார்பாக ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது அதற்கு ரூபாய் 20 ரூபாய் வசூலிக்கப்படும் மலையிலிருந்து இறங்கி வந்தவுடன் அந்த பாட்டிலை கொடுத்து அந்த பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று வனத்துறை அறிவித்திருக்கிறது.

வெள்ளியங்கிரி சென்று
எம் தந்தை சிவபெருமானின் ஆசியும் பெற்று நல்ல முறையில் திரும்ப வருங்கால்
அனைவரும்

ஓம் நம சிவாய வாழ்க 🙏
சர்வமே சிவம் 🔥 சிவமே தவம்‌ எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling