#BookReview
#Thread
"Gary Wilson" அவர்கள் எழுதிய "Your Brain On Porn: Internet Pornography and the Emerging Science of Addiction" புத்தகம் அதிகப்படியாக ஆபாச படங்கள் பார்ப்பவர்களில் ஏற்படும் உடல்நலம் மற்றும் மனநல மாற்றங்கள் குறித்து விரிவாக பேசியுள்ளது.
(1)
ஆபாச படங்கள் பார்ப்பது சிலருக்கு சாதாரணமான ஒன்று, ஆனால் நாட்கள் செல்ல செல்ல சிலருக்கு இந்த பழக்கம் ஒரு போதைப்பழக்கம் போல மாறி இதற்கு எப்படி அடிமையாகிறார்கள் என்பதையும் விரிவாக பேசுகிறது. இந்த பழக்கத்தால் எப்படி நிஜ உலகில் இருந்து
(2)
மன அளவில் நிழல் உலகத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை சொல்லும் எச்சரிக்கை அடையாளங்கள் குறித்தும் பேசியுள்ளது, முக்கியமாக ஒருவர் இந்த பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறாரா இல்லையா என்பதை பிரித்து அடையாளம் காணுவதற்கான உபாயங்களும் இதில் சொல்லப்படுகிறது.
(3)
எத்தனையோ புத்தகங்கள் இது சார்ந்து வந்தாலும், வாசிப்பவரையோ அல்லது ஆபாச படங்களுக்கு அடிமையாக இருப்பவரையோ குற்றவாளி போல உணர வைக்காமல், வாசகருடன் நல்ல உரையாடலை நிகழ்த்துகிறது இந்த புத்தகம்.
நிறைய தகவல்கள், சிறப்பாக தொகுக்கப்பட்ட உளவியல் சார்ந்த விஷயங்கள் என தனித்துவமாக
(4)
அமைந்துள்ளது இந்த புத்தகம்,
வாய்ப்புள்ளவர்கள் படித்துப் பாருங்கள்.
Your Brain on Porn: Internet Pornography and the Emerging Science of Addiction - By. Gary Wilson
E- Book available in Kindle, Click the link to read 👇🏽
amazon.in/dp/B00N2AH8NW?…
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
