அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Mar 18, 2023, 8 tweets

#மதுரை_மீனாக்ஷி_அம்மன்_திருக்கோவில் #சிறுகுறிப்பு முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தைக் கண்டறிந்து, முதலில் இந்தக் கோவிலையும், பின் மதுரை நகரத்தையும், குலசேகரப் பாண்டிய மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு. கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து, அழகிய நகரமாக்கும்படி, பாண்டிய

நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகரப் பாண்டியனின் கனவில், மதுரை சொக்கன் தோன்றிக் கூறியதால், அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி, புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது.

2500 வருடங்கள் பழமையான மதுரை நகரானது, தமிழ் இலக்கிய வரலாற்றிலும், இந்து சமய வரலாற்றிலும் முக்கியம் வாய்ந்தது. மதுரை நகர், திருவாலவாய், சிவராச தானி, பூலோக கயிலாயம், கடம்ப வனம், நான்மாடக் கூடல், சிவ நகரம், துவாதசாந்தத் தலம், சமட்டி வித்தியாபுரம், கன்னியாபுரம் ஆகிய பெயர்களில்

அழைக்கப்பட்டுள்ளது.
#மதுரை திருப்பாற்கடலைத் கடைந்த போது, நாகம் உமிழ்ந்த விஷத்தை, இறைவன் 'மதுரம்' (அமிழ்தம்/தேன்) ஆக்கியமையால், இத்தலம் 'மதுரை' என்று பெயர் பெற்றதென்பர்.
#நான்மாடக்கூடல் மதுரையை அழிக்க வருணன் ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டு, சிவபெருமான் தன் சடையிலிருந்து

விடுத்த நான்கு மேகங்களும், நான்கு மாடங்களாகக் கூடி, மதுரையைக் காத்ததால் 'நான்மாடக்கூடல்' என்ற பெயர் மதுரைக்கு வந்தது.
#ஆலவாய் சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு, வட்டமாகத் தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு, இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால், 'ஆலவாய்' என்ற பெயர் இத்தலத்திற்கு

ஏற்பட்டுள்ளது. இக்கோயில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குகிறது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில், எட்டுகோபுரங்களையும், இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 32

கற்சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும், கருவறை விமானங்களைத் தாங்குகின்றன. மீனாட்சி அம்மன் கோபுரம், காளத்தி முதலியாரால், பொ.யு 1570-ல் கட்டப் பெற்று, பொ.யு. 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை சண்முகத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. சுவாமி கோபுரம், பொ.யு. 1570 ஆம் ஆண்டில்

கட்டப் பட்டு, திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. இக்கோயிலினுள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் உள்ளது.
இதுவரை சென்று தரிசித்ததில்லை என்றால் கட்டாயம் சென்று தரிசிக்க வேண்டிய தலம் இது.
ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் போற்றி!
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling