#ஞாயிறு_ஸ்பெஷல் #சூரியனின்_பெருமைகள்
சூரியன் உலக இயக்கத்திற்கு மிக முக்கியமான ஒன்று. அதன் சக்தியால் தான் ஜீவராசிகள், பயிர்கள் வாழ்கின்றன, வளர்கின்றன. கோடை, குளிர், மழை போன்ற பருவ மாற்றங்களும் கூட சூரியனாலேயே ஏற்படுகின்றன. அத்தகைய சிறப்புமிக்க சூரியனை இந்துகள் வழிபடுவது வழக்கமாக
உள்ளது. சூரியனை வழிபடும் பிரிவிற்கு சவுமாரம் என்று பொருள். சூரியன் சிவ பெருமானின் வலது கண்ணாக இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. சூரியனை சிவனோடு ஒப்பிட்டு சிவ சூரியன் என்றும், விஷ்ணுவோடு ஒப்பிட்டு சூரிய நாராயணர் என்றும் அழைப்பார்கள். சிவபெருமானை நோக்கி கடுமையான தவம் இருந்த சூரியன்
#கிரகபதம் என்னும் பேறும் ஆயிரம் கிரகணங்களோடு ஒளி மண்டலத்தில் உலா வரும் உயர்வையும் பெற்றான். சூரியன் மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகளுக்கும் செல்வார். அவர் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்லும் பொழுது தான் மாதப்பிறப்பு நிகழ்கிறது. சூரியன் பச்சை நிறமுடைய 7
குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வருகிறார். அந்த தேருக்கு ஒரே ஒரு சக்கரம் தான் உண்டு. இந்தக் குதிரைகள் பூட்டிய தேரோட்டியின் பெயர் அருணன். இவருக்கு கால்கள் கிடையாது. இவர் திருமாலின் பெரிய திருவடி என்று போற்றப்படும் கருட பகவானின் அண்ணன் ஆவார். சூரியனின் ரதம் பொன் மயமானது. அந்த
ரதத்துக்கு 5 ஆரங்களும் 3 நாபிகளும் உண்டு. 3 நாபிகளும் 3 காலத்தை குறிக்கும். சூரிய சக்கரத்திலுள்ள 6 கட்டைகளும், 6 ருதுக்களை குறிக்கின்றன. சக்கரத்தின் மேல் பாகமும், கீழ்பாகமும் உத்திராயணம் தட்சிணாயத்தை குறிக்கிறது. சூரிய பகவான் தன் தேரில் 4 பட்டணங்களை சுற்றி வந்து, காலை, மதியம்,
மாலை, அர்த்தராத்திரி என்ற காலங்களை உண்டாக்குகிறார். சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் முக்கியமானது
#ரதசப்தமி ஆகும். இது #சூரியஜெயந்தி
என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் வரும் சப்தமியையே ரத சப்தமி. அன்றைய தினம் சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச் செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர
வடக்கு நோக்கி திரும்பி பயணத்தை தொடங்குகின்றன. இந்த இனிய நாளில் சூரிய உதயத்தில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு சேர்ப்பதாகும். கணவனை இழந்தவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது என்று
புராணங்கள் தெரிவிக்கின்றன. ரதசப்தமி
விரதத்தை சூரிய உதயத்தில் செய்ய வேண்டும். சர்க்கரைப்பொங்கல், உளுந்து வடை நைவேத்தியமாக படைத்து பூஜை செய்ய வேண்டும். கோதுமையால் செய்த சப்பாத்தி, சாதம் போன்றவற்றை பசு
மாட்டிற்கு கொடுப்பது நல்ல பலனைத் தரும். வாசலில் சூரிய ஒளிபடும் இடத்தில் ரதம் வரைந்து அரிசி, பருப்பு,
வெல்லம்
படைக்கலாம். சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆகலாம் என்கிறது புராணம். ரதசப்தமி அன்று தொடங்கும் தொழில் பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதே போல் இந்நாளில் செய்யப்படும் தான, தருமங்கள் பலமடங்கு புண்ணியம் கிடைக்கும்.
சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம்
போற்றும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுந்தரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்.
இன்னுமொரு துதி:
காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்
வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனைரட்சிப்பாய் சேங்கதிரவனே போற்ற
சூரிய காயத்ரி :
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்
ஓம் பாஸ்கராய வித்மஹே
திவாகராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
உலகிற்கு ஒளியை தரும் சூரிய பகவானுக்குரிய இந்த ஸ்லோகங்களில் ஏதாவது ஒன்றை ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து நீராடிய பின்பு,
சூரியன் உதிக்கின்ற நேரத்தில் அச்சூரியனை தரிசித்தவாறே பலமுறை சொல்லிவர கண் பார்வை குறை பாடுகள் நீங்கும், நோய் நொடியின்றி வாழலாம், உயர்ந்த அந்தஸ்த்தை, வளமான வாழ்க்கையை பெறலாம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.