அன்பெழில் Profile picture
Mar 26, 2023 12 tweets 5 min read Read on X
#ஞாயிறு_ஸ்பெஷல் #சூரியனின்_பெருமைகள்
சூரியன் உலக இயக்கத்திற்கு மிக முக்கியமான ஒன்று. அதன் சக்தியால் தான் ஜீவராசிகள், பயிர்கள் வாழ்கின்றன, வளர்கின்றன. கோடை, குளிர், மழை போன்ற பருவ மாற்றங்களும் கூட சூரியனாலேயே ஏற்படுகின்றன. அத்தகைய சிறப்புமிக்க சூரியனை இந்துகள் வழிபடுவது வழக்கமாக
உள்ளது. சூரியனை வழிபடும் பிரிவிற்கு சவுமாரம் என்று பொருள். சூரியன் சிவ பெருமானின் வலது கண்ணாக இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. சூரியனை சிவனோடு ஒப்பிட்டு சிவ சூரியன் என்றும், விஷ்ணுவோடு ஒப்பிட்டு சூரிய நாராயணர் என்றும் அழைப்பார்கள். சிவபெருமானை நோக்கி கடுமையான தவம் இருந்த சூரியன்
#கிரகபதம் என்னும் பேறும் ஆயிரம் கிரகணங்களோடு ஒளி மண்டலத்தில் உலா வரும் உயர்வையும் பெற்றான். சூரியன் மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகளுக்கும் செல்வார். அவர் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்லும் பொழுது தான் மாதப்பிறப்பு நிகழ்கிறது. சூரியன் பச்சை நிறமுடைய 7
குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வருகிறார். அந்த தேருக்கு ஒரே ஒரு சக்கரம் தான் உண்டு. இந்தக் குதிரைகள் பூட்டிய தேரோட்டியின் பெயர் அருணன். இவருக்கு கால்கள் கிடையாது. இவர் திருமாலின் பெரிய திருவடி என்று போற்றப்படும் கருட பகவானின் அண்ணன் ஆவார். சூரியனின் ரதம் பொன் மயமானது. அந்த
ரதத்துக்கு 5 ஆரங்களும் 3 நாபிகளும் உண்டு. 3 நாபிகளும் 3 காலத்தை குறிக்கும். சூரிய சக்கரத்திலுள்ள 6 கட்டைகளும், 6 ருதுக்களை குறிக்கின்றன. சக்கரத்தின் மேல் பாகமும், கீழ்பாகமும் உத்திராயணம் தட்சிணாயத்தை குறிக்கிறது. சூரிய பகவான் தன் தேரில் 4 பட்டணங்களை சுற்றி வந்து, காலை, மதியம்,
மாலை, அர்த்தராத்திரி என்ற காலங்களை உண்டாக்குகிறார். சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் முக்கியமானது
#ரதசப்தமி ஆகும். இது #சூரியஜெயந்தி
என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் வரும் சப்தமியையே ரத சப்தமி. அன்றைய தினம் சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச் செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர
வடக்கு நோக்கி திரும்பி பயணத்தை தொடங்குகின்றன. இந்த இனிய நாளில் சூரிய உதயத்தில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு சேர்ப்பதாகும். கணவனை இழந்தவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது என்று
புராணங்கள் தெரிவிக்கின்றன. ரதசப்தமி
விரதத்தை சூரிய உதயத்தில் செய்ய வேண்டும். சர்க்கரைப்பொங்கல், உளுந்து வடை நைவேத்தியமாக படைத்து பூஜை செய்ய வேண்டும். கோதுமையால் செய்த சப்பாத்தி, சாதம் போன்றவற்றை பசு
மாட்டிற்கு கொடுப்பது நல்ல பலனைத் தரும். வாசலில் சூரிய ஒளிபடும் இடத்தில் ரதம் வரைந்து அரிசி, பருப்பு,
வெல்லம்
படைக்கலாம். சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆகலாம் என்கிறது புராணம். ரதசப்தமி அன்று தொடங்கும் தொழில் பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதே போல் இந்நாளில் செய்யப்படும் தான, தருமங்கள் பலமடங்கு புண்ணியம் கிடைக்கும்.

சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம்
போற்றும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுந்தரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்.

இன்னுமொரு துதி:

காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்
வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனைரட்சிப்பாய் சேங்கதிரவனே போற்ற
சூரிய காயத்ரி :
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்

ஓம் பாஸ்கராய வித்மஹே
திவாகராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

உலகிற்கு ஒளியை தரும் சூரிய பகவானுக்குரிய இந்த ஸ்லோகங்களில் ஏதாவது ஒன்றை ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து நீராடிய பின்பு,
சூரியன் உதிக்கின்ற நேரத்தில் அச்சூரியனை தரிசித்தவாறே பலமுறை சொல்லிவர கண் பார்வை குறை பாடுகள் நீங்கும், நோய் நொடியின்றி வாழலாம், உயர்ந்த அந்தஸ்த்தை, வளமான வாழ்க்கையை பெறலாம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jul 27
DMK is not giving good governance, does not care for its state even though the ruling party, all their leaders are only working for their personal gains, yet is in a good position to win elections again. How?
1. Weak opposition
2. Money for votes.
3. King in spreading lies. Image
What should BJP do to gain vote share?
1. Grass roots level work is needed.
2. keep ambulances and vehicle for carrying the dead to the cremation area, in several areas throughout the state in cities and villages and provide them free of charge to those in need. BJP party sign
and symbol must be well posted on these vehicles.
3. Hire smart, proven professionals to advice strategy to combat the upcoming state election.
4. Revamp the BJP IT cell with smart people to rebut the false narratives set by DMK IT cell and its loyal followers.
5. Spend money
Read 7 tweets
Jul 27
#தவளகிரீஸ்வரர்
திருமாலுக்கும், பிரம்மனுக்கும் திருவண்ணாமலையில், ஆதி அந்தம் இல்லாத பெருஞ்ஜோதியாக நின்று காட்சி கொடுத்தவர், சிவபெருமான். அவர் தனது மகன் முருகப் பெருமானுக்கு, ஜோதி ரூபமாக திருக்காட்சி கொடுத்த திருத்தலம் தான் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெண்குன்றம். இந்த ஊரை Image
தவளகிரி என்றும் அழைப்பார்கள். 'தவளம்' என்பதற்கு 'வெண்மை' என்று பொருள். உலக மக்கள் அனைவரும் அறிந்துணரும் வகையில், வேதங்களின் கருத்துக்களை மக்களிடையே பரப்பும்படி, வியாச மகரிஷிக்கு சிவ பெருமான் உத்தரவிட்டார். அந்த பணியை செய்வதற்கு முன்பாக வியாசர், பூலோகத்தில் பல்வேறு புண்ணியImage
தலங்களை தரிசிக்க எண்ணினார். அப்படி அவர் வந்த போது தென் திசையில் வெண்ணிற மலை ஒன்றைக் கண்டார். அங்கே சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து, தீர்த்தம் ஒன்றை உருவாக்கி, அந்த தீர்த்த நீரில் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தார். வியாசரால் வழிபடப்பட்ட ஈசனே, தவளகிரீஸ்வரர் என்றுImage
Read 15 tweets
Jul 26
#நெல்லை_சங்கரன்கோவில்_அறியாத_தகவல்கள்
அன்னை கோமதி தவம் செய்த ஆடி மாதப் பௌர்ணமி அன்று, இங்கு வந்து கோமதி அன்னையை வழிபடுபவர்களுக்குப் பிறவித் துன்பம் தீரும்.
இங்கே அதிகார நந்தி தம் தேவியுடன் தரிசனம் தருகிறார்.
இத்திருக் கோயிலில் பிரபலமான ஆடித்தபசு திருவிழாவின் போது, பக்தர்கள்Image
Image
தங்கள் விளை நிலங்களில் இருந்து கொண்டு வந்த காய்கறிகளைக் காணிக்கையாக அளிக்கிறார்கள்.
ஸ்ரீசங்கர நாராயணருக்கு அபிஷேகம் இல்லை. ஆனால், இங்கிருக்கும் ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் உண்டு.
ஞாயிற்றுக் கிழமை அன்று இந்த திருத்தலத்தில் இருந்து, ஆரோக்கியத்தை அருளும் சூரியபகவானைத் தியானித்து Image
விரதம் இருந்தால், கண்களில் வரும் நோய்கள் நீங்கும்.
சனிதோஷம் நீங்க செவ்வாய்க்கிழமை அன்று, இத்திருத்தலத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள், சனி தோஷம் நீங்கப் பெறுவார்கள். சனி தோஷத்தினால் விளையும் வியாதிகளும் நீங்கப் பெறுவார்கள். புதன்கிழமை அன்று இத்திருத்தலத்தில் விரதம்
Read 14 tweets
Jul 26
#மயிலை_ஸ்ரீஆதிகேசவ_பெருமாள்
ஆதிகேசவ பெருமாள் ஆலயம் 500 முதல் 1000 வருடப் பழமையானது. அங்கு ஆலய மூலவர்களுடன் பேயாழ்வாருக்கும் தனிச் சன்னதி உள்ளது. அவர் திருவவதாரம் செய்தத் தலம் இது. சித்ரை புஷ்கரணி என்ற பெயரில் இருந்த நீர் நிலை காலப் போக்கில் பெயர் மாறி சித்திரக் குளம் என தற்போது Image
அழைக்கப் படுகிறது. ஒரு காலத்தில் வனமாக இருந்த இந்த இடத்தில் பிருகு முனிவர் தேவர்களையும் ரிஷி முனிவர்களையும் துன்புறுத்தி வந்த அசுரர்களின் தொல்லையை ஒழிக்க எண்ணம் கொண்டு யாகம் ஒன்றை செய்து வந்தார். அவருடன் வேறு பல முனிவர்களும் யாகத்தில் கலந்து கொண்டு இருந்தார்கள். யாகம் முடிந்துImage
விட்டால் பிருகு முனிவருக்கு தங்களை அழிக்கும் சக்தி வந்துவிடும் என்பதினால் அந்த யாகம் நடந்து கொண்டு இருந்த போது அசுரர்கள் அங்கு வந்து யாகத்தை நடக்க விடாமல் தடுத்து அங்கு கூடி இருந்த முனிவர்களை விரட்டி அடித்தார்கள். பிருகு முனிவரும் தப்பி ஓட வேண்டி இருந்தது. தப்பி ஓடிய ரிஷி
Read 19 tweets
Jul 25
#வனபத்ரகாளியம்மன்
தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம்
மேற்கு தொடர்ச்சி அடிவாரத்தில், பவானி ஆற்றங்கரையில், காடுகள் நிறைந்த பகுதியில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தி, தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து வருகிறாள், தேக்கம்பட்டி வன பத்ரகாளியம்மன்.
முன்னொரு காலத்தில் ஈசனிடம் Image
இருந்து பல்வேறு வரங்களைப் பெற்று, தேவர்களையும், முனிவர்களையும், மக்களையும் துன்புறுத்தி வந்தான், மகிஷா சூரன். இவனை அழிப்பதற்காக அம்பாள், சிவபெருமானை நினைத்து தியானம் செய்து பூஜித்தாள். பின்னர் அந்த அசுரனை அழித்தாள். பார்வதி தேவி, சிவபெருமானை நினைத்து தியானம் செய்த இடத்தில் Image
அமைந்திருக்கிறது பத்ரகாளியம்மன் கோவில். வனப்பகுதிக்குள் இருப்பதால் 'வன பத்ரகாளியம்மன்' என்று பெயர் வந்தது. இந்த ஆலயம், ஆரவல்லி, சூரவல்லி கதையோடு தொடர்பு உடையதாக கூறப்படுகிறது.

ஆண் வாடையே அறியாமல் வாழ்ந்தவர்கள், ஆரவல்லி, சூரவல்லி ஆகியோர். இவர்கள் இருவரும் மந்திரம், சூனியம் Image
Read 16 tweets
Jul 25
#சோ_விளக்கம் #இந்துமகாசமுத்திரம்

படைப்புக் கடவுளான பிரம்மன் தனது சொந்த மகளான சரசுவதியையே திருமணம் செய்துகொண்டது ஏன்?

சோ சார் தனது இந்து மகா சமுத்திரம் என்ற புத்தகத்தில் இது போன்ற பிதற்றல் ஆன கேள்விகளுக்கு அழகாக விளக்கம் கொடுத்திருக்கிறார். “இந்த மாதிரி கேள்விகள் கேட்கப்பட Image
காரணம் இந்துமத எதிர்ப்பாளர்களின் குறைபட்ட சமஸ்கிருத ஞானம், இவர்கள் சமஸ்கிருதத்தை முறையாக புரிந்து கொள்ளாதது என்று கூட சொல்லலாம். இதை நான் என்னுடைய பாணியில் விளக்குகிறேன். சம்ஸ்கிருதம் தமிழ் 2 மொழிகளுக்கும் ஒரு மிகப்பெரிய ஒற்றுமை உண்டு. ஒரு சொல், பல பொருள். உதாரணம் திருக்குறள்.
மகன் தந்தைக்காற்றும் உதவி என்நோற்றான் கொல்
என்று எழுதியிருப்பதை தமிழ் சரியாக படிக்காத தமிழ் மேல் துவேஷம் கொண்ட ஒரு வெளிநாட்டு அறிஞர்
மகனே தன் தந்தையை கொன்றுவிட வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார் என்று அர்த்தம் கற்பித்தால் திருக்குறள் எவ்வளவு அனர்த்தம் ஆகுமோ அதேதான் சமஸ்கிருதத்தை
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(