சிறுத்தொண்டர் ஆற்றிய பெருந்தொண்டு:
''பிள்ளைக்கறி சீராளன் அமுது படையல் விழா":20-4-2023 இன்று இரவு 11-55க்கு துவங்கி மறுநாள் விடிய விடிய திருச்செங்காட்டங்குடி சூளிகாம்பாள் உடனுறை உத்திராபதீஸ்வரர் திருக்கோயில் நடைபெருகிறது,
#நோக்கம்சிவமயம்
#சீராளன்
#பிள்ளைக்கறி
#அமுதுபடையல்
1/23
சம்பந்தர், திருநாவுக்கரசர், காளமேகப் புலவர், அருணகிரி நாதர் போன்ற அடியார் பெருமக்களின் பாடல் பெற்றது இவ்வாலயம்,
இன்று காலை உத்திராபதீஸ்வரருக்கு மகா அபிஷேகமும்,பின்னர் வெள்ளை சாத்தி புறப்பாடும் மதியம் 2 மணிக்கு அமுது கேட்க சிறுத்தொண்டர் மடத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும்,
2/23
(21-4-2023) அதிகாலை 2 மணிக்கு அமுது உண்ண உத்திராபதீஸ்வரர் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பிள்ளைக்கறி அமுது பிரசாதத்தை பெற்று பரணி விரதமிருந்து உட்கொண்டால் குழந்தை பேறு கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது.
3/23
எனவே அமுது படையல் நிகழ்ச்சியில் குழந்தை பாக்கியமில்லாதவர்களும், வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்து இந்த பிள்ளைக்கறி அமுது பிரசாதத்தை பெற்று செல்வார்கள்.
நரசிம்ம பல்லவ மன்னனிடம் படைத் தளபதியாக விளங்கியவர் பரஞ்சோதியார்.
4/23
இவர் தலைசிறந்த சிவத் தொண்டர்.பரஞ்சோதியார் சிவத் தொண்டில் சிறந்து விளங்குவதைக் கேள்விப்பட்ட மன்னர், அவரை வணங்கி, அத்தொண்டிலேயே அவர் முழுமையாக ஈடுபட அனுமதி அளித்தார்.உடனே தனது போர்த் தளபதி'பதவியை விட்டு நீங்கி, சிறுத் தொண்டர் என்னும் பெயருடன்,
5/23
தனது சொந்த ஊரான திருச்செங்காட்டங்குடி வந்து சேர்ந்தார்.
அங்கே அவரது மனைவியாரான திருவெண்காட்டு நங்கையுடன் சிவத்தொண்டில் ஈடுபட்டார்.
நாள்தோறும் ஒரு சிவனடியாருக்காவது அன்னமிட்டு உண்பது அந்தத் தம்பதியின் வழக்கமாக இருந்து வந்தது.
6/23
இந்நிலையில், ஒரு நாள் ஒரு அடியார் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டது.
இதனால் யாரேனும் சிவனடியார் கிடைக்கின்றாரா? என்று பார்த்து வரப் புறப்பட்டார்.
இவரின் அன்பை வெளிப்படுத்த விரும்பிய எம்பெருமான் பைரவர் வேடம் தாங்கினார்.
சிறுத் தொண்டரின் இல்லத்திற்கு வந்தார்.
7/23
அவரை சிறுத்தொண்டரின் மனைவி திருவெண்காட்டு நங்கையும், பணிப்பெண் சந்தன நங்கையும் வரவேற்றனர்.
தன்னை "உத்திராபதி" என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அடியார் வேடத்தில் உள்ள சிவபெருமான்,
பெண்கள் மட்டுமே உள்ள இல்லத்தில் யாம் புகுவதில்லை,
8/23
யாம் கணபதீச்சரத்து (திருச்செங்காட்டங்குடி கோயில்) ஆத்திமரத்தடியில் காத்திருக்கிறோம் சிறுத்தொண்டர் வந்ததும் வருகிறோம் என்று கூறிச் சென்றுவிட்டார்.
அடியார் கிடைக்காமல் மனம் வருந்தி வீடு திரும்பிய சிறுத்தொண்டர் நடந்ததை அறிந்தார்.
உடனே ஆத்திமரத்தடிக்கு ஓடினார்,
9/23
அங்கே சிவபெருமான், சிவனடியார் கோலத்தில் காத்திருந்தார்.
அவரை அமுதுண்ண அழைத்தபோது,
நான் நரப்பசு மட்டுமே உண்பேன்; எனக்கு பெற்றோரின் விருப்பத்தின் பேரில் ஊனமில்லாத தலைமகனின் கறி சமைத்துத் தந்தால் சாப்பிட வருவேன் என்று கூறினார் உத்திராபதி.
10/23
இதைக் கேட்டு சற்றும் தயங்காத சிறுத் தொண்டர், அடியார்க்கு அமுது படைக்க தனக்கொரு பிள்ளை பிறந்ததை எண்ணி மகிழ்ந்தார்.
அவரது மனைவியும் கணவன் சொல் தட்டாத காரிகை.
அதனால் மனதைத் திடமாக்கிக் கொண்டு பிள்ளைக் கறி சமைக்க ஒப்புக் கொண்டாள்.
11/23
இருவரும் மனமொருமித்து, சிவனடியார்க்கு பிள்ளைக் கறி சமைக்கத் தயாராகினர்
இவர்களது மெய்யன்பை யார்தான் உணர வல்லார் ?
தங்கள் குழந்தையான சீராளனைப் பள்ளிக் கூடத்தில் இருந்து அழைத்து வந்து அவனை ஒரு காய்கறிப் பொருளாகவே எண்ணி,அரிந்து கறி சமைத்தனர் சிறுத்தொண்டரும் அவரது மனைவியாரும்
12/23
சமைத்ததை வாழை இலையில் பரிமாறினர்.
சாப்பிட அமர்ந்த இறைவன் ஒன்றும் அறியாதவர் போல் உன் மகனையும் அழைத்து என் பக்கத்தில் அமர வைத்தால்தான் சாப்பிடுவேன் என்று பிடிவாதம் செய்தார்.
வேறு வழியின்றி சிறுத் தொண்டர் வெளியே சென்று,கண்மணியே சீராளா! ஓடி வா விரைந்து வா,
13/23
சிவனடியார் நாம் உய்யும்படி உடன் உண்ண உன்னை அழைக்கின்றார்,
ஓடி வா என்று ஓலமிட்டு அழைத்தார்.
அப்போது அந்த அதிசயம் நிகழ்ந்தது.
பள்ளிக்கூடத்திலிருந்து சீராளன் வழக்கம்போல ஓடி வந்தான் அவனைக் கண்டு அதிசயித்த சிறுத்தொண்டர் அவனை வாரி அணைத்து சிவனடியாரிடம் கொண்டு சென்றார்.
14/23
அங்கே அடியாரைக் காணவில்லை இவை அனைத்தும் இறைவனின் திருவருளே என்பதை உணர்ந்தனர்,
அப்போது வான வீதியில் காளை வாகனத்தில் அன்னை பார்வதியுடன் இறைவன் சோமாஸ்கந்தராகத் தோன்றி காட்சியளித்து அருள் வழங்கினார்,
இச்சம்பவம் நிகழ்ந்த நாள், சித்திரை மாதம் பரணி நட்சத்திர நாளாகும்.
15/23
இன்றும் இந்த ஐதீகம்,
அமுது படையல் திருநாளாக ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது.
பிள்ளைக் கறி கேட்டு வந்த "உத்திராபதி' என்னும் பைரவர், திருசெங்காட்டங்குடி கோயிலில் தனி சந்நிதியில் அருள் பாலிக்கின்றார்.
உட்பிரகாரத்தில் சிறுத் தொண்டர், திருவெண்காட்டு நங்கை,
16/23
சீராளன் ஆகியோர் சிலை வடிவங்களைக் காணலாம்.
ஆலயச் சுற்றில் பழைமையான காட்டாத்திமரம் அமைந்துள்ளது. அதனருகே உத்திராபதியார் சந்நிதி அமைந்துள்ளது. இது உலோகத்தினால் தோன்றிய சுயம்பு மூர்த்தமாகும்.
ஈசன்.பொதுவாக சிவனடியார்களுக்கு ஈசன் உமையுடன் விடைமேல் அமர்ந்து
காட்சிகொடுப்பார்.
17/23
சிறுத்தொண்டருக்கு மட்டுமே முருகப்பெருமானுடன் சேர்ந்து சோமாஸ்கந்தராக காட்சி கொடுத்தார்.
விழா நிறைவில் பிள்ளைக்கறி பிரசாதம் தரப்படுகின்றது இதனை
வாங்கி உண்டால் உடல் நோய்கள் குணமாகும்
புத்திரபாக்கியம் வேண்டுவோர்
பிள்ளைக்கறி பிரசாதம் வாங்கி உண்டால் குழந்தை பாக்கியம் கிட்டும்.
18/23
சட்டியிலே பாதியந்தச் சட்டுவத்தி லேபாதி
இட்டகலத் திற்பாதி இட்டிருக்கத் திட்டமுடன்
ஆடிவந்த சோணேசர் அன்றழைத்த போதுபிள்ளை
ஓடிவந்த தெவ்வாறுரை ?
- காளமேகப்புலவர்.
19/23
மண் காட்டிப் பொன் காட்டி மாய இருள் காட்டிச் செங்காட்டில் ஆடுகின்ற
தேசிகனைப் போற்றாமல் கண் காட்டும் வேசியர் தம் கண் வலையில் சிக்கிமிக
அங்காடி நாய் போல் அலைந்தனையே நெஞ்சமே
- பட்டினத்தார்.
20/23
உருகு மனத்தடியவர்கட்கு ஊறுந்தேன்'என்கிறார் திருநாவுக்கரசர்
தமிழ்
இலக்கணத்தில் 'ஊறுந்தேன்'வினைத்தொகை.
ஊறிய தேன்,
ஊறும் தேன்,
ஊறுகின்ற தேன்.
பக்தர்கள் மனத்தில் என்றும் ஊறுந்தேனாய் விளங்கும்
திருச்செங்காட்டங்குடி ஈசனைக்காண அனைவரும் வாருங்கள் 🙏🙏🙏
21/23
மண்ணும் பொன்னும் காட்டி நமக்கு அருள்கின்ற
திருச்செங்காட்டங்குடி ஈசனை நாம் தொழுதெழுவோம்.
நன்னிலத்தில் இருந்து 10 km தூரத்திலும்,
நாகப்பட்டினத்தில் இருந்து 18 km தூரத்திலும்,
மயிலாடுதுறையில் இருந்து 22 km தூரத்திலும்,
குமபகோணத்தில் இருந்து 39 km தூரத்திலும்,
22/23
திருவாரூரில் இருந்து 18கிலோமீட்டர் தூரத்திலும் திருச்செங்காட்டங்குடி திருத்தலம் அமைந்து உள்ளது.
அனைவருக்கும் சித்திரை பரணி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
சிவாயநம 🙏
திருச்சிற்றம்பலம் 🙏
#நோக்கம்சிவமயம்
#SSRThreads
23/23
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.