அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

May 9, 2023, 7 tweets

#ஸ்ரீவைஷ்ணவம் #ஆழ்வார்_பெருமை ஒரு முறை நம்மாழ்வாருக்கும் பகவானுக்கும் யார் பெரியவன் என்ற விவாதம் நடக்கிறது. நம்மாழ்வார், பகவானே உன்னை விட நான் தான் பெரியவன். காரணம், நீ இரண்டு உலகங்களையும் (விண், மண்) உன்னிடம் வைத்திருக்கிறாய். அப்படி வைத்திருக்கும் உன்னையே நான் என்னுள் வைத்து

இருப்பதால் நானே பெரியவன் என்பதை ஒப்புக்கொள் என்று விவாதம் வைத்து இறைவனின் கருணையைப் பெறுகிறார் நம்மாழ்வார். பெருமானை விட நம்மாழ்வார் பெரியவர் என்றால், அவரை தன் உள்ளத்தில் வைத்திருக்கும் #மதுரகவியாழ்வார் பெரியவருக்கு பெரியவரல்லவா. இதைத் தான் இராமானுஜ நூற்றந்தாதியில் பாடுகிறார்.

பெருமாள் கோயில்களில் நம் சிரசில் வைத்து அருளப்படும் #சடாரி என்பது பெருமாளின் திருவடி நிலைகளாகும். நம்மாழ்வாரே பெருமாளின் திருவடிகளில் இருப்பதால் அவரது பெயரான #சடகோபன் என்பதே சடாரி என்று மருவியது. “மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே”என்று பாடிய மதுரகவிகள் நம்மாழ்வாரின் திருவடிகளாக

இருப்பவர். எனவே கோயில்களில் நம்மாழ்வார் சந்நதியில், சென்னியில் சாதிக்கப்படும் திருவடிகள் ‘மதுரகவிகள்’ என்று போற்றப் படுகின்றன. மதுரகவி ஆழ்வார் பாடிய பிரபந்தம் #கண்ணிநுண்சிறுத்தாம்பு என்று தொடங்குவதால், கண்ணிநுண் சிறுத்தாம்பு பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது. மதுரகவியாழ்வார்

பெருமாளைப் பாடவில்லை. பெருமாளைப் பாடிய நம்மாழ்வாரின் பெருமையைப் பாடியதால் கண்ணிநுண் சிறுத்தாம்பு ஆசாரிய பிரபந்தம் என்று போற்றப் படுகிறது. எல்லா திவ்ய தேசங்களிலும் வைணவ வீடுகளில் நடக்கும் வழிபாடுகளிலும், #திருவாய்மொழி சேவிப்பதற்கு முன் மதுரகவியாழ்வார் பாசுரங்களை பாடியே

தொடங்குவார்கள் நம்மாழ்வார் பாடிய பாசுரங்களின் பொருள்களையெல்லாம் மக்களுக்கு எடுத்துக்கூறி, நல்வழிப்படுத்தி நெடுங்காலம் மதுரகவி ஆழ்வார் வாழ்ந்து, இறுதியில் ஆசாரியன் திருவடியை அடைந்து, பரமபதத்திலும் ஆசார்யனுக்கு நித்ய கைங்கர்யம் செய்ய விழைந்தார்.
ஆழ்வார் ஆச்சார்யார் திருவடிகளே சரணம்

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling