பத்திரிக்கையாளர் #நக்கீரன்கோபால் கைது செய்யப்பட்டிருப்பதை #மே17இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. இந்தியாவிலுள்ள பத்திரிக்கையாளர்களும், ஜனநாயக சக்திகளும் பாசிசத்தினை எதிர்த்திட ஒன்றிணைந்து நிற்க வேண்டிய மிக முக்கியமான தேவை எழுந்துள்ளது.
பேரா.#நிர்மலாதேவி-ஆளுநர் #பன்வாரிலால் குறித்து கட்டுரை வெளியிட்டதற்காக #ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகார் மற்றும் அழுத்தத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. புனே செல்வதற்காக விமான நிலையம் சென்ற #நக்கீரன்கோபால் அவர்களை அங்கேயே கைது செய்திருக்கிறார்கள்.
2/6
ஜனநாயகம் எத்தனை மோசமாக சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சியாக #நக்கீரன் கோபால் கைது இருக்கிறது. மிக மோசமான அடக்குமுறைகள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் ஏவப்பட்டுக் கொண்டிருக்கிறது.
மோடியை எதிர்த்துப் பேசும் அனைவர்...
3/6
மீதும் #தேசத்துரோகவழக்கு போடுவார்கள் என்றால் எத்தனை கோடி பேருக்கு சிறைச்சாலைகளை அரசு கட்டி வைத்திருக்கிறது? #மோடி அரசையும், தமிழ்நாட்டில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் ஆளுநரையும், #எடப்பாடி அரசையும் எதிர்த்துப் பேசவோ எழுதவோ கூடாதென்றால் இங்கு என்ன மன்னராட்சியா நடக்கிறது?
4/6
#நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநரை விசாரிக்கச் சொல்வது குற்றமென்றால் அனைவரும் சேர்ந்தே தமிழக ஆளுநரை விசாரிக்க சொல்வோம்!
#நக்கீரன்கோபால் மீது ஏவப்பட்டிருக்கும் இந்த அடக்குமுறையினை #மே17இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. #நக்கீரன் பத்திரிக்கைக்கும், அதன் பத்திரிக்கையாளர்களுக்கும்...
5/6
அதன் ஆசிரியர் திரு.#கோபால் அவர்களுக்கும் #மே17இயக்கம் முழுமையான ஆதரவுடன் துணை நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
கருத்துரிமையினையும், ஜனநாயகத்தினையும் காத்திட இந்திய ஒன்றியம் முழுதும் உள்ள செயல்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஒன்றிணைவோம்!
6/6
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்திய ஒன்றிய அரசு நிறுவனங்களில் கட்டாய இந்தி! அமித்சா தலைமையிலான குழுவின் பரிந்துரை முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும்! இந்தித் திணிப்பு ஆதிக்கத்தை எதிர்த்திடுவோம்! பாஜக இந்துத்துவ இந்திய அரசின் இந்தித் திணிப்பு ஆதிக்கத்தை விரட்டியடிக்க ஒன்றிணைவோம்!
இந்திய ஒன்றிய அரசின் தொழிற்நுட்ப உயர்கல்வி நிறுவனங்களிலும், பள்ளிக்கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழியாக இந்தி கட்டாயம் இருக்க வேண்டும், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி இருக்க வேண்டும் போன்ற பல்வேறு நிலைகளில் இந்தியை கட்டாயமாக்கும்...
2/
பரிந்துரைகளை அமித்சா தலைமையிலான குழு அளித்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த கட்டாய இந்தி திணிப்பு முயற்சியை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்ற குழு கடந்த 1976-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 20 மக்களவை உறுப்பினர்கள் மற்றும் 10 மாநிலங்களவை...
3/
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை கருத்தரங்கிலிருந்து பாஜக வெளியேற்றப்படாவிடில், தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பின் 14-05-2022 கருத்தரங்கில் மே 17 இயக்கம் பங்கேற்காது! - மே பதினேழு இயக்கம்
வரும் 14-05-2022 சனிக்கிழமை மாலை சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில்..
1/
நடைபெறவிருக்கும் 'முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை' நினைவேந்தல் - கருத்தரங்கில் பாஜகவின் மாநில தலைவர் திரு.அண்ணாமலையும் அழைக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பாக, கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுவதற்கு,
2/
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டிருந்தது. அதே வேளை, நிகழ்வில் பங்கேற்கும் பிற அழைப்பாளர்கள் குறித்த தகவல்கள் பகிரப்படவில்லை. அழைப்பிதழ் தரப்படாத நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் பரவும் அழைப்பிதழின்...
3/
மாஞ்சோலைப் படுகொலை (1999) - அரச பயங்கரவாதத்தின் கொடூரம்!
தமிழகத்தில் நடந்த அரச பயங்கரவாதப் படுகொலைகளில் ஜூலை 23, 1999-இல் நடைபெற்ற திருநெல்வேலி மாஞ்சோலைப் படுகொலை வாரலாற்றில் மறக்க முடியாத கரும்புள்ளி. அன்றைய திமுக அரசின் காவல்துறை நிகழ்த்திய மனித தன்மையற்ற அடக்குமுறையால்...
1/
தங்கள் அடிப்படை உரிமைக்குப் போராடிய பட்டியல் சமூகத்தை சார்ந்த 17 தொழிலாளிகள் படுகொலைக்கு உள்ளானர்கள்.
மாஞ்சோலை தேயிலை தோட்டம் அரசிடம் இருந்து மும்பையை சேர்ந்த ஒரு பனியா மார்வாடி முதலாளியிடம் நியாயமற்ற விலைக்கு குத்தகைக்கு தரப்பட்டிருந்தது. அங்கு வேலை செய்த மக்களோ...
2/
பெரும்பாலும் பட்டியல் சமூகத்தை சார்ந்தவர்களாகவே இருந்தனர். கொத்தடிமைகள் போல நடத்தப்பட்டும், மிகக் குறைந்த கூலி வழங்கப்பட்டும் கொடுமைகளுக்கு உள்ளான தொழிலாளர்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடினர். ரூபாய் 56 என்றிருந்த தினக்கூலியை உயர்த்தி ரூபாய் 150-ஆக தருமாறும்...
3/
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார் நினைவுநாள் - 22.07.1968
இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும், முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரும் (நியமனம்), தேவதாசி முறையை எதிர்த்து சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவருமான மருத்துவர் முத்துலட்சுமி அவர்களின் நினைவுநாள் இன்று.
1/
தொடக்க கல்வியில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றாலும், உயர்நிலைக் கல்வி சேர்வதற்கு அடிப்படைவாத சமூகம் பெரும் தடையாக இருந்தது. இது அறிந்த புதுக்கோட்டை மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் ராஜா அவர்கள் அன்னை முத்துலட்சுமி அவர்களுக்கு..
2/
மகாராஜா உயர்நிலைப் பள்ளியில் இடம் கொடுத்தது மட்டுமல்லாமல், படிப்பதற்கு நிதி உதவியும் செய்தார்.
அப்பளியில் மட்டுமல்லாமல் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பில் (அறுவை சிகிச்சை பிரிவு) படிக்கும் போதும் அன்னை முத்துலட்சுமி மட்டுமே பெண் மானவியாக இருந்தார்.
3/
ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் விதமாக, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் கோவை கு. இராமகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் செயற்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோரின் தொலைபேசிகளில்
பெகாசஸ் என்னும் இஸ்ரேலிய உலவுச் செயலியின் மூலம் ஊடுருவி உளவு பார்த்த மோடி அரசினை கண்டித்து, கோயம்புத்தூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் இன்று மாலை 4 மணியளவில், அனைத்துக்கட்சிகள், சமூக இயக்கங்கள் சார்பாக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின்
பொதுச்செயலாளர் தோழர் கோவை கு. இராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திராவிடத் தமிழர் கட்சியின் தலைவர் தோழர் வெண்மணி மற்றும் மதிமுக, தமிழ் புலிகள், விசிக , சிபிஎம்(எம்எல்), SDPI உள்ளிட்ட அனைத்து ஜனநாயக முற்போக்கு கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள்,
உளவு பார்க்கப்பட்ட தோழர் திருமுருகன் காந்தியின் தொலைபேசி! ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்க முயலும் மோடி அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்!
- மே பதினேழு இயக்கம்
பெகாசஸ் ஸ்பைவேர் (#Pegasus) என்ற உளவுச் செயலியின் மூலம் உலகின்..
பல நாடுகளை சேர்ந்த முக்கிய நபர்களின் தொலைபேசிகள் அரசுகளால் உளவு பார்க்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அவ்வாறு உளவு பார்க்கப்பட்டிருக்கக்கூடும் என்ற பட்டியலில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் தொலைபேசியும் இருக்கிறது என்ற..
2/
தகவல் அதிர்ச்சியளிக்கிறது. தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் தரவுகளை சேகரித்து அவரை முடக்கிவிடலாம் என்ற எண்ணத்தில் இந்திய ஒன்றிய மோடி அரசு ஈடுபட்டுள்ளது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. தோழர் திருமுருகன் காந்தி உட்பட முற்போக்கு செயற்பாட்டாளர்களை, பத்திரிக்கையாளர்களை முடக்கி..
3/