(நாம் தமிழரின் கமிஷன் சைமன் வேறு😝)
இதனை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் நடந்தது, ஒருங்கிணைந்த இந்தியாவில் பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய் போன்றோர் பெரும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்
நாடெங்கும் நற்பெயர் பெற்றிருந்தார்,அவரை வெள்ளையன் அடித்ததில் பலத்த காயமுற்றார்.
அதில் இறந்தும் போனார், வருடம் 1928
அது நாடெங்கும் கிளர்ச்சியினை ஏற்படுத்தியது,
அப்படி திருப்பூரிலும் 1932ல் போராட்டம் நடந்தது , அதில்தான் அந்த சென்னிமலை இளைஞன் 28 வயதேயான குமரனும் கலந்து கொண்டான்
நொய்யல் நதிக்கரையோரம் ஊர்வலம் சென்றபொழுது போலீஸ் கடும் தடியடியில் இறங்கியது.
அவன் மரணித்தான்,ஆனால் அவன் கையில் தேடிய கொடியினை இறுக பிடித்திருந்தான்.
தேசம் முழுக்க அந்த செய்தி கண்ணீர் சிந்த வைத்தது, வெள்ளையரில் பலருக்கே கண்கள் கசிந்தன.
இத்தேசத்திற்காக உயிர்விட்ட தியாகியான அக்குமரனுக்கு இன்று நினைவுநாள்,85 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் அவன் இறந்தான்.
அவரை நினைவு கூறலாம்.
அந்த குமரன் நினைவுநாளில் நாளில் அந்த "கொடிகாத்த குமரனை " போற்றுவோம்
அவருக்கு இத்தேசத்தின் ஆழ்ந்த அஞ்சலிகள்.
அவர் இறுக பிடித்த கொடிபோல இந்நாட்டை காக்க இத்தேசமே சபதமேற்கின்றது.