அது நெபுகாத்நேச்சர் எனும் மன்னன் காலம்,அன்றைய சதாம் உசேனுக்கு முப்பாட்டன்,இப்படி சொன்னால் புரியும்
இந்த பாபிலோன் தொங்கும் தோட்டம் எல்லாம்
தோல்வியே அடையாத வரலாற்று மன்னர்களில் அவனும் ஒருவன், அப்படிபட்ட மன்னர்தான் யூதர்களை சிறைபிடித்து சென்றார்,அதில் ஞானத்தில் சிறந்தவர்களை தன் அருகே வைத்துகொண்டான்,அவர்களில் ஒருவர்தான் இந்த தானியேல்.
பெரும் ஞானி அவர்,
அரசன் அவரை நன்றாகத்தான் வைத்து கொண்டான்,ஆனால் மதகுருக்களுக்கு பிடிக்கவில்லை. என்ன இருந்தாலும் ஜகோவினை மட்டும் வணங்கும் யூதன்,
மன்னனும் பலமுறை பூசாரிகளிடம் அவனை கையளித்தார்,அவர்களும் தீயில் போட்டு பார்த்தனர்,சிங்கத்தின் முன்போட்டு பார்த்தனர்,கடவுள் தானியேலை காப்பாற்றி கொண்டே இருந்தார்
இந்த சனியனை கொல்லவும் முடியாது,அரசனும் இவனை விடமாட்டான் எப்படியும் தொலையட்டும் என மதகுருக்களும் ஒதுங்கினர்
அந்த தானியேல் அரசனுக்கு ஆலோசகன் எனும் பதவியில் இருந்தாலும் தன் யூத இனம் எத்தனை நாள் இங்கு அடிமையாக இருக்கும்,
ஆனால் அது வீழுமா? வாய்ப்பே இல்லை இன்னும் 500 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது போல,நமது தாவீதும், சாலமோனும் இவர்களை அடக்கி வைத்திருந்தார்கள்,அடுத்து வந்ததுகளுக்கு அந்த ஆற்றல் இல்லை சிக்கிகொண்டோம், கோயிலும் போனது,இனி வருமா?
கோயிலை பிறகுபார்க்கலாம், இந்த பாபிலோனியரின் அதிகாரத்திற்கு முற்றுபுள்ளி வைப்பது யார்? என்றெல்லாம் அவர் சிந்தித்து கொண்டிருக்கும் பொழுது அந்த காட்சி கண்டார், காட்சி இதுதான்
"மேற்கிலிருந்து ஒரு வெள்ளாட்டு கிடா பாய்ந்து வந்தது,
தானியேல் உற்றுபார்க்க அந்த கிடாவின் கொம்புகளிடையே வித்தியாசமான ஒரு பெரிய கொம்பு இருந்தது,தன்னை எதிர்க்க யாருமில்லை என்ற
எல்லா கனவுகளுக்கும் அர்த்தம் சொன்ன டானியேலுக்கு இந்த அர்த்தம் புரியவில்லை,சிந்தித்து கொண்டே இருந்த பொழுது அவர் முன் கடவுளின் தூதன் கப்ரியேல் தோன்றினான்
அவர் வந்து கடவுள் சொன்னபடி விளக்கினார்,தானியேலே அந்த வெள்ளாட்டு கிடா கிரேக்க அரசனை குறிக்கும்,
அவன் மிக மிக வினோதமான பிறவி அவனின் ஆற்றல் அடுத்து வருபவருக்கு இருக்காது
அந்த கிரேக்க அரசன் இந்த இரு அரசையும் நொறுக்குவான் அதுதான் நீ கண்ட காட்சி,
அதன் பின் அவன் அரசு 4 துண்டாக உடையும்,அதில் உன் இனம் மீளும்" என சொல்லிவிட்டு மறைந்தது
தானியேல் புத்தகம் படிக்கும் யாரும் இந்த காட்சியினை கடக்காமல் இருக்க முடியாது.
அதுவரை பெரும் அரசன் ஐரோப்பாவிலிருந்து ஆசியாவிற்கு வரவில்லை, அவ்வளவு பயம் கொடுக்கும் வலுவான அரசுகள் மேற்காசியாவில்,
அதுவும் அரேபிய பகுதிகள் முரட்டுதனமான பலம் கொண்டவை,அவர்களை வீழ்த்துவது என்பது நினைத்து பார்க்கமுடியாத விஷயம்.
முதன் முதலில் அரேபியா ஒரு ஐரோப்பியனிடம் அடிவாங்க போகின்றது என உணர்ந்தார் தானியேல்
நிச்சயமாக முதன் முதலில் கிரேக்க மாவீரனை எதிர்பார்த்தது அவர்தான்,ஆனால் அவர் காலம் முடிந்தது
மானிடர் காலம் முடியும்,கடவுளின் காலம் முடியுமா?
அவன் தான் மாவீரன் அலெக்ஸாண்டர்
யூத கடவுளே முன்னறிவித்த பெரும் ஆற்றல் மிக்க மாவீரன். பெரும் மதியூகி,நிர்வாகி, தைரியம், ராஜதந்திரம் என எல்லாவற்றின் மொத்த கலவை.
வரலாற்றை மாற்றி அமைத்தவன் அவன்,அவனின் பாதிப்பு நெடுங்காலம் உலகில் இருந்தது, இன்றளவும் அவன் பெரும் பிரமிப்பே
பார்க்கலாமா?
உங்கள் விருப்பமே கட்டளை,அந்த கட்டளையே சாசனம்
(தொடரும்)