அந்த நாடுகளில் ஒன்றுதான் மாசிடோனியா,வடபகுதி கிரேக்க நாடு,மற்ற தேசங்கள் கொஞ்சமும் மதிக்கவில்லை,குறிப்பாக தெசலோனிக்கேயர் எனும் நகர மக்களுக்கு எல்லாம் சுத்தமாக மாசிடோனியரை பிடிக்கவில்லை
உங்களுக்கு கிரேக்க மொழி தெரியவில்லை,
ரத்தகண்ணீர் எம்.ஆர் ராதா தன் தாயிடம் பேசுவார் அல்லவா அப்படி பேசிகொண்டிருந்தார்கள்.
ஆச்சரியமாக எல்லா மாசிடோனியரும் அதனை தயக்கமின்றி ஒப்புகொண்டார்கள்,அதனை மாற்றி நாமும் உயரவேண்டும் என யாரும்
மாசிடோனிய இளவரசர்களில் ஒருவன் அதனை மாற்ற நினைத்தான், அதுவும் 15 வயதிலே நினைத்தான். மாசிடோனியாவினை மிக சிறந்த கிரேக்க தேசமாக மாற்றுவோம் வாருங்கள் என மக்களை அழைத்தபொழுது ஒருவரும் வரவில்லை , மாறாக "காமெடி செய்யாதீர்கள் இளவரசே" என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள்
சிந்தனையும்,கல்வியும் அதனுடன் கூடிய வீரமுமே நாட்டை உயர்த்தும் என மனமார நம்பிய அவன் கற்க சென்ற இடம் அக்கால பல்கலைகழகம் என சொல்லபட்ட தீப்ஸ் நகருக்கு சென்றான், சகலமும் கற்றான்
அவன் சகோதரன் பெர்டிக்காஸ் அப்பொழுது அந்த சொத்தை தேசத்தை ஆண்டு கொண்டிருந்தான்,அவனிடம் ராணுவ அமைச்சரானான் அந்த இளவரசன்
இந்நிலையில் பெர்டிக்காஸ் ஒரு சண்டையில் கொல்லபட,
ராணுவம் வந்தாயிற்று இனி பணம் வேண்டும்,பெரும் பணம் நாட்டுக்கு வேண்டும் என எண்ணினான்,அருகிலிருந்த தங்க சுரங்கங்கள் கண்ணில் பட்டன,குறியினை அங்கு வைத்தான்,அந்த மலையினை கைபற்றி அந்த நகருக்கு தன் பெயரினை வைத்தான்
பின் அரசன் நானே என சொல்லி அந்த சின்னபையனை எழுப்பிவிட்டு விட்டு அமர்ந்து கொண்டான்
அவன் தான் மன்னன் பிலிப்.
இந்த பிலிப்பியர், தெசலோனிக்கேயர் எல்லாம் பைபிளில் வரும் பெயர்கள் என்பதற்காக அவர்கள் கிறிஸ்தவர்கள் என எண்ண வேண்டாம்,
கிரேக்கர்களுக்கு மதமும், வீரவிளையாட்டும் இரு கண்கள், சிந்தனை அவர்களின் சுவாசம். கிரேக்க மதம் அவர்களின் உயிரில் கலந்த ஒன்று
தங்க சுரங்கம் கிடைத்தபின் மாசிடோனியாவின் பொருளாதாரம் அதிகரித்தது,
சேரன் செங்குட்டுவன்,ராஜராஜ சோழன்,நெடுஞ்செழியன் என தமிழக வம்சங்களில் எவனாவது
தாழ கிடந்த மாசிடோனியாவினை ஓரளவு தன்மானம் மிகுந்த நாடாக மாற்றியிருந்தான் பிலிப்.
இது இன்னும் பரவவேண்டும் கிரேக்கம் முழுவதும் மாசிடோனியா ஆள வேண்டும் என்ற வெறி அவனில் இருந்தது
ராஜாதி ராஜ,ராஜ கம்பீர..பிலிப் அவர்களே,உங்களுக்கு மகன் பிறந்திருக்கின்றான்,
பிலிப்பிற்கும் ஒரு விசுவாசமிக்க கட்டப்பா இருந்தான் அவன் பெயர் பார்மீனியோ,அவனும் பிலிப்பும் பெல்லாவிற்கு விரைந்தார்கள்
அக்குழந்தை அப்பொழுதே போர்களத்தின் வாசனையினை நுகர்ந்தது.
(தொடரும்)