ஆனால் மக்கபே ஆகமம் தான் தானியேல் தீர்க்கதிரிசி சொன்னபடி அலெக்ஸாண்டர் வருகையினையும்,அதன் பின் இஸ்ரேலிலும் அரேபியாவிலும் ஏற்படும் பாதிப்பினையும் சொல்கின்றது
மக்கபே ஆகம முதல் வசனம் எப்படி தொடங்குகின்றது "முதலில் மாசிடோனியாவிலும் பின் உலகெங்கும் அதிகாரம் செலுத்தினான் அலெக்ஸாண்டர்,அவன் போர் பல செய்து பலமிக்க கோட்டைகளை பிடித்து,அரசர்களை கொன்று, இந்து தேசம் வரை கொள்ளையடித்தான்
இன்னும் ஏராளம் உண்டு, இப்போதைக்கு இந்த வரிகளை கவனியுங்கள்,அலெக்ஸாண்டர் கொள்ளையடித்தான்.
ஆம் அலெக்ஸாண்டர் கொள்ளையடித்தான்!
ஆனால் அதன் முன்புள்ள பக்கங்களை புரட்டுங்கள்,கர்த்தர் எதிரிகளை முறியடித்து,புற இனத்தவர்களை விரட்டிவிட்டு
அதன் பின் எதிரிகளை பிடித்து தாவீதிற்கு கையளித்தார்,பல நாடுகளை கடவுள் அவனுக்கு கொடுத்தார்.
சாலமோன் அரசரின் ஆட்சியில் எல்லா அரசர்களும் அவருக்கு பணிந்து பரிசுகளும் காணிக்கையும் அனுப்பினர் , கடவுள் அந்தளவு அவனை ஆசீர்வதித்திருந்தார்
அலெக்ஸாண்டர் கப்பம் பெற்றால் அது மிரட்டல்,சாலமோன் பெற்றால் அது ஆசீர்வாதம்
எப்படி எல்லாம் வார்த்தைகளை பதமாக அன்றே பயன்படுத்தியிருக்கின்றார்கள் பார்த்தீர்களா?
யூதன் என்றால் சும்மாவா?