தனியாக அரசகுமாரன் மட்டும் என்னிடம் பாடம் படிக்க முடியாது, மாசிடோனியாவின் அறிவாளி மாணவர்களை எல்லாம்
அதுவரை நல்ல குடிமகனையும், தத்துவ ஆசிரியர்களையும்,சில மருத்துவர்களையும் (அரிஸ்டாட்டில் சிறந்த மருத்துவரும் கூட),பாடி பில்டர்களையும் உருவாக்கிய அரிஸ்டாட்டில் முதன் முதலாக
வீர விளையாட்டு,ஜிம்னாஸ்டிக், மதம்,அரசியல்,பூகோளம்,வரலாறு என எல்லாவற்றையும் சொல்லி கொடுத்து கொண்டே இருந்தார்,அலக்ஸாண்டர் கவனமாக உள்வாங்கி கொண்டே இருந்தான்
எந்த மாவீரன் ஆனாலும் அவனை உருவாக்க ஒரு ஆசான் வேன்டும், இல்லாவிட்டால் எந்த கொம்பனும்
சாணக்கியன் சமுத்திர குப்தனை உருவாக்கியது போல,மிக கவனமாக அரிஸ்டாட்டில் அலெக்ஸாண்டரை உருவாக்கிகொண்டிருந்தார்
ஒருநாள் அவர் மணமிக்க புகை உருவாக்கி பூஜை செய்தார்,
இந்தியர்கள் மதங்களிலும் உயர்ந்தவர்களா? என்றான் அலெக்ஸாண்டர்
ஒருநாளில் இந்தியாவினை வென்று காட்டுகின்றேன் என
4 ஆண்டுகள் பயிற்சி முடிந்தது, அரிஸ்டாட்டில் தன் கடைசி போதனையினை சொல்லி அனுப்பினார்
"நாட்டு மக்களுக்கு தேவை பாதுகாப்பும்,பொருளாதார நலனும்.அதனை கவனமாக பார்த்துகொள்,மக்களின் அபிமானத்தை ஒரு முறை இழந்துவிட்டால் அவ்வளவுதான்,அந்த அரசு நிலைக்காது
பெரும் வெகுமதி கொடுத்தான் அலெக்ஸாண்டர்,மறுத்து சொன்ன அரிஸ்டாட்டில் சொன்னார், "இது வேண்டாம், நீ வெற்றுபெறும் இடமெல்லாம் என் மாணவன் என சொல் , அதுதான் எனக்கு பெருமை"
எல்லோர் முன்னும் அக்கடிதத்தை படித்தான் பிலிப்,அலெக்ஸாண்டர் பற்றி பெரும் அபிப்பிராயம் அவர் கொண்டிருந்தது அந்த சபைக்கே அறிவிக்கபட்டது
மாமன்னர்தான் பிலிப், ஆனால் தன் மகன்
சபை விவாதித்து முடிவெடுத்தது, அரிஸ்டாட்டில் சொன்னதற்காக அரச பிரதிநிதி மற்றும் முத்திரை காப்பாளன் எனும் பதவியினை கொடுக்கலாம்
பிலிப் மறுபடி சொன்னான், "என் மகன் என்பதற்காக அல்ல,மாறாக
17 வயதில் அரசுபொறுப்பிற்கு வந்தான் அலெக்ஸாண்டர், அரிஸ்டாட்டில் சொன்ன வரிகளை தினமும் நினைத்துகொண்டான், அதே நேரம் அக்கம்பக்கம் அரசுகளையும் கவனித்து கொண்டே இருந்தான்
பிலிப்பிற்கு எப்பொழுதும் போர்களம்,
அதாவது "செயல் தலைவர்" ஆகியிருந்தான் அலெக்ஸாண்டர்.
அப்பொழுது மேடி என்றொரு நாட்டு அரசனுக்கு புத்தி மாறியது, அதாவது அவன் பிலிப்பின் பிரதிநிதியாக அந்நாட்டை ஆண்டான்,
முளைத்தது.பிலிப் பைசாண்டியரோடு மல்லுகட்டி கொண்டிருந்த பொழுது, மாசிடோனியா கோட்டைக்குள் புகுந்து கலகம் செய்வது அவன் திட்டம்
மாசிடோனியாவில் கலகம் ஆரம்பமாயிற்று
அனைவருக்கும் அதிர்ச்சி, அனுபவமில்லா பாலகன் கலவரத்தை அடக்குவதா? முடியுமா?.
அலெக்ஸாண்டர் கொஞ்சமும் அஞ்சவில்லை, குதிரைபடையினை தயார் செய்யுங்கள்,கலவரக்காரருக்கு
மிக துல்லிய தாக்குதல்,மிக அழகான திட்டமிட்ட வியூகம் கொஞ்ச நேரத்தில் கலவரத்தை கட்டுபடுத்தினான்,அதோடு விடவில்லை, தீயினை கட்டுபடுத்தினாலும் அதன் அடியாள வரை புகையும் கரிகட்டை வரை அணைத்து விடவேண்டும் என்ற பாலபாடத்தை
தொடர்ந்த்து அடித்த அடியில் மேடிநாடு அலறிற்று,அந்த சிறிய மன்னனை பிடித்து கட்டி வைத்துவிட்டு தந்தை வந்து உன்னை கொல்வார் என சொல்லிவிட்டு மாசிடோனியாவிற்கு வந்தான்
மாசிடோனியா அசந்து நின்றது, 17 வயதில் இவ்வளவு வீரமா?
வாய்ப்பு அடுத்தாலும் வந்தது,
கலவரங்களை அடக்கி அனுபவம் பெற்று பின்னாளில் உலகினை மிரட்டியவர்கள் அலெக்ஸாண்டர் அவனுக்கு பின்னால் மாவீரன் நெப்போலியன்
தூரத்தில் இருந்த பிலிப்பிற்கு செய்தி சென்றது,பெரும் காரியத்தை அலெக்ஸாண்டர் செய்திருக்கின்றான்,
பெருமையும் மகிழ்வும் கொண்டு போரிட்டான் பிலிப்,மகன் சாதித்து விட்டான் என்பதை விட தந்தைக்கு என்ன பெருமை வேண்டும்?
எல்லாம் ஒழுங்காக நடந்தது, பிலிப் அடிக்கடி போரிட செல்ல
கொஞ்சநாளாக பிலிப் போருக்கு செல்லவில்லை,அமைதியாக மாசிடோனியாவில் இருந்தான்
அலெக்ஸாண்டருக்கு தந்தையின் மவுனம் பிடிபடவில்லை,ஆனால் ஏதோ நடக்கி்றது என்பது மட்டும் புரிந்தது
தாயிடம் கேட்டால் தெரியும் என காண சென்றான்,அவனுக்கு தாய்பாசம் அதிகம்
அவள் அலெக்ஸாண்டரை பார்த்து வருத்ததுடன் சொன்னாள்
"உன் தந்தை கிளியோபாட்ரா என்பவளை திருமணம் செய்து கொள்ளபோகின்றாராம்"
அலெக்ஸாண்டருக்கு மகா வருத்தமும் கோபமும் கலந்து வந்தது,தாய்க்கும் தந்தைக்கும் ஆகாது என அவனுக்கு தெரியும், ஆனால் தாய் கலங்குவதை
ஒலிம்பியஸ் அடுத்து சொன்னதில்தான் அதிர்ந்தான் அலெக்ஸாண்டர்
இது இத்தோடு முடியாது,உன் தந்தை கொண்டிருக்கும் மயக்கத்தை பார்த்தால்,அவள் வாரிசை அரசனாக்கலாம் ,
தலை சுற்றியது அலெக்ஸாண்டருக்கு
அரச குடும்பம் என்றால் என்ன என்பதும்,அது விஷ கிரீடம் என்பதும் அவனுக்கு புரிந்தது
தாயே தந்தை உன்னை கொல்ல வருவார் என சொன்ன
ஒலிம்பியசின் கணக்கு தப்பவில்லை, அந்த விழா நடந்தது அது மணவிழா அல்ல , கிளியோபாட்ரா எனும் "சின்னம்மாவிற்கு" நடந்த வரவேற்பு விழா.
அலெக்ஸாண்டர் வாழ்வில் நடந்த அவமானமும்,அவன் வாழ்வில் அவன் மறக்கவே முடியாததும், வரலாற்றில் ஒரே ஒரு இடத்தில் அவன் அடங்கிபோனதும் அங்குதான் நடந்தது
(தொடரும்)