மாமனிதன் ஆபிரஹாம் லிங்கன் அவர்கள் அடிமை இல்லை என அறிவித்தார்,அதனால் கொல்லவும் பட்டார்
அன்றே உள்நாட்டு போரால் அமெரிக்க உடைந்திருக்க வேண்டிய நிலையில் இருந்தது, அதனை எல்லாம் காத்து இன்று ஒரே அமெரிக்காவாக இருக்க காரணம் லிங்கனே,ஆனாலும் இனவெறி அவரை கொன்றது
வெள்ளையன் அதிகார வர்க்கம் , ஆயுத போராட்டம் வெற்றிபெறா நிலையில் தவித்து நின்றனர் கருப்பர்கள்
அவர்களுக்கு கிடைத்த மாமணிதான் மார்ட்டின் லுத்தர் கிங்.
அவர் ஒரு பாதிரி ஆனால் சிந்திக்க தெரிந்த பாதிரி
சக மனிதனை மனிதனாக கூட மதிக்காத நீங்கள் எப்படி உன்னத கிறிஸ்தவராக முடியும் என பகிரங்க கேள்விகளை எழுப்பினார்
அப்பொழுது அவர் பெயர் மைக்கேல் கிங்,ஐரோப்பாவில் போப்பினை எதிர்த்து புரட்சி செய்த
ஆனாலும் பலனில்லை,இந்த உலகில் யாரின் வழி அமைதியான ஆனால் வலுவான போராட்ட வழி என அவர் தேடியபொழுது ஒன்றும் கிட்டவில்லை
அமைதி வழி என் வழி என போராடினார்,அப்பொழுது அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது
அடிபடுவது ஒன்றும் கருப்பருக்கு புதிதல்ல,ஆனால் மார்ட்டின் லுத்தர் காந்தி வழியில் எதிர்ப்பு
போக்குவரத்து கழக கருப்பர்கள் இச்சிக்கல் தீரும்வரை பணிக்கு வரமாட்டார்கள்
அமெரிக்க அரசு என்ன பழனிச்சாமி அரசா? கண்டவனையும் போட்டு பேருந்தை இயக்க? போராட்டம் பரவ அமெரிக்கா ஸ்தம்பித்தது
விஷயம் விவகாரமாகி வேறுவழியின்றி கருப்பர் கோரிக்கை ஏற்கபட்டு கருப்பர்கள் பேருந்தில்
இந்த உற்சாகத்தில் போராட ஆரம்பித்தார் மார்ட்டின் லூத்தர்,எனக்கொரு கனவு உண்டு,இதே அமெரிக்காவில் கருப்பர்கள் சமஉரிமை பெற்று வாழவேண்டும்,நாமும் மனிதர்களே என அவர் உருகி கேட்டது உலக மக்கள் இதயத்தை எல்லாம் உசுப்பியது
"இந்த போராட்டத்தில் இறங்கும்பொழுதே எனக்கு சாவு நிச்சயம் என தெரியும்,ஆபிரகாம் லிங்கனையே இனவெறிக்கு கொன்ற தேசம் என்னை எப்படி விடும்?"என அமைதியாக சொன்னார் மார்ட்டின் லுத்தர்
காந்திய வழியில் அவரின் போராட்டம் பெருகியது,அமெரிக்க அரசு இறங்கி வந்தது, கருப்பருக்கு சில சலுகைகள் கிடைத்தன
1964ல் நோபல் பரிசும் அவருக்கு கிடைத்தது,காந்திய கொள்கை பெற்று கொடுத்த நோபல் அது.
பொறுக்காத இனவெறி வெள்ளையன் 1968ல் அவரை சுட்டு கொன்றான்.
லிங்கன்,காந்தி வரிசையில் மானிடத்திற்காய் மக்களை நேசித்த பாவத்திற்காய் அவன் செத்தபொழுது வயது வெறும் 39
அமெரிக்காவிலும் கருப்பர்களுக்கு உரிமைகள் கிடைக்க தொடங்கின,முகமது அலி,மைக்கேல் ஜாக்சன் போன்றோர் வெளி
அந்த லுத்தர் கொடுத்த சக்தியில்தான் அமெரிக்க வரலாற்றில் முதல் கருப்பு அதிபராக ஒபாமா பின்னாளில் வந்தார்
நிச்சயம் 1950கூட அடுத்த 50 ஆண்டுகளில் கருப்பர் அமெரிக்காவினை ஆள்வார் என யாரும் நம்பி இருக்க முடியாது
ஆனால் அஹிம்சையான போராட்டம் மாபெரும் திருப்பத்தை கொடுத்தது
மிக சிறிய வயதிலே போராட வந்து,39 வயதிற்குள் சாதித்துவிட்டு அம்மக்களுக்காக செத்த அந்த மார்ட்டின் லுத்தர் இந்த உலகில் விட்டு சென்ற அடையாளம் வலுவானது, கருப்பர்களை அடையாளபடுத்தி உரிமை கொடுத்த
அவருக்கு வழிகாட்டியது காந்தி என்பதில் ஒவ்வொரு இந்தியனும் பெருமைபடலாம்
காந்தியின் கொள்கைகள் அவ்வளவு உயர்வானவை, உன்னதமானவை என உலகம் காந்திக்கு பின் கண்டது அவரில்தான்
அந்த மாமனிதனுக்கு இன்று நினைவுநாள்,ஒடுக்கபட்ட மக்களுக்காக போராடுகின்றோம் என
ஒடுக்கபட்டோருக்கான தலைவன் எப்படி இருக்க வேண்டும்,எப்படி தொலைநோக்கோடு சிந்திக்க வேண்டும் என சொன்னவர் அவர், அப்படி நல்ல தலைவன் பின் சென்றால் அமைதியான வளமான நாட்டை உருவாக்க பங்களிப்பினை செய்ய முடியும் என
இன்று அந்நாடு உச்சத்தில் இருக்கின்றது
உரிமைக்காக துப்பாக்கி தூக்கிய தேசங்கள் அழிந்து கிடக்கின்றது அதுவும் பக்கத்து தீவே சாட்சி
நிச்சயம் லுத்தர் பிரிவினை பேசவில்லை,எங்களை தனியாக விடு என கத்தவில்லை மாறாக எங்களுக்கும் உரிமை கொடுங்கள்
அப்படிபட்ட தலைவர்களே இன்று உலகெங்கிலும் உள்ள ஒடுக்கபட்டோருக்கு தேவை, குறிப்பாக இந்தியாவில் நான் தலித் தலைவன்,போராளி, இனமான போராளி என சொல்லிகொள்பவர்கள் நல்லவர்களாக இருந்தால் அவர்கள் நோக்கம் உன்னதமாக
ஆனால் எங்காவது நீங்கள் இந்த கும்பல்களிடம் லுத்தர் படம் பார்க்கமுடியுமா?
கார்ல் மார்க்ஸ்,ஏங்கல்ஸ்,சே என பல வெளிநாட்டு தலைவர்கள் இருக்கும் படத்தில் நிச்சயம் லுத்தர் படமும் இருக்க வேண்டும் ஆனால் வைக்கமாட்டார்கள்
வரலாற்றில் மிகபெரும் தடம் பதித்த அந்த அமெரிக்க காந்திக்கு இன்று பிறந்த நாள்,ஆழ்ந்த அஞ்சலிகள்..