கிழக்கிந்திய கம்பெனி என்பது கொள்ளை அடிக்க வந்தது, அடித்தது வரி பிடுங்குவதை தவிர,அவர்கள் கம்பெனி விவகாரம்
இந்திய ஆட்சி 1857ல் பிரிட்டானியர் வசம் சென்றபின் ஓரளவு மக்கள் நல திட்டங்கள் வந்தன,அந்த பொறியாளனும் அப்பொழுது உருவாகி இருந்தான், அவன் பெயர் பென்னிகுவிக்
அவன் தந்தை ராணுவ அதிகாரி, பெனன்னிகுவிக் ராணுவத்திற்கான பொறியாளராக உருவாக்கபட்டான்,
சென்னை மாகாணத்தின் பொதுபணிதுறை அதிகாரியாக அவனை ஆங்கில அரசு அமர்த்திற்று
அன்று திருச்சி,மதுரை எல்லாம் வரிவசூல் மையங்கள், அப்படித்தான் பென்னிகுவிக் மதுரை பக்கம் வந்தான்,அது ஒரு பஞ்சகாலம்
ஒரு ஆட்சியாளனாக அவர்களுக்கு ஏதாவது செய்ய துடித்தான்,ஆம் அவர்களுக்கு தேவை நீர்,அதற்கொரு பெரும் ஆதாரம்,என்ன செய்யலாம்
காடு மேடெல்லாம் அலைந்தான்,
இயற்கைக்கே கிழக்கே வர முடியாதவாறு ஆண்டவன் படைத்திருந்தான்,ஆண்டவனின் கட்டளையினை மீற அவனைபோல் இளகிய மனம் கொண்ட பென்னிகுவிக் முடிவெடுத்தான்
இரு ஆறுகளும் இணையும் இடத்தில் அணைகட்ட வேண்டும் அதை கிழக்கே இருக்கும் பக்கம் திருப்ப வேண்டும்
அவன் மனம் சொன்னதே தவிர நிலைமை சிக்கலானது,மலை உச்சியில் அணைகட்ட வேண்டும்
அந்த மழைபிடிப்பு பகுதி, இன்னபிற பகுதி திருவாங்கூர் மன்னனிடம் இருந்தது,அவனிடம் 999 வருடம் ஒப்பந்தம் போட்டு வாங்குவதே பெரும்பாடாயிற்று
மலை உச்சியில் அந்த மழை,கொசுகடி,அட்டை,குளிர், காட்டு மிருகம்,நோய்கள் என இன்னும் ஏகபட்ட
அதைவிட முக்கியம் கட்டிய அணையிலிருந்து தண்ணீரை கொண்டுவர வழியில்லை, வடியவிட்டால் வேறு எங்கோ செல்லும்
ஆம் பாறையினை துளையிட்டு அதன் மூலம் வைகையில் கலக்க செய்ய வேண்டும்
நினைத்து பார்த்தால் மாபெரும் சவால் அது,மலைமேல் ஒரு அணைகட்டுவது நினைத்து பார்க்க
ஆனால் மதுரை,ராமநாதபுர மக்கள் நிலமையினை நினைத்த பென்னிகுவிக் அதை வாழ்வின் கர்மமாகவே கருதினான்
ஆங்கில அரசு முதலில் சம்மதிக்கவில்லை,ஆயினும் பென்னிகுவிக் விடவில்லை
ஆங்கில அரசு கொடுத்த நிதியில் வேலை தொடங்கியது,கடும் சிரமம்.ஒரு கல்லை எடுத்து கொண்டு அல்லது ஒரு சட்டி சுண்ணாம்பினை எடுத்து மலைஏறுங்கள் புரியும்
இரு ஆண்டுகள் வேலை நடந்தது,
டைபாய்டு மலேரியா என சாவு ஒருபுறம் கரைந்து கொண்டிருந்த பணம் ஒருபுறம் என சவால் வந்தது
அதைவிட சவால் கனமழை உருவில் வந்தது,ஒரே நாள் இரவில் அணையினை தரைமட்டமாக்கியது வெள்ளம்
உடல் சோர்ந்த பென்னிகுவிக் மனமும் சோர்ந்தான்,ஆனாலும் அந்த வெள்ளம் அவனுக்கு ஒரு
"இதுதான் வேண்டும் இந்த வெள்ளம்தான் வேண்டும்,இந்த மாபெரும் வெள்ளம் மதுரை பக்கம் பாயவேண்டும்.
ஏதோ சிறிய ஓடை என கணக்கிட்டேன் இல்லை இது மாபெரும் ஆறாக இருக்கின்றது, போதும் 5 மாவட்ட மக்களுக்கு தாராளமாய் போதும்
ஆனால் அணை மிக வலுவாக இருக்க வேண்டும்,
ஆனால் ஆங்கில அரசு மறுத்தது, சாத்தியமில்லா விஷயத்தில் பென்னிகுவிக் இறங்கி அரசு பணத்தை வீணாக்கியதாக குற்றசாட்டு எழுந்தது
(இப்போதுள்ள அரசியல்வாதிகள் என்றால் அணை இடிய இடிய கட்டி கொண்டே இருந்திருப்பார்கள், சம்பாதித்திருப்பார்கள்)
எதற்கு ஓய்வெடுக்கவா? அல்ல தன் சொத்துக்களை விற்றான் போதா குறைக்கு கையேந்தி பிச்சை எடுத்தான்
ஆம் எங்கிருந்தோ வந்த அவனுக்கு இந்த மக்களின் கண்ணீர் அப்படி பாதித்திருக்கின்றது ,
அந்த பணத்தோடு வந்த பென்னிகுவிக் மறுபடியும் அந்த இடத்தில் அணைகட்டினான், இம்முறை மிக உறுதியாக கட்டினான்
அந்த சுரங்கத்தையும் வெட்டினான்
இதற்கெல்லாம் அவன் செய்த செலவும்,பட்ட சிரமங்களும்
தன் வேள்வியில் வென்று 1895ம் வருடம் அந்த அணையினை மக்களுக்கு கொடுத்தான்,ஆம் நம் மக்களுக்கே கொடுத்தான்
இறுதியாக அவன் கனவுபடியே முல்லையும்,பெரியாறும் கலந்து வைகையில் கலந்தது
ஆம் 5 மாவட்ட மக்கள் அவனால் இன்றும் வாழ்கின்றனர்,இயேசு தொட்ட உண்மையான கிறிஸ்தவ மனம் இதுதான்,இதுவேதான்
அவன் யார்? அவனுக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? வந்தான் வறுமையினை பார்த்தான் அத்தோடு சென்றிருக்கலாம்,
அவன் சொன்னது இதுதான்
"பணம் என்னிடம் இருந்தால் என் தலைமுறை வாழும்,அதை நான் இக்காரியத்திற்கு செலவிட்டால் ஓராயிரம் தலைமுறை தொடர்ந்து வாழும்"
உள்ளத்தில் நல்ல உள்ளம் என்பது இதுதான்
அந்த அணை இன்றும் தேக்கடி அருகே கம்பீரமாக நின்று மதுரை பெல்ட்டினை தாங்கி நிற்கின்றது, அவனின் நியாயமான தியாகமான சொந்த பணம் என்பதாலோ என்னவோ
இன்னும் 300 ஆண்டுகாலம் அது அசையாது,500 ஆண்டுகளுக்கு பின் காலம் மாறினாலும் முல்லைபெரியாறு தமிழகத்திற்கானது என்ற அவனின் வெற்றி மாறாதது
நானும் மனிதன் அவர்களும் மனிதர்கள்,சக மனிதர்கள் வாழ என்னால் முடிந்ததை செய்வேன்
இயற்கை வலிமை,கேரள சதி என எல்லாவற்றையும் தாண்டி அந்த அணை நிற்கின்றது என்றால் பென்னிகுவிக்கின் தர்ம சக்திக்கும் பங்கு இருக்கின்றது, முழு மனிதநேயத்தில் உருவான அணை அது
இதனால் தனக்கென்ன லாபம் என அவன் யோசித்தானா?
அவன் சொத்தை எல்லாம் விற்றபின் அவனின் வாரிசுகளும் வஉசி வாரிசு போலவே தவித்தன, மிக சமீபத்தில்தான் அவரின் பேரன் இந்தியா வந்து அணையினையும் அவருக்கு மக்கள் வைத்த மணிமண்டபம், சிலை மற்றும் அபிமானத்தை எல்லாம் கண்டான்
தன் தாத்தா செய்த காரியத்திற்காக வீடெல்லாம் படம் வைத்து,ஊரெல்லாம் சிலைவைத்து கொண்டாடுகின்றார்கள் என்பதை தவிர என்ன பெருமை ஒரு பேரனுக்கு வேண்டும்?
நல்ல தாத்தா சேர்த்து வைக்க வேண்டியது இந்த பெருமையினைத்தான்
பென்னிகுவிக் ஒரு நல்ல கிறிஸ்தவன்,அவனின் பேரன் அதில் பெருமை அடைகின்றான்.
நல்ல கிறிஸ்தவன் கல்லூரி நடத்தி சம்பாதிப்பானா? இல்லை ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் அணைகட்டுவானா?
பென்னிகுவிக்கே சாட்சி,இன்று அவனின் பிறந்த நாள்
வறண்ட பகுதி அவனால் வளம்பெற்றது,இப்படித்தான் கன்னியாகுமரி பக்கம் மிச்சிகன் எனும் வெள்ளையன் வந்து பேச்சிபாறை அணைகட்டி அதை செழிக்க வைத்தான்
பென்னிகுவிக்கினை நினைக்கும் பொழுதெல்லாம் ராதாபுரம் பக்கம் அப்படி ஒருவன் வராமலே போய்விட்டானே என்ற ஏக்கமே வரும்
அவ்வகையில் தேனி முதல் சிவகங்கை வரையிலான
உறுதியாக சொல்லலாம், வைகையினை தோற்றுவித்தவன் சிவன் என புராணம் சொல்லும், மீனாட்சிக்கு தாலிகட்ட வந்த சொக்கன்,தன் பூதகணங்கள் அருந்த அதை உருவாக்கினானாம்
ஆனால் பூதகணங்கள் திரும்பியபின் வைகை சுருங்கிற்று
ஆம் தன் மக்களை எல்லாம் வறுமையில் தவிக்கவிட்டு,தன் சொத்தினை எல்லாம் இப்பகுதி மக்களுக்காக செலவழித்த அவன் நிச்சயம் தெய்வமே
அந்த உண்மையான மனித நேய மகானுக்கு,பெரும் மனம் படைத்த
அவனின் அந்த மாபெரும் பொதுநல சிந்தனையும்,அந்த தொலைநோக்கும் உறுதியும் சிலாகிக்க கூடியது,அவன் வரலாறேல்லாம் ஒவ்வொரு அரசியல்வாதியும் பதவி ஏற்கும் முன் படிக்க வேண்டிய சாசனம்
குறிப்பாக பொதுபணித்துறை பொறுப்பாளர்கள்,ஆம் அதற்கு இலக்கணம் வகுத்தது அவனே
தேனிபக்கம் ஒவ்வொருவர் வீட்டிலும் அவன் படத்தை வைத்து வணங்குகின்றார்கள், தெய்வமாய் கொண்டாடுகின்றார்கள்
மதுரை இருக்கும் வரை மீனாட்சியம்மன் ஆலயம் நிலைத்திருப்பது போல் அவனும் நிலைத்திருப்பான்
உண்மையான மானுட நேயத்திற்கு மதம்,இனம்,மொழி, சாதி என எதுவுமில்லை என்பதை நிரூபித்தவன் பென்னிகுவிக்
உலகெல்லாம் பொங்கல் கொண்டாடும் நேரம்,தேனி மக்கள் அந்த தெய்வத்திற்காக கொண்டாடுகின்றார்கள்,நிச்சயம் அவனே அவர்களின் காவல் தெய்வம்.